Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து.. - எச்.முஜீப் ரஹ்மான்.



அண்மையில் அன்வர் பாலசிங்கம் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.அந்த நாவல் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த  கற்பிதங்களை கேள்விக்குட்படுத்துகிறது.இஸ்லாம் சமநிலை சமுதாயம் என்றும் இஸ்லாத்தில் மதம் மாறினால் ஜாதி,ஜாதியம்,தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற அபத்தவாதங்களை தவிடு பொடியாக்குகிற விதம்

கடலோரத்தில் ஒரு சிறுவன் (ரஷ்ய நாவல் ) - கார்த்திகா வாசுதேவன்

கடலோரத்தில் ஒரு சிறுவன் (ரஷ்ய நாவல் )

பிரிவு -குழந்தை இலக்கியம்

ஆசிரியர் -என்.துபோவ்

அ.பெரியாரின் “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர்மாற்றமும்” நூல் மதிப்புரை -மு. சுதந்திரமுத்து

பெரியாருக்கு வாய்த்திருக்கிறது


சமூகத்தின் ஒவ்வோர் அசைவிற்குப் பின்னாலும் வரலாறு களும் போராட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அசைவுகளின் பின்னால் போய்ப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

ச.விசயலட்சுமியின் ‘பெருவெளி பெண்’ணும் வாசிப்பைத் தொடரந்த சில வாரத்தைகளும் - தமிழ்நதி

சிலசமயங்களில் யோசித்துப்பார்க்கும்போது விமர்சனம் என்பதில்கூட ஒரு மெல்லிய வன்முறை கலந்திருப்பதாகவே தோன்றுகிறது. நமது வாசிப்பினடிப்படையிலான அளவுகோல்கள், மதிப்பீடுகள், ஒப்பீடுகளை மற்றவரில் பொருத்திப் பார்க்கும் அதிகாரத்தை அது உள்ளடக்கியிருக்கிறது.

புத்தக விமர்சனம் - குரலற்றவனின் குரல் ( தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள் ) -முனைவர் ஆ.மணவழகன்

ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்



கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா - பாட்டிகளின வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரலர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்த்து ஆனால்.

தி். பரமேசுவரியின் “ஓசை புதையும் வெளி” - யாழினி முனுசாமி

எரியும் பனிவனத்தின் குளிர்க் கங்குகள்

முதலில் இந்த விமர்சனத்திற்கு “காமம் நுரைத்துப் பொங்கும் கவிதைகள்” என்று தலைப்பு வைக்கலாம் என்றிருந்தேன்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் எல்லாக் கவிதைகளையும் திணிப்பதாகத் தோன்றியதால் அத்தலைப்பைத் தவிர்த்தேன். எனக்கான வெளிச்சம் (2004) எனும் தன் முதல் கவிதை நூலைத் தந்த கவிஞர் தி்.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. கையடக்கப் பதிப்பாக 72 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்”- என்கிற நூலுக்கு எனது எதிர்வினை -அ.கா.ஈஸ்வரன்

வெங்கடேஷ் ஆத்ரேயா வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை அறிமுகப்படுத்தி தமது “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்” (“மூலதனம்” நூலுக்கு ஒரு எளிய அறிமுகம்) என்னும் நூலை தொடங்குகிறார்.

“உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் ஒரு சமூதாயத்தின் கட்டுமானம் அல்லது பொருளாதார அடித்தளம் என்று பல மார்க்சிய எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். .. ..

நூல் விமர்சனம் சாருமதியின் அறியப்படாத மூங்கில் சோலை ... -யாழினி முனுசாமி

“ முந்திய பகலில் எம்முடன் இருந்தோர்
இந்த இரவில் இல்லாது போயினர் ”


‘கந்தசாமி யோகநாதன்’ எனும் இயற்பெயரைக் கொண்ட சாருமதியின் தொகுக்கப்பட்ட கவிதைகள், அறியப்படாத மூங்கில் சோலை. 1926-இல் இலங்கையில் பிறந்து 51-ஆவது வயதில் 1998-இல் மரணித்துப்போன சாருமதியின் கிடைத்த கவிதைகளைத் தொகுத்து 2010-இல் வெளியிட்டுள்ளனர்.

சிறுகதை நூல் விமர்சனம் [மரணத்தின் வாசனை : த.அகிலன்] வாசிப்பு அனுபவம். -நடராஜன் கிருஷ்ணன்

இந்தச் சிறுகதை நூலின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்” என்ற கதை ஏழு வயது பையனின் அப்பா பாம்பு கடித்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய இராணுவம் தடுத்ததால் அவர் இறந்த கொடுமையை சொல்கிறது.

இரா.தமிழரசியின் "மரக்கலம் திரும்பும் பறவை" - நூல் மதிப்புரை -முனைவர் ஏ.இராஜலட்சுமி

தமிழ்ச்சூழலில் கவிதை எழுதுதல்,கவிதை வாசிப்பு ஆகிய இரண்டுமே அதன் தளத்திலிருந்து சற்று விலகி நடப்பதைக் காணமுடிகிறது.கவிதை எழுதுதல் என்பது மிக இலகுவான செயல்பாடாக எண்ணிக் கவிதை செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.

கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு) - மதிப்புரை -ஆ. மணவழகன்

கூடாகும் சுள்ளிகள்
(கவிதைத் தொகுப்பு)

முனைவர் து.ஜானகி
துணைப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600 113.

நூல் வெளியீட்டு விழா - விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -யாழினி முனுசாமி

ஆங்கிலத்தில் ராஜீவ் சர்மா எழுதி தமிழில் ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கும் “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடிகள் “ எனும் நூலை அண்மையில் (04-06-11) சவுக்கு இணையத் தளத்தின் பதிப்பகமான சவுக்கு வெளியீடு சென்னையில் வெளியிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன் நூலை வெளியிட, தோழர் கஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

நாவல் விமர்சனம் : தாண்டவராயன் கதை [ பா.வெங்கடெசன் ] -கீதாஞ்சலி பிரியதர்சினி

தமிழில் தற்போது வெளிவந்துள்ள புதினமான "தாண்டவராயன் கதை" யை முன் வைத்து சில கருத்துக்களை சொல்ல வேண்டி உள்ளது. தமிழ் இலக்கிய வடிவங்களில் உள்ள நாவல் என்கிற அளவை வைத்துப் பார்த்தால் இது அளவில், பக்கங்களில், பிரமாண்டமாகவே வெளிவந்துள்ளது. அதே சமயம் தமிழின் வாசகர்களையும் நாம் குணத்து மதிப்பிடவும் முடியாது.

சோசலிசமே தலித்தியமாய்.. -கணபதி இளங்கோ

“சுய தேவை பூர்த்தி கிராமங்கள் ” என்றழைக்கப்பட்ட இந்திய கிராமங்கள் காலனிய வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் மாறுதலுக்குள்ளாயின. ஜமீன்தாரி, ரயத்துவாரி முறையினை வெள்ளை ஏகாதிபத்தியம் கொண்டுவந்ததன் மூலம் தனியார் நிலவுடைமை அடிப்படையிலான நிலக்குவியல் நாடெங்கும் அதிகரித்தன.

பாம்பு என்றால்? நூல் மதிப்புரை-சண்முகானந்தம்.

பாம்பு என்ற சொல் இந்திய சமூகத்தில் இரு வேறு கருத்து நிலைகளில் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, கடவுளாக கடவுகளின் அவதாரமாக, விசேட நாட்களில் பூசை செய்வது, பயபக்தியுடன் பாம்பை வணங்குவது, பாம்பின் இயல்பான உணவில் இல்லாத (முட்டை, பால்) பொருட்களை படைப்பது என பாம்பை இறை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.