பாடல் நிரம்பிய வெளி -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 10:20
- Written by editor
கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்க வடிவம் பாடல் வடிவத்தோடு இணைத்து எழுதும் மரபில் உருபெற்றது.கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நூற்றுக்கணக்காண கலைஞர்களால் நாடகங்கள் நடத்தப்பட்டது நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகம்.
மதுரைக்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களுக்கும் பெரும் தொடர்பு உண்டு. தமிழக மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட பாராட்டப்பட்ட சுவாமிகளின் நாடகத்தில் எல்லா பாத்திரங்களின் பகுதிகளும் தோன்ற வல்லவர்கள்.
மதுரையில் என் பள்ளிநாட்களில் சுவாமிகளின் நாடக ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும் படியே வாழ்வு கிடைத்தது. இரவெல்லாம் கண் விழித்து நாடகம் பார்ப்பதும் அந்த உடைகளின் பாடல் ஒலியில் ஆர்மோனியக்காரர்களின் பின்பாட்டு ஆகியவற்றை திரைச்சீலையில் கண்டுத்திரிந்தேன்.
சுவாமிகளின் நாடகம் – கோரிப்பாளையம் – தமுக்க மைதானம் – எங்கள் குடும்பத்தில் 1930 – 40 களில் நாடகத்தோடு சம்பந்தப்பட்ட கார்மேகம் தாத்தா – சோலைமலை தாத்தா அவர்களின் நாடகத் தொடர்பு - யாதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை இருந்த எங்கள் வீட்டிலே எங்களது இளமைக் காலம் – விவசாயகாலம் முடிந்தவுடன் கூத்தில் நாடகத்தில் பெரும்பங்கு கொண்ட உறவினர்கள் தர்மராஜ் குட்டை ராமு போன்றவர்களின் வேலன் வேடன் வருந்தன் பாடல் ஒலிகள் – சங்கரதாஸ் சுவாமிகள் நினைவில் தமுக்க மைதானத்தில் இருக்கும் அரங்கம் – அதன் உள் முகப்பில் தொங்கும் கே.மாதவனின் ஓவியம் – என் பள்ளிநாட்களில் டி கே எஸ் சகோதரர்களால் நிறுவப்பட்ட தமுக்க மைதான வாசலில் இருக்கும் சுவாமிகளின் சிலை திரப்பில் நான் அலைந்து திரிந்தது – இவற்றை எல்லாம் எப்படி மறக்க முடியும். நாடக நடிகர் உடையப்பாவும் அவரது மனைவி திருமதி. சரளா நடிப்பில் சுவாமிகளின் "அரிச்சந்திரா" நாடகத்தில் இரவு 1 மணிக்கு நடக்கும் நடக்கும் மயான காண்டத்தில் சரளாவின் குரலில் வரும் பாடலால் நிறப்பப்பட்ட வெளியில் நான் அழுது கரைந்த உருகிய பல நாட்கள் - சுவாமிகளின் பெருமையையும் டீ கே ஸ் சகோதர்களின் பெருமையைப் பற்றியும் சகோதரர் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் பெசும் உணர்ச்சி பூர்வமான சம்பவங்களையும் எப்படி மறப்பேன்.தமிழக கலை வெளியின் உயர்வும் செழிப்பும் வனப்புமே என்னை வளர்த்த்து.சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் அவர் நாடகக் கலைஞர்களுகும் சமிபத்தில் வந்த அவர் நாடக தொகுப்பின் வழி என் சமர்ப்பணமே எனது இந்த சங்கரதாஸ் சுவாமிகளின் ஓவியம்.






