Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

நினைவிலேயே இருக்கும் விடுதி வாழ்க்கை -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்ததும், மைலாப்பூரில் உள்ள தாத்தா சோலைமலை வீட்டில் இருந்தால், சென்னையைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியாது அத்தோடு எனக்கு முழு சுதந்திரமும் இருக்காது என்று என்னை ஹஸ்டலில் சேர்த்து விடச் சொன்னேன்.

 

அதனால் தாத்த முயற்ச்சி பண்ணி எனக்கு புரசைவாக்கத்தில் ஹண்டர்ஸ் ரோட்டில் (இப்போது நாராயண குரு சாலை) உள்ள ஸ்லெட்டர் விடுதியிலே சேர்த்து விட்டார்கள். ஸ்லெட்டர் விடுதி நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்குவதற்காணது. எனக்கும் திண்டுக்கலிருந்து வந்த, என் கூடப்படிக்கும் பாண்டியனுக்கும் ஒரு அறை கொடுத்தார்கள். சினிமா போஸ்டர் வரையும் ஓவியர் பரணி அவர்களின் ஆதரவோடு பாண்டியன் சேர்ந்தார்.

பின்னொரு காலத்தில், 19ம் நூற்றாண்டில் ஓவியக் கல்லுரியை நிறுவியதே அலக்சாண்டர் ஹண்டர் என்றும், அவர் பெயரிலேயே உள்ள தெருவில் நான் தங்கியிருந்தது தெரிய வந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஐந்தாண்டு காலமும் ஸ்லெட்டர் விடுதியின் ஒரே அறையில் தங்கியிருந்தேன். இரண்டாமாண்டு நான் மட்டும் தனியாக விடுதிக்கு வெளியிலேயும் ஒரு அறை எடுத்து வைத்திருந்தேன்.

விடுதி வாழ்க்கை என் வாழ்வில் ஒரு முக்கியமானதாக அமைந்த்து. போதுமான வசதிகளோடு, குடும்பத்தோடே இருந்து பழக்கப்பட்ட எனக்கு இப்போது விடுதி வாழ்க்கை முற்றிலும் திருப்பி போட்டதாக இருந்தது. விடுதியில் நான் சிரம்மபட்டதை ஒருபோதும் என் அப்பாவிடம் நான் சொல்லவேயில்லை. இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் அவர் வந்து பார்த்த போது அழுதேவிடார். ஏன்டா சொல்லவேயில்லை என்று கேட்டார். நானாக விருப்பபட்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்ததால், எப்படியான சிரமமாக இருந்தாலும், அதை நானே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். மதுரையில் இருந்து என்னைப் பார்க்க வந்த நண்பர்கள் ஏன் இப்படி உன்னை வருத்திகிட்டு இருக்கிறன்னு கேட்ப்பாங்க. ஆனால் நானிருக்கும் நிலையை வீட்டில் யாருக்கும் சொல்ல மாட்டார்கள். சிரமங்களை தாங்கவும், அதை சமாளிக்கவும் விடுதி நாட்கள் எனக்கு வெகு இயல்பாக கற்றுக் கொடுத்தது

விடுதில் சேர்ந்த முதல் நாளே தாதா வீட்டிற்க்கு ஓடி வந்து விட்டேன். காரணம் விடுதில் சாப்பிடக் கொடுத்த இட்லி. அது நல்ல உருண்டையா கல்லு மாதிரி இருந்த்து. அதையெடுத்து ஒரு ஆளையே அடிக்கலாம். இந்த காரணத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. சில நாட்களுக்குப் பிறகு எனக்கு அந்த உணவு பிடித்துவிட்ட்து.

காலை ஐந்து மணிவரை ஓவியம் வரைவேன். பின்பு எட்டு மணிவரை தூங்குவேன். அதன் பின்பு கல்லூரி சென்று நான் வரைந்த ஓவியத்தை போர்டில் சகமாணவர்களின் பார்வைக்கு அடித்து வைப்பேன். இப்படித்தான் எனது ஐந்து ஆண்டு கல்லூரி வாழ்க்கையும் இருந்த்து.

விடுதியின் நினைவு வரும்போதெல்லாம், ஓவியம் கற்றுக்கொள்ளும் தீவிர மாணவனாக இருந்த போது, வண்ணங்களை வைத்து தீட்ட பேலட்டாக பயன்படுத்திய சாப்பாட்டு தட்டும் கூடவே நினைவுக்கு வரும். சாப்பாட்டு மனியடித்ததும் தட்டை கழுவிவிட்டு சாப்பிடுவேன். சாப்பிட்டு கழுவி விட்டு மறுபடியும் பேலட்டாக பயன்படுத்துவேன். என்னைப் போலவே நிறைய மாணவர்கள் இப்படி சாப்பாட்டு தட்டை பேலட்டாக பயன்படுத்தினார்கள்

நான் இருந்த அறை என் 18. இரவு முழுவதும் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அறையில் இருந்த மற்ற நண்பர்கள் புகைபிடிப்பார்கள். அதனால் இரவில் யாருக்காவது தண்ணீர் வேண்டுமென்றால் அல்லது நெருப்பு வேண்டுமென்றால் எங்கள் அறைக்கு வந்துவிடுவார்கள். இப்படி தூங்காத அறையாகவே எங்கள் அறை இருந்த்து.

அறையில் சுவரெல்லாம் ஓவியாமகவே இருக்கும். நானும் என்னுடைய சீனியர் நண்பனும் ஓட்டேரி சுடுகாட்டில் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் மன்டை ஓட்டை எடுத்து வந்து அதில் எழுத்துக்களை வரைந்து வைத்துருந்தோம். யாருக்காவது உணவு வாங்கி வைத்துருந்தால் அந்த தட்டோடு இந்த மண்டை ஓடும் இருக்கும். இப்படி இரண்டு மண்டை ஓடு வைத்திருந்தோம்.

எங்கள் அறை மந்திரவாதி அறைபோல் இருப்பதாக பக்கத்து அறை நண்பர்கள் சொல்லுவார்கள். அதற்கு ஏற்றவாரே நாங்கள் அனைவரும் நீண்ட தலைமுடி வைத்திருந்தோம். அதுவும் ஒரு அடையாளமகவே எங்களுக்கு இருந்தது. எங்களேட நீண்ட தலைமுடியைப் பார்த்து, ஏண்டா, உங்க கல்லூரியில படிக்க இதுவும் ஒரு எலிஜுபிலிட்டியான்னு கிண்டலாக தாத்தா சோலைமலை அடிக்கடி கேட்பார்.

நான் ஓவியம் கற்றுக்கொள்ளும் முயற்ச்சியைக் கண்டு என்னோட தாத்தா சோலைமலைக்கு என் மீது ஒரு தனிப்பட்ட மரியாதையும், பாசமும் இருந்தது. அப்போது அவர் தனியாக சினிமா எடுத்துக்கொண்டிருந்தார். சிவாஜி கணேசனும், தாத்தவும் சேர்ந்து சினிமா பண்ணாமலிருந்து, 12 வருடம் களித்து, கோர்ட்டு கேஸ் எல்லாம் முடிந்து, தாய் என்னும் படம் பண்ணினார்கள். அந்த படம் நான் படித்துக் கொண்டிருந்த போது தயாரிப்பு நடைபெற்றது. அவ்வப்போது நான் படப்பிடிபிற்க்கு போவேன். என்னை அழைத்துச் செல்ல கார் அனுப்புவார்கள்.

தாத்தா சோலைமலை, மதுரையில் அவர் பள்ளி படிக்கும் கால கட்டத்தில் புதுமைபித்தனுடைய எழுத்துக்களால் வயப்பட்டு புதுமைபித்தனை பார்க்கவேண்டுமென்று முதன் முதலாக சென்னைக்கு வந்த போதும், அதன் பிறகு புதுமைபித்தனின் நாடகங்களை என். எஸ். கிருஷ்னன் தயாரிக்க முடிவு செய்த காலகட்டத்திலும், சென்னை எக்மோர் நாடார் மேன்சனில் தங்கி இருந்து, டிக்கட் வாங்கி சாப்பிட்டவர், என்னைப் பார்க்க கல்லூரிக்கு வரும்போது பழைய நினைவுகளோடு, வாடா, என்னையும் கூட்டிகிட்டு போங்கடான்னு எங்களோடு வருவார். அப்படி அவர் எங்களோடு சாப்பிட வரும் காலம், அவர் சினிமாத்துறையில் உச்சத்தில் இருந்த காலமாகும்.

நான் கல்லூரியில் சேர்வதற்க்கு 12 ஆண்டுகள் முன்பே எனது தந்தை, சிற்பி தனபால் அவர்களை என் தந்தையின் நண்பர் மூலமாக சந்தித்திருந்தது. பின்பு அவர் மூலமாகவே நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தது, ஹண்டர்ஸ் ரோட்டில் தங்கியிருந்தது. இப்படி இவை என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஆச்சரியமான காரியங்களாக, எதுவும் எதையும் முன்பே சொல்லிக்கொள்ளாமல், தானாகவே நடந்தது.

என்னுடைய அறையை 1972ல் பெருமையுடன் வரைந்த ஓவியம் தான் இது.

 

அனைத்து கட்டுரைகளையும் படிக்க ...

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS