Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

ஓவியர் கே.எம். ஆதிமூலம் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

"ஆதி" என்ற எல்லோராலும் அழைக்கப்பட்ட ஓவியர் கே.எம். ஆதிமூலம் அவர்கள் நான் சென்னை வந்தபின் சந்தித்த மனிதர்களில் அறிய வந்தவர்களில் முதல்வர். அவரை உயர்ந்த ஓவியராக முதலில் நினைப்பதிலும் முதலாக அரிய மனிதராகவே நினைவில் நிற்கிறார் ஓவியக் கல்லூரி மாணவனாக 1970களில் இருக்கும்போது அவருடைய ஓவியக் கல்லூரி 1960களில் ஆன கல்லூரியிலேயே கிடந்த ஓவியங்களின் வழியாகவும் கல்லூரிக்கு சட்டம் அடிக்க வரும் அவருடைய ஓவியங்களின் மூலமும் அவரை அறிந்தேன்.

 

‘கசடதபற’ காலத்தைய அவருடைய மிதக்கும் குதிரையும் அல்லாது கழுதையும் அல்லாதது போன்ற மிருகத்தைக் கொண்ட சிறிய எண்ணெய் வண்ண ஓவியங்களின் மூலமும் அவருடைய கல்லூரித் தோழர்களான என் ஆசிரியர்கள் மூலமூம் அவர் அறிமுகம். என் ஓவியத்தை தற்செயலாகக் கல்லூரி வந்த ஆதிமூலம் கண்ணில் பட்டு ‘இது யார் வரைந்தது’ என அவர்கேட்டு பின் ஒரு நாளில் ‘இவன் தான் அது’ என்று அறிமுகப்படுத்தப்பட்டேன்.

அவருடைய நட்பு, என் வாழ்வில் கிடைத்ததற்கறிய ஒன்று. நான் அறிந்திராத மனிதர்கள் என்னைச் சந்திக்கும் போது ‘உங்களைப் பெரிதும் பாராட்டுவார்’ என்று அவர்கள் சொல்லும்போது நான் பெருமகிழ்ச்சி அடைவேன். முகம் தெரியாதவருக்கும் அவர் செய்த உதவிகள் பல. அவருடைய நினைவைப் போற்றி மணாவின் புத்தகம் அவர் பிறந்த ஊரில் வெளியிடப்படும்போது, பக்கத்து ஊரில் இருக்கும் நூலகத்திற்கு ‘சிறிது பண உதவி கிடைத்தால் நன்றாகயிருக்கும் நூல்களை அட்டவணைப்படுத்தி விடுவோம் என்று அவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். ஒரு கணினி வாங்க முழுப்பணத்தையும் அப்போதே அனுப்பிவிட்டார்’ என்று அவர் முகமும் அறியாத அந்தப் பெரியவர் என்னிடம் வந்து கூறினார். அன்று நடந்த கூட்ட மேடையில் எங்களோடு வந்திருந்த அவருடைய நீண்ட நாள் நண்பர் எஸ்.வீ.ராஜதுரை மிக விரிவாக இச்சம்பவத்தையும் சேர்த்து அவர் அறிந்த ஆதியைப் பற்றிபேசும்போது பேசி நெகிழ்ந்தார். 2002ல் நான் திரு. ஆதிமூலம் அவர்களை வரைந்தது.

 

அனைத்து கட்டுரைகளையும் படிக்க ...

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS