Authors Posts by admin

admin

7 POSTS 0 COMMENTS

0 2068

முதலெனப்படுவது நிலமும் பொழுதும் என்றுரைத்த  தொல்காப்பியர், அந்நிலத்தில் காடு, நாடு,  மலை  மற்றும் கடலை அடக்குகிறார். தொல்காப்பியரின் இத்திணைப்பகுப்பை, நவீன  சூழல் அறிவியலாளர்கள், ‘சூழல் மண்டலம்’ என்ற இயற்கை அலகின் கீழ் பகுக்கிறார்கள். பல்லுயிரியப் பரவலின் ஆதாரமான  இச்சூழல் மண்டலங்கள் நாகரிக சமூகத்தின் பொருளாதார நலன்களுக்காக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. காடழிந்த மொட்டை நிலத்தை, அமிலமடைந்த அசுத்தக் கடலை எத்திணையின் கீழ் வைப்பது என்ற கேள்விக்கு இன்று நம்மிடம் விடையில்லை. நமது முந்தைய தலைமுறையினர் பார்த்தும் இரசித்தும் வந்த பல உயிரினங்கள் இன்றைய தலைமுறையினருக்கு நம்பமுடியாத செய்தியாக உள்ளது .உதாரணமாக வட இந்தியாவிலிருந்து குமரி முனை வரை விரவி வாழ்ந்திருந்த சிவிங்கிப்புலிகள் இன்று இந்தியத்துணைக்கண்டத்திலிருந்தே முற்றாக மறைந்துவிட்டது. சோலைமந்தி, மலபார் புனுகுப்பூனை, பாண்டிச்சேரி சுறா போன்ற பல்வேறு உயிரினங்கள் இதுபோன்றதொரு அழிவுப் பாதையில் உள்ளன. இது ஒரு பேரவலம். இந்த அலவத்திற்கு மற்றுமொரு உதாரணம் கானமயில்.

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

 

0 1657

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசு நிறுவனங்களின் பொறுப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, அரசு, தனது கடமையில் இருந்து தவறுவது தொடர்ந்த சூழலில், சில தனிமனித முயற்சிகள் தவிர்க்க முடியாத பங்களிப்பாக மாறியுள்ளது. சூழலியல் குறித்த அக்கறை, செயல்பாடு என்பதெல்லாம் மெத்தப்படித்த அறிவாளிகளின், மேட்டுக்குடியினரின் களமாக கருதும் போக்கு பொதுவாக உள்ளது. இவற்றை மீறி எளியோர்களின் பங்களிப்பு உள்ளது என்பதோடு அதுவே முதன்மைத் தேவை என்பதை நமக்கு உணர்த்துகிறார் புதுவை தேங்காய்த்திட்டைச் சேர்ந்த இளைஞர் செல்வமணிகண்டன்.

கடந்த 10 வருடங்களாக புதுவையில் கண்டல்திட்டுகளை உருவாக்குவதிலும், அதை பராமரிப்பதிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அவரது பங்களிப்பை பாராட்டி பெங்களூரில் உள்ள புதிய சர்வதேச கிறித்தவப் பல்கலைக்கழகம் (நியூ இன்டர்நேஷ்னல் கிரிஷ்டியன் யுனிவர்சிட்டி) கௌரவ  முனைவர் பட்டத்தை அளித்துள்ளது. மத்திய அரசு தேசிய இளைஞர் விருதையும் வழங்கியுள்ளது.

இயற்கை வளப்பேணல் என்றாலே மழைகாடுகள் குறித்தும்,புலிகள் காப்புத் திட்டம் போன்ற போன்ற பிரபலமான கருத்தாக்கமே நம்மிடம் மேலோங்கி உள்ளன. அவற்றை மீறி இயற்கை வளப்பேணல் என்பது நாம் வாழும் பகுதியை சுற்றியுள்ள கோயில் காடுகள், மணற்குன்றுகள், சதுப்பு நிலங்கள், நன்னீர் மற்றும் உவர் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதையும் உள்ளடக்கியதே.  ஏனெனில், இவற்றை சார்ந்தே வறிய மக்களின் வாழ்வியலும் இயங்குகிறது.   புதுச்சேரியில் உள்ள கண்டல்திட்டுக்கள், சமூகக்காடுகள் வளர்ப்பில் ஒரு முன்மாதிரி ஆகும். இதில் செல்வமணிகண்டன் போன்ற எளியவர்களின் பங்களிப்பு அளப்பரியது. பெரிய கல்வி பின்புலம் இல்லாவிட்டாலும் அவரது கள அனுபவமே சூழலியல் குறித்த அறிவை அவருக்கு வழங்கியுள்ளது.. அவருடனான நீண்ட உரையாடலில் இருந்து…

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

0 1881

நாற்பது வருடங்களுக்கு முன்பாக உலகை மிரட்டிய அவ்வெள்ளைச்சுறாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. பீட்டர் பென்கிலியின் நாவலைத் தழுவி ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கால் (ஸ்பீல்பெர்க்கின் முதல் படம்!) எழுபதுகளில்  எடுக்கப்பட்ட “ஜாவ்ஸ்” திரைப்படத்தின் மையப்பாத்திரமான வெள்ளைச் சுறாவானது ரசிகர்களிடம் ஏற்படுத்திய பீதியுணர்வானது அதுகாறும் சுறாக்கள் மீதான மனிதர்கள் கொண்ட அச்சவுணர்வின் வெளிப்பாடாகும். ஆனால் நிலவுகிற இன்றைய எதார்த்த சூழலில் நிலைமை தலைகீழாக உள்ளது. மனிதர்கள் கையால் சுறாக்கள் கொல்லப்படாமல் இருக்கவும் அதைப் பாதுகாக்கவும் பெருமுயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

0 1874

ஆதிவாசி, காட்டுவாசி, முதுகுடி, பழங்குடி, வனவாசி, மலைமக்கள் மற்றும் இதர பல்வேறு பெயர்களால் அடையாளப்படுத்தப்படும் இம்மக்களே இம்மண்ணின் பூர்வகுடிகள். இவர்கள் நம் அனைவரின் மூதாதையர் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. பழங்குடிகள் என்றாலே, இலை தழைகளை கட்டிக்கொண்டு, அரைகுறை ஆடையுடன், விலங்குகளின் எலும்புகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, “கைய்யோ, முய்யோ” என்று பேசுவதும். அரைகுறை ஆடையுடன் நடனமாடுவதும்தான்அவர்களுக்கான அடையாளமாக நம் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. இதில் சினிமாவிற்குப் பெரும் பங்குண்டு. நகரத்தில் உள்ளவர்களைப் போல நவ-நாகரிக உடையணிந்த ஒருவரை “இவரப் பாத்தா பழங்குடி போல இல்லையே” என்று கருத்து கூறும்  மனப்பான்மையே நம்மில் பலருக்கும் உள்ளது. பல்வேறு சமூகங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள்கூட இவ்வகையான மனப்பான்மைக்கு விதிவிலக்கல்ல. பழங்குடிகள் என்றாலே அடைப்புக்குறிகள் சொல்வதைப்போல ஏதோ ஒன்றை நம் சமூகம் கற்பனை செய்து வைத்துள்ளது. தனக்கு மேலும் கீழும் எப்போதும் ஒரு சாதியிருப்பதை ஏற்கும் நமது சாதியமனப்பான்மையில் பழங்குடிகள் குறித்த அதீத கற்பனைகள் தவிர்க்க முடியாததே. பொதுவெளி சமூகத்தவர்கள் மத்தியில் பழங்குடிகள் குறித்துப் புனைந்து வைத்துள்ள இவ்வாறான அபத்தங்களைக் களைவதே, பழங்குடிகளுக்கு ஆதரவான ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்கான முதன்மைப் பணியாகும்.

பழங்குடிகள் என்பவர்கள் வேறுயாருமல்ல, நம்மைப் போலவே வாழும் சகமனிதர்கள். எளிமையாகச் சொல்வதென்றால் இயற்கையோடு வாழக் கற்றுக்கொண்டவர்கள், செயற்கையான வாழக்கை முறையை விரும்பாதவர்கள், நம்மைப் போல் இன்னும் முழுமையாக சீர்கெடாதவர்கள். ஆனால், நாமோ இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையில் இருந்து வெகுதூரம் விலகிப் பயணித்துவிட்டு, இயற்கையை அழித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நோக்கையும் நியாயமுடையதாக நம்மைநாமே நம்பவைத்துக்கொண்டோம். நமது வாழ்வியலை நாமே சீர்குலைத்தது போதாது என்று பழங்குடிகளின் வாழ்வையும் சேர்த்தே அழித்து வருகிறோம் என்பதே யதார்த்தம்.

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

0 1590

அறுபதுகளில் வேலூரில் வசித்தபோது, விரிஞ்சிபுரம் அருகிலிருந்த பொன்னிநதிக்கு நாங்கள் போவதுண்டு. குழந்தைகள் மணிக்கணக்கில் மணலிலும், நீரிலும் விளையாடித் திளைப்பார்கள். இருள்சூழ ஆரம்பிக்கும் போது வீடு திரும்புவோம். அண்மையில் அங்கு சென்ற போது அந்நதியை கண்டுபிடிப்பதே சிரமமாக இருந்தது. தமிழகத்தின் பல ஆறுகள் இவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றன. ஊழிக்காலமாக இருந்த நீரோட்டம் கடந்த சில பத்தாண்டுகளில் நின்று, பூமியின் மேலே ஒரு தழும்புபோல ஆறுகள் சீரழிந்துவிட்டன. ஆடிப்பதினெட்டு கொண்டாட லாரியில்த ண்ணீரை வாங்கி ஆற்றில் உள்ள குட்டைகளில் விடும்நிலை. ஏன்?

பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் மனிதன் காடுகளை அழித்து, தொடர்ந்து செய்த திருத்த முடியாத சில தவறுகள் தான் இந்நிலைக்குக் காரணம். வெட்டுமரங்களுக்காகவும், சாலைகள்போடவும், அணைகள்கட்டவும், கனிமங்களைஎடுக்கவும், தேயிலை, காப்பி போன்ற பணப்பயிர்களுக்காகவும் கானகங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. மனிதர் நுழைந்திராத காடுகளில் எந்திரங்கள் புகுந்து வேலை செய்ய ஆரம்பித்தன. இதுவரை மனிதர் காலடிப்படாத வனப்பகுதிகளை புதியபாதைகள் ஆக்கிரமித்துள்ளன. தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைப் போர்த்தியிருந்த முதுபெரும் மழைக்காடுகளில் இப்போது எஞ்சியிருப்பது ஆறேவிழுக்காடு. வெட்டுமரத் தொழிலும் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்ற தோட்டக்கால் தொழில்களும், அணைக்கட்டுகளும், சாலைகளும் காடுகளைக் காவுகொண்டுவிட்டன. கானுறை உயிர்களின் வாழிடங்கள் துண்டாடப்பட்டு, குன்றிக்குறுகி சிறு சிறு தீவுகளாகிவிட்டன. அங்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் யானை, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் அவ்வப்போது, அருகாமையிலிருக்கும் மனிதர்கள் வசிக்குமிடங்களுக்குள் வரும்போது பிரச்சனை ஏற்படுகிறது.

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

0 1621

அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாத்தியில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் ஒரு கிராமம். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து, நமது தொலைகாட்சிகள் சொல்லும் செய்திகள் பாணியில் ’அட்டகாசம்’ பண்ணிக்கொண்டிருப்பதாக கான் துறையினருக்கு ஒரு தகவல் வந்து சேர்கிறது. வாழிடத்தை இழந்துக்கொண்டிருக்கும் அந்த யானைக்கூட்டத்தை விரட்டிகொண்டே செல்கின்றனர் கான் துறையினர். அவை பிரம்மபுத்திரா நதியில் இறங்கி ஓர் ஆற்றிடைத் தீவுக்குள் இருந்த காட்டுக்குள் புகுந்துவிடுகிறது. அக்காட்டினை பார்த்த கான் துறையினர் திகைத்து விடுகின்றனர். ஏனென்றால் இதுவரை இப்படியொரு காடு இருப்பதாக அவர்களுடைய வரைபடத்தில் எந்த பதிவும் இல்லை.

1360 ஏக்கர் பரப்பளவுள்ள இக்காடு, எப்படி இங்கு திடீரென முளைத்தது? அது மட்டுமா, பல சிறுவிலங்குகள் உள்ளூர் பறவைகளோடு வலசைப் பறவைகள், கடமான்கள், அரிய காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் யானைகள் வசிக்கும் காடாகவும் இது எப்படி மாறியது? கான் துறையினரின் வியப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய பதிவேட்டில் இந்த தீவு வெறும் மணல் திட்டாகத்தான் பதிவாகியிருந்தது. உண்மைதான். இத்தீவு கடந்த 1979 வரை ஒரு மணல் திட்டாகத்தான் இருந்தது.

இம்மணல் திட்டு காடாக மாறியதற்கு, ஒரு தனி மனிதரின் உழைப்புதான் காரணம் என்பது அதைவிட வியப்பளிக்கும் ஒரு செய்தி. ஜாதவ் பாயேங் என்பது அம்மனிதரின் பெயர். அவருடைய செல்லப் பெயரான ‘மொலாய்’ என்ற பெயரில்தான் அக்காடு இன்று ‘மொலாய் காடு’ என்று அழைக்கப்படுகிறது.

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

0 1496

RANDOM POSTS

0 2068
முதலெனப்படுவது நிலமும் பொழுதும் என்றுரைத்த  தொல்காப்பியர், அந்நிலத்தில் காடு, நாடு,  மலை  மற்றும் கடலை அடக்குகிறார். தொல்காப்பியரின் இத்திணைப்பகுப்பை, நவீன  சூழல் அறிவியலாளர்கள், ‘சூழல் மண்டலம்’ என்ற இயற்கை அலகின் கீழ் பகுக்கிறார்கள்....