Biography

மிக்காயேல் ஃபெரியே

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மிக்காயேல் ஃபெரியே, குறிப்பிடத்தக்க நாவலாசிரியர், கட்டுரையாளர். இவருடைய பாட்டி இந்தியர், தாத்தா மொரீஷியர். பிரான்ஸில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர். ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தன் இளம் வயதைக் கழித்து, பாரீஸின் புகழ்மிகு சொர்போன் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஜப்பான், பிரான்ஸ் என இருவேறு நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக இவருடைய புதினங்கள், கட்டுரைகள் முதலியப் படைப்புகள் திகழ்கின்றன. இப்பண்பாட்டுக் கலவைகளையும், இசை, தத்துவம், கலை விமர்சனம் ஆகிய பன்முகத்தன்மையையும் காணமுடிகிறது. பல்வேறு இலக்கியப் பரிசுகளைப் பெற்றுள்ள ஃபெரியே 2012ஆம் ஆண்டு வெளியிட்ட நூலான ‘‘ஃபுக்குஷிமா” வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.