"மாடாக் குழி" -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Wednesday, 03 August 2011 19:54
- Written by editor
ட்ரட்ஸ்கி மருது இந்தியாவின் மிக முக்கியமான ஒவியர்களில் ஒருவர். ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் . 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.
இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு முன்னோடியாக இருக்கும் இவர் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார் . உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்தும், எழுதியும் வருகிறார்.
மருது அவர்கள் தன் பயணத்தின் போது சந்தித்த காட்சிகளையும், மனிதர்களையும் பற்றி வரும் வாரங்களில் " மாடாக் குழி " என்னும் தலைப்பில் தடாகத்தின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அனைத்து கட்டுரைகளையும் படிக்க ...






