Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

சூழல் சமன்பாட்டில் பறவைகளின் பங்களிப்பு. -சண்முகானந்தம்

-பறவையியல் அறிஞர் சாலிம் அலி.


உலக அளவில் 10,000-ம் பறவையினங்களும், இந்தியாவில் 1330 வகை பறவைகளும், தமிழகத்தில் 350 பறவை இனங்கள் 60 குடும்பங்களில் இது வரை கண்டயறிப்பட்டுள்ளன.



பறவைகளில் பெரும்பான்மையானவை பூச்சிகளை உண்ணும் பறவைகளே, நிர் வாழ் பறவைகள், பழம் உண்ணும் பறவைகள், தேனை உணவாக கொள்ளும் பறவைகள் என பலவிதங்களில், பல அளவுகளில், நிறங்களில் மனம் கவர்வதாக நம்முடன் வாழ்கின்றன.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் நம் நாட்டிள் நிர் நிலைகளை நாடி, தட்ப வெப்ப நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருகை புரிகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் தங்களின் இருப்பிடத்திற்கே திருப்பவும் செய்கின்றன. இவ்வாறு வந்து செல்வதை “வலசை (migration ) செல்லுதல்” என்று பெயர்.

பலவித நாரைகள், கொக்குகள், பூநாரை, உள்ளாங்கள், ஆலாக்கள், வாத்துக்கள் என பல்லாயிரக்கணக்கான விருந்தாளிகள் அக்டோபர் முதல் மே முடிய வந்து நமது நிர் நிலைகளை அழகிய செய்கின்றன.

நிர் நிலைகளில் காணப்படும் மீன்கள், நத்தைகள், நண்டுகள், புழு, பூச்சிகள் போன்றவற்றை உணவாக கொண்டு வாழ்கின்றன. அவைகளின் எச்சங்கள் விவசாய நிலங்களுக்கு மிகப் பெரும் இயற்கை உரமாக அமைகின்றன.

சென்னை அருகே அமைந்துள்ள வேடந்தாங்கள் பறவைகள் சரணாலியத்திற்கு ஆண்டு தோறும் 40,000 முதல் 50,000 வரையிலான பறவைகள் வந்து செல்கின்றன.

பரவேற்காடு பறவைகள் சரணாலயம், கோடியக் கரை பறவைகள் சரணாலயம், கூந்தற்குளம் பறவைகள் சரணாலயம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல அரிய பறவையினங்கள் வந்து செல்கின்றன.

பூ நாரைகள், பட்டை தலை வாத்து போன்ற அழகிய, அரிய வனப் பறவைகள் என பல பறவை இனங்கள் வருகின்றன. இவை யாவும் நீர் நிலைகள் சிறப்பாக இருக்கும் வரை தான்!

நீர்ப் பறவைகளான தாழை இலைக் கோழி, நிள் வால் இலைக் கோழி, முக்குளிப்பாள், கானாங் கோழி, கம்புள் கோழி, தண்ணீர்க் கோழி, தாழைக் கோழி, நாமக் கோழி, தாமரை இலைக் கோழி போன்றவைகளை தமிழகத்தின் நீர் நிலைகள், குளங்களில் காணலாம்.

சிறு பூச்சிகள், புழுக்கள், தாவர விதைகள், போன்றவற்றை உணவாக கொள்ளும் இப்பறவையினங்கள் யாவும் நீர் நிலைகள் சிறப்பாக உள்ளன என்பதற்கு ஒர் குறியிடாகும்.

நீர்த் தாவரங்கள் நிறைந்து காணப்படும் நீர் நிலைகள் பல்லாயிரக்கணக்கான பூச்சிகள் இனங்கள், செடி, கொடி, தாவர இனங்கள், பறவைகள் போன்றவை செழித்து காணப்படும் ஒரு பல்லுயரியம் (bio-diversity) ஆகும். இதை சேறு என்றோ, அழுக்கடைந்த குட்டை என்றோ அழைப்பது அழப்பது தவறாகும்.

ஒவ்வொரு கிராமத்திலும் குனங்கள், நீர் நிலைகள் இருப்பது அப்பகுதியின் குடி நீர் தேவைக்கும், விவகாயத் தேவைக்கும், நிலத்தடி நீர் மட்ட உயர் வற்கும் இன்றியமையாத்தாகிறது.

பழங்களை உணவாக்க கொள்ளும் பறவைகள்:
இருவாசி (அ) இருவாயன் என தமிழிலும், horn bills என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும், பருத்த உடலுடன், நிண்டு கீழ் நோக்கி வளைந்த முக்குடன் காணப்படும் அழகிய பறவை ஒரு பழந்திள்ளி பறவையாகும். பழங்களை உண்டு பலவித தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

இருவாசிகள் பழங்களுடன், பல்ல, சிறுபாம்பு, பறவைகளின் குஞ்சுகள் போன்றவையும் உண்ணுகின்றன. இருவாசிகள் ஒரு மரவாழ் பறவையாகும். இதில் 4 வகைகள் தமிழகத்தின் காடுகளை அழகு செய்கின்றன. மூன்று வகையான குக்குறுவான்கள் (barbet) பழங்களுடன், பூச்சிகளையும், தேளையும் விரும்பி உண்கின்றன.

தேன் உண்ணும் பறவைகளில் நாம் சாதாரணமாக காண்பது தேன் சிட்டுகளாகும் (sun birds). நமது தோட்டங்களில் சாதாரணமாக காணப்படும் தேன் சிட்டு உள்ளிட்ட 4 வகை தேன் சிட்டுகள், மலர் கொத்திகள், சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி, கூம்பலகள் போன்றவை தேன் உண்ணும் பறவை இனங்களாகும். இவையாவும் மகரந்த சேர்க்கைக்கு பெருட் துணை சேர்கின்றன.

ஏலகிரி உள்ளிட்ட மலை சார்ந்த இடங்களில் வெள்ளைக் கண்ணி காணப்படுகின்றன. தேன் தவிர சிறு பழங்கள், கொட்டைகள் போன்றவற்றையும் உணவாகப் கொள்ளும்.
தமிழகத்தின் மேற்கு பகுதி மாவட்ட மலைப்பகுதிகளில், மெல்லிய, நிண்டு கீழ் நோக்கி வளைந்த அலகுடன் காணப்படும் சிலந்தி பிடிப்பானை எளிதில் அடையாளம் காணலாம். தேன் தவர சிலந்தி, சிறு பூச்சிகளையும் உணவாக்கி கொள்ளும்.

தமிழகத்திறகு குளிர் காலத்தில் வலசை வருவது கூம்பலகள். சிறிய அலகும், குங்கும் சிவப்பு தலையும் இவற்றிற்கு அழகு சேர்க்கின்றன. குழுவாகவோ, இணையாகவோ சுற்றி தேனுடன், சிறு பழங்களை உண்ணும்.

தேன் உண்ணும் பறவைகள் அயல் மகரந்த கேர்க்கைக்கும் உதவுகின்றன. சில பறவைகள் பழங்களை உண்டு தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன.
இதில், பறவைகளிள் அழிவு, தாவரங்களின் அழிவாகிறது. தாவரங்கள் அழியுமானால் பறவைகள் அழிய நேரிகுகிறது. சூழலமைப்பில் யாவும் ஒன்றை ஒற்று சார்ந்தே இயங்குகின்றன. இதில், ஏதாவது ஒரு உயிரினம் பாதிக்கப்பட்டால், அதனுடைய பாதிப்பு வேறொரு தளத்தில் நிச்சயம் எதிரொலிக்கவே செய்யும்.

பூச்சிகளை உண்ணும் பறவைகள்:
பறவையினங்களில் பூச்சியுண்ணிகளே பெரும்பான்மையானது 50,000 வகை பூச்சிகள் கொண்ட நம் நாட்டில், பெரும் பான்மையான பூச்சி கொண்ட பறவைகளே உண்டு, பூச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பது வியத்தடு உண்மை.

ஈபிடிப்பான்கள், கரிச்சான்கள், கீச்சான்கள், தகை விலாங்கள், நாகணவாய்கள் ( மைனா - சமங்கிருத சொல்), பனங்காடைகள், ஆந்தைகள், குயில்கள், வல்லூறுகள், தையில் சிட்டு, தேன் சிட்டுகள், கதிர்க்குருவகள், பஞ்சுருட்டான்கள், கொக்குகள், நாரை உள்ளிட்ட நீர்ப் பறவைகள் யாவும் பூச்சிகளை கட்டுப்படுத்தி வேளாண்மைக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்துகின்றன.

கீச்சான்கள் (shrikes) ஒரு நாளைக்கு 50 கிராமும், பனங்காடைகள் 100 கிராம் வரையிலும், நாகணவாய்கள் (மைனா) 150 கிராம் வரையிலும் புழு, பூச்சிகளை உண்டு பூச்சி இனங்களை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

பறவைகள் இல்லாத ஒர் சூழலில் பூச்சிகள் எவ்வாறு பெருகும் என சிறிது கற்பனை செய்து பாருங்கள்?

கற்பனையே படுபயங்கரமாக உள்ளதா? தற்போதுள்ள நிலைமைகள் அதை நோக்கியே செல்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

ஏரி, ஆறுகள், குளங்களை அழிக்கத் தொடங்கி விட்டோம். தமிழகத்தில் இருந்த பெரும்பாலான ஆறு, குனங்கள், ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. அல்லது ஆக்கிரமிப்புகளாசி விட்டன.

நமது நீர் நிலைகள், ஆறுகள், குளங்களை நம்பி வலசை (migration) வரும் பறவைகள் எண்ணிக்கை இதனால் பெருமளவில் குறையத் தொடங்கி உள்ளது.

நீர் நிலைகள் அழிக்கப்படுவதால், நீர் நிலைகளை சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த நிர்ப் பறவைகள், சிறு கொறி விலங்குகள் எங்கு போயிருக்கும்? என்னவாகியிருக்கும்?
அனைத்தும் அழிவுக்குள்ளாகியே தரும். தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு 8% மட்டுமே. மிகப் பெரிய ஆறுகள் என் ஏதும் இல்லை. நிராதாரங்களை அழித்தால், அழியப் போவது பறவைகள் மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வும் தான். நர்ளைய தமிழகம் பாலைவளம் ஆகும் சூழல் வரும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளது கவனத்திற்குரியது.

அடுத்து, காடுகளின் அழிவு, நாள் தோறும் காடுகளின் பரப்பளவு சுருங்குவதும், நாள் தோறும் ஏதோ ஒரு வழியில் மரங்கள் அழிவதும் பறவைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாகின்றது.

காள்கிட் வீடுகள் அதிகரிக்க, அதிகரிக்க நம்முடன் நெருக்கமாக வாழ்ந்த சிட்டுக் குருவிகள் நம்மை விட்டு விலகி வெகு தூரம் சென்று விட்டன.

அது போலவே, மரங்களை வெட்ட, வெட்ட பெரும்பாலான பறவைகளின் வாழ்வு அழிவின் விளிப்பிற்கு வந்துள்ளது.

அழகிய பறவையினமான காள மயிலை (Indian bustard) நாம் இழந்தது போல. கிளிகள், ஆந்தைகள், பிணம் திள்ளிக் கழுகுகள், புறாக்கள், இருவாசிகள் என அழிவின் நின்கிறது.
விவசாய நிலங்கள் அழிந்து விட்டு மனைகளாக மாறி வருகின்றன. விவசாய நிலங்களை சார்ந்து வாழும் தூக்கணாங் குருவிகள், கரிச்சாள்கள், கீச்சான்கள், பஞ்சுருட்டாள்கள் போன்ற பறவைகள் அழிவுக்குள்ளாக நேரிகும்.

காடுகள் சுருங்குவதால், காட்டுயிர்களின் வாழ்வும் கேள்விக்குள்ளாகிறது. காடுகளின் வளம் சீர்கெடுகிறது. சீரான பருவ மழை பொய்க்கிறது. மழைக் காடுகளில் உற்பத்தியாகும் ஆறுகள், ஏரிகள் வறண்டு போகும் அபாயம் ஏற்படுகிறது.

பறவைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் யாவும் சூழல் சமன்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன மனிதன் மட்டுமே அனைத்து காட்டுயிர்களுக்கும் ஒரே எதிரியாக நிற்கிறான்.
நீர் நிலைகள் அழித்து, காடுகளை அழித்து, மரங்களை அழித்து - பறவைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் அனைத்திற்கும் இறுதி கெடு விதித்த மனிதன் - தனக்குத் தானே சவக்குழி தோண்வதை - தெரிந்தே செய்கிறாள்.

இருக்கின்ற நிராதாரங்கள், காடுகள், இயற்கை வளங்களை காப்பாற்ற உழைக்கும் வர்க்கங்களான, அடித்தட்டு மக்களின் தன்னெழிச்சியான போராட்டத்திள் முலசே சாத்தியமாகும்.

அடித்தட்டு மக்களுக்கு சுற்றுச் சூழல், காட்டுயிர் சார்ந்த விழிப்புணர்வை (எளிய தமிழில்) ஏற்படுத்த சமுகவியலாளர்கள், சூழலியலாளர்கள் இணைந்து கடுமையாக களமாற்ற வேண்டிய காலமிது.

மனிதன் மற்ற பிராணிகளை விட பலவிதத்திலும் தாழ்ந்தவன் என்றே சொல்ல வேண்டும்.

-தந்தை பெரியார்.




துணை நின்ற நூல்கள்.
1.தமிழ் நாட்டுப் பறவைகள்-
முனைவர் க. ரத்னம்-
மெய்யப்பன் தமிழாய்வகம் -2002.

2.இயற்கை: செய்திகள்,
சிந்தனைகள் - ச. முகமது அலி -
இயற்கை வரலாறு அறக்கட்டளை 2007.

 

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS