பம்பரமும் தோற்கும் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 06:06
- Written by editor
என் ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள் என்னுடைய வாழ்வில் பெரும் பகுதியில் நிறம்பி இருப்பவர்கள் . சிற்பி தனபால் அவர்களை என் தந்தை 1950 களின் கடைசியில் சந்தித்தது யதார்த்தமாகத் தான். என் தந்தையின் நண்பர் மூலம் அச்சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
பின்னால் 60களின் கடைசியில் மந்தைவெளியில் இருந்த தாத்தா சினிமா கதாசிரியர் சோலைமலை அவர்கள் தனது வீட்டிற்கு இரண்டு தெரு அடுத்து வசித்த தனபால் மாஸ்டரை சந்திக்க வைத்தார்.
நான் தனபால் மாஸ்டரை சந்தித்த நாள் பின், எனக்கு ஓவிய ஆசிரியராக இருந்த R.B. பாஸ்கரனுக்கும் சிற்பி தனபால் அவர்களின் மகளுக்கும் திருமணம் நடந்து இரண்டாம் நாள்: நான் தனபால் மாஸ்டரை சந்தித்த போது அவருக்கு அருகில் ஆதியிம், கண்ணியப்பனும் இருக்கிறார்கள். அப்போது அவர்களைத் எனக்கு தெரியாது. தனபால் மாஸ்டரின் துனைவியார் எனது பெரியப்பா சூரிய நாராயணத்தேவருக்கு அடுத்த வீட்டுக்காரர். பெரியகுளத்தில் சூரியநாராயணத்தேவர் நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனின் தந்தை. சென்னை வரும் போதெல்லாம் சகோதரர் எஸ்.எஸ். ஆரை சந்தித்துத் தங்கிச் செல்லும் போது ஓவியக் கல்லூரி வந்து என்னையும் முதல்வராக இருந்த தனபால் மாஸ்டரையும் சந்தித்து விட்டுச் செல்வது அவர் வழக்கம்.
மாணவர் தங்கும் விடுதியில் இருந்த எனக்கு விடுமுறை நாட்களில் தாத்தா சோலைமலையையிம் எஸ்.எஸ். ஆரையிம் சென்று சந்தித்து வருவதும் ஒரு தொடர் பழக்கம். சிவாஜி கணேசனுடன் தாத்தா கதாசிரியராக கடைசியாக வேலை செய்த படம் தாய். அதன் படப்பிடிப்பு நடைபெறுகிறபோது ஓவியக்கல்லூரியிலிருந்து படப்பிடிப்புத்தளத்திற்கு என்னை வந்து அழைத்துச் செல்வார்கள். ஆரம்பகாலத்தில் வெகு காலத்திற்கு முன்பே தாத்தாவின் முதல் படத் தயாரிப்பாளராக இருந்தவர். N.S. கிருஷ்ணனுடயை தம்பி N.S. திரவிம்யம் தான். பிறகு N.S. திரவியத்தின் மகளை தனபால் ஆசிரியரின் மகன் மணம் முடித்தது என்று எல்லாம் வெகு இயல்பாகவே என் வாழ்வைச் சுற்றி நிகழ்ந்திருக்கிறது.
முதுரை, சென்னை, நாடகம், ஓவியக்கல்லூரி, திரைப்படத்துறையுடனான என் தொடர்பு எனக்குக்கிடைத்த சூழலும் , அதைச் சுற்றிய என் ஆர்வமும், எற்படுத்தியிருப்பதாகவே நான் கொள்கிறேன். ஓவியக்கல்லூரி ஆசிரியர்களாகிய மூத்த ஓவியர்களே என் முன் மாதிரிகள் சிற்பி தனபால் ஓவியர், சந்தான ராஜ், ஓவியர் அந்தோணி தாஸ், ஓவியர் பாஸ்கர், ஓவியர் தட்சிணாமூர்த்தி என்று பலர் இருக்கின்றனர். இவர்களுடைய துடிப்பான வயதின் போது நான் உடன் இருந்தது எனக்குக் கிடைத்த பேரு ,
இவர்கள் மூலமே ஓவியர் ஆதிமூலம் எனக்குக் கிடைத்தார். இவை எல்லாவறிற்கும் மேல் கல்லூரி நாட்களில் இருந்து இன்று வரை ஓவியர் சிற்பி, என் ஆசிரியர் தட்சிணாமூர்த்தியை நான் தொடர்ந்தே இருக்கிறேன்.
கல்லூரில் படிக்கிற காலத்திலிருந்து இன்று வரை அவருடைய கடின உழைப்பிம், சோர்வே இல்லாத தண்மையிம் கொண்ட வாழ்வுமுறை அவரை அறிந்தவர் அனைவரும் அறிந்தது. அவருடைய இயங்குநிலையின் முன்பு பம்பரமும் தோற்கும். நானும் உத்வேகத்துடன் இருக்க அருகில் இருக்கும் அவரையே எப்போதும் மனதில் கொள்வேன். கடின உழைப்பிலேயே உயர்ந்தவர். எளிமையாகவும் அன்று கண்டது போல் இன்றும் எங்களின் அன்பிற்கு இனியவர். ஒருமுறை நீலாங்கரையிலிருந்து நண்பர் சாரங்கனோடு அடையாறில் இருக்கிற என்னைப் பார்க்க வந்திருந்த ஓவியர் ஆதிமூலம் அங்கிருந்து கிளம்பிச் சென்று "தச்சிணாவைப் பார்க்க வேண்டும் என்று" கூறியதுடன் நகைச்சுவையாக தன் நண்பர் தட்சிணாவைப் பற்றி "நான் இங்கு சிறிது தாமதத்தால் தட்சிணா இங்கே வந்து விடுவார்" என்று கூறியது இன்றும் நெகிழ்வை ஏற்படுத்துகிறது.
சிற்பியாகவும் ஓவியராகவும் 40 ஆண்டுகள் இவர் இயக்கத்தை இன்று வரை பார்த்து வந்திருக்கிற நான் பதிவு செய்திருக்கிறவற்றில் ஒருசிறந்த படம் - சிற்பி தட்சிணாமூர்த்தியின் புகைப்படம் தான்.






