” வாளோர் ஆடும் அமலை” புத்தக வெளியிட்டு விழா அழைப்பிதழ் -தடாகம்.காம்
- Details
- Published on Thursday, 04 August 2011 17:13
- Written by editor
"வாளோர் ஆடும் அமலை” - தடாகம் வெளியீடு.
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் தமிழ் மன்னர்களின் புறம் குறித்த ஓவிய தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்..
இடம்: பாவாணர் அரங்கம், தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை-2
தேதி: 19/02/2011 சனிக்கிழமை.
நேரம்: மாலை 5:30 மனி
முன்னிலை: எழுத்தாளர். பிரபஞ்சன்.
வெளியிடுபவர்: பேராசிரியர். நாகநாதன், துனை தலைவர் - மாநில திட்டக்குழு.
பெற்றுக்கொள்பவர்கள்:
திருமிகு ஜனநாதன், திரைப்பட இயக்குனர்
திருமிகு மிஷ்கின், திரைப்பட இயக்குனர்
திருமிகு கிள்ளிவளவன்
திருமிகு செளந்தர்
திருமிகு ரமேஷ்
திருமிகு ச. விசயலட்சுமி
அனைவரும் வருக..
நூல் அறிமுகம் :
பேராசிரியர் மு.நாகநாதன் [ துனை தலைவர் - மாநில திட்டக்குழு ]
புதிய தொழில்நுட்பத்தின் வழியாக இப்புவியில் இருந்து அழிந்தொழிந்த டைனோசர் மீண்டும் காட்சியாக்கப்படுகிறது. எறக்குறைய உண்மையான தோற்றப் பொலிவை உணரமுடிகிறது. தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும். இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன. இதன் வெளிப்பாடுத்தான் இன்றைக்கு ஓவியக் கருத்தாக நுல் வடிவில் வெளிவருகிறது.
பிரபஞ்சன் [ எழுத்தாளர் ]
எல்லாக் கலைகளும் அக்கலைகள் தோன்றிய இனத்தின் வரலாற்றை எதோ ஒரு வகையில் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கலை அதன் வேரை நோக்கிச் சென்ற பயணத்தில் தான் அதன் எதிர்காலம் நோக்கிய பயணமும் அமைந்தது . அடிமைப்பட்டுக் கிடந்த சமூகம் அதன் வேரை வரலாற்றை நோக்கிய கவனகுவிப்பில் தான் மறுமலர்ச்சி யுகமே தோன்றுகிறது. சென்ற நுற்றாண்டின் கடைசித் தசாப்பத்தில் மருதுவின் படைப்புலகம் தமிழ் மன்னர்கள் பால் திரும்பியது. முதலில் காலனியத்தின் பகைவர்களாக நாட்டுத் தலைவர்களாகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டவர்களின் ஓவியங்களை வரையத் தொடங்கினார். அதாவது ஒவியங்கள் மூலம் புதுக் காண்பியல் அனுபவத்தை தந்தார். பின்னர் இப்போது சங்க மன்னர்கள் பலரின் உருவத்தை தாம் உணர்ந்த வகையில் வரையத் தொடங்கினார். இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மைப் படைப்புகள் அப்போது உருவானவையே. இப்படைப்புகள் மன்னர்கள் பற்றிய மனச் சித்திரத்தை அவைகளின் பிம்பங்களைக் கல் எறிந்து கலைத்தன. அம்மன்னர்கள் பற்றிய மனப் படிமங்கள் வெகுவாக அழிக்கப்பட்டு கலைக்கப்பட்டன. உண்மையில் சங்க மன்னர்கள் இப்படித்தான் இருந்தார்கள் இருக்க முடியும் என்பதைத் தாண்டி இன்னொரு கருத்து இருக்க முடியாது.
நூல் வரியறை:
Multi Color on all the pages
Size A4 Closed
Pages 96 Pages + 4 Pages Cover
Cover 350 Gsm Leykam Matt Art Board
Inner 130 Gsm Leykam Matt Art Paper
Perfect bound
How to Buy :
To buy this book please transfer the money to the below mentioned account and send us the snapshot of the transaction with your mail address to "
JLIB_HTML_CLOAKING
" -
Thadagam
A/c No : CA01993439
IFSC Code : CORP0000122
Corporation Bank, Whites Road
Branch,38 & 39, Whites Road,
Chennai -600014.
Or send in check or DD in favour of Thadagam with your mailing details , payable at Chennai to -
Thadagam, RAAGAAS, Ahamed
Complex, Ground Floor, 12/293,
Royapettah High Road, Royapettah,
Chennai 600014






