ச.முருகபூபதியின் “மிருக விதூவுகம்” நவீன நாடகம் ஓர் அனுபவம்-கணேசகுமாரன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 10:41
- Written by editor
ச.முருகபூபதியின் “மிருக விதூவுகம்” நவீன நாடகம் ஓர் அனுபவம்
பல வேடிக்கை மனிதர்களைப் போல....
என் அனுபவத்தில் இது முதல் நவீன நாடகம் சென்னை, திருவண்ணாமலை, கோவிப்பட்டி, பாண்டிச்சேரி போன்ற தூரதேசங்களில் நிகழ்ந்ததை (நாகப்பட்டினத்திலிருந்து) தவறவிட்டபின் “தஞ்சாவுரில்...” என்று சாந்தாராம் சொன்னதும் சரியென்று தலையாட்டி புதிய அனுபவத்துக்கு தயாரானேன்.
இடையில் அனைத்து வார, மாத இதழ்களியெல்லாம் மிருக விதூவுகம் பற்றி அவரவர் அளவுக்கு எழுதி ஏகத்துக்கு பயடுறுத்தி வைத்குருந்தார்கள். தாங்குவேனா என்றொரு சந்தேகத்துடன் தஞ்சாவுர் புறப்பட்டேன்.
தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையம்தேடி 24.10.10. அன்று சென்ற போது ஞாயிறு சாய்ந்திருந்த்து. நா-கத்துக்கான களம் தயாராகிக் கொண்டிருந்த்து. சன்னதம் கொள்ளும் சாமிகள் குலவையிட்டு பூமிதித்து ஓடும் நிலத்தில் தீக்குப் பதில் நீருற்றிக்கொணடிருந்தார்கள். முதல் ஆச்சர்யம் மேடையில்லை பார்வையாளனை நிலத்தில் அமர வைத்து உயரே யாரும் வித்தை காட்டப்போவதில்லை பார்வையாளனுக்கும் கலைஞனுக்கும் இடையில் எவ்வித திரையுமில்லை. அதுவே பல மனத் தடைகளை உடைக்கிறது. மாலை ஆறுமணிக்கு மேல் நாடகம் தொடங்கியது . மழை வருவதற்கான அத்தனை வெக்கையும் சேர்ந்திருக்க வீச மறந்த காற்றும் அசைய மறுத்த மரங்களும் இமைக்க மறந்து பார்வையாளனோடு ஒன்றிய அகுசயம் சற்று தாமதமாக வந்த நிலா தவறவிட்ட முன் அனுபவத்துக்காக நிறைய வகுந்தியிருக்கலாம்.
பன்னாட்டு சந்தைகளின் ஆதிக்கம், காலனித்துவ கவர்ச்சி, காணாமல் போகும் மூதாதைப் பதிவுகள், பறிபோகும் தனிமனித சுதந்திரம், வாலில் பற்றும் தீ வானம் பரவும் அபாய் உணர்ந்தும் கைதட்டிக் கண்டு களித்த இமைழிப்பு துயரம் எல்லாம் விதூவுகர்கள் மூலமாய் கண்முன்னே அரங்கேறின.
முல்லைத்தீவில் மனிதம் அழிந்த வன்மத்தில் தொடங்கி மீண்டும் மலர்கள் பூத்துவிடும் நம்பிக்கையில் முடியும் ஒண்ணேமுக்கால் மணிநேர காட்டு அனுபவத்தின் இடையில்தான் சவுக்கடிகளும், நெஞ்சை உலுக்கு கேள்விகளும்.
“விதை உண்டு பதிய நிலமெங்கே? யாராவது பார்த்தீர்களா என் பூமியை” எனக்கதறும் விதூவுகக்குரல் பார்வையாளனின் நெஞ்சிப் கத்தி செருகுகிறது. ஆனாலும் மரத்துப்போன மனிதனுக்கு என்ன உறைத்துவிடப் போகிறதென கைதட்டி களைக்கிறார்கள் குற்ற உணர்வுடன். உலகம் மனிதனுக்கு இலவசங்கள் அள்ளிவழங்கி வென் மூளையை செயலற்றதாக்குகிறதுஇ அவன் உரிமைகளை கேட்க மறுக்கிறது பேசவும் தடுக்கிறது. வேறுவழியின்றி சுயநல ஓட்டிற்குள் தன்னைப் பத்திரப்படுத்தி ஊர்ந்து நகர்கிறான் வாழ்தல் பற்றி போசிக்க அவகாசமின்றி பதுங்கு குழிக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தானியம் உயிர்ஊறி முளைத்து நிலம் கீறி நாளை வெளிவரலாம் காணாமல் போன தொன்மங்களை மீட்டெடுக்கவும் மறைந்து கொண்டிருக்கும் மூதாதைகளின் மிச்சங்களை காப்பாற்றி வைக்கவும் ஒருவின் வந்தால் அது மிருக விதூவுகத்தின் வெற்றி.
விதூவுகர்களின் உடல்மொழி மாற்றம் (நடிப்பு என்பது கொச்சைப் படுத்துவதாக உள்ளது) வியந்துகொண்டே இருக்கவைக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மிருகத்தின் ஜாடையில் நடப்பதும் திரும்புவதும் குரல் தருவதும் பார்வையாளனின் மனதுக்குள் இருக்கும் மிருகத்தை உசுப்பிவிடக்கூடியது. தமது வாழ்விடங்களை தொலைத்த மிருகங்களின் அழுகையுடல் மொழிப் பதிவு அருமை அக்காட்சிக்கான குழலிசை அமைப்பு நீண்டகாலம் நினைவில் இடக்கும். மேடையில்லை என்பதாலே விதூவுகர்களின் கண்களை அருகில் தரிசிக்க முடிந்த்து. பயம், கலவரம், வீரம், சோகம் எல்லாம் கலந்து ஒளிரும் விழிகள்.
சந்தானபுபதியின் விரலசைவில் இருளும் ஒளியும் பிறந்து மடிகின்றன. விழிகளில் வண்ணங்களை ஒளித்து வைத்துக்கொண்டு வித்தை காட்டும் காட்சிகள் நினைவில் நிழலாய்.
சினிமாவை ஞாபக்கடுத்தாத இசை மனத்திற்கு உற்சாகம் தந்தது.மைய இசையும் அவ்வப்போது உயிர் அறுந்து கதறலாய் வெளிவரும் இசைத்துணுக்குகளும் தனது இமத்தினை செம்மைப்படுத்தின.
உயிர்க்கலைஞனின் கட்டுப்படுத்தப்படாத சுதர்திரத்தினை இயக்குனர் மொத்தமாய் வசீகரித்துள்ளார். இல்லையெனில் அடுத்த இலவசம் தூக்குக்கயிறுதானே என்று அரசின் கன்னத்தில் அறைந்து கேட்கமுடியாது.
“எமது காட்டினை அழித்து மைனாக்களைக் காணாமலடித்து வண்ணத்துப் பூச்சிகளைக் கொன்று பைத்திய மலர்களில் பிறந்த தேனை விஷநாகம் தீண்டவிட்டு புமியை புண்ணாக்கியிருக்கிற கூட்டமே எதை அழித்து எதை உருவாக்கப் போகிறாய் என்ற விதூவுகனின் கேள்விக்கு வழக்கம்போல் எல்லாவற்றிலும் பார்வையாளனாய் பங்கேற்கும் பல வேடிக்கை மனிதர்களின் கூட்டம் அங்கும் பார்வையாளனாகவே தனது பாத்திரத்தை நிறைவு செய்கிறது.
எல்லாம் பாதகங்களுக்கும் காரணியாய் இருந்துவிட்டு தன்னை சாட்சியாய் மட்டுமே முன்னிறுத்தி ரசிக்கும் அதிஜாக்கிரதையான சமூகத்திறகு இயக்குனர் குரல்வழி விவரிக்கும் கொடூரங்களைப் பார்த்து பரவசப்பட்டு கைதட்டுவதோடு முடிகிறதா கடமை...? மிருகவிதூவுகம் வழி முருகபுபதி செய்திருக்கும் காரியம் அவசியமானதுதான். ஆனால்..... தூங்குகிறவனை மட்டுமே எழுப்பமுடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
கணேசகுமாரன்
நாகப்பட்டினம்.






