Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

சுற்றுச் சூழல் ஒர் எளிய அறிமுகம் -சண்முகானந்தம்

புவிப் பரப்பில் காணப்படும் செடி, கொடி, தாவரங்கள். சிங்கம் புலி யானை முதல் சிறு பூச்சி வரை, இருவாச்சி (Hornbill) முதல் தேன் சிட்டு(Sun bird ) வரை பலவித பறவைகளும், புழு, பூச்சி வளர்ப்பு மிருகங்களான நாய் , மாடு, பூனை, எலி அனைத்துடன் ‘ மனிதனும்’ இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio - diversity) எனப்படுகிறது.

இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செலுத்த, ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும், தன்னை ஆக சிறந்தவனாக நினைத்துக் கொண்டு தன் சுய நலத்திற்காக இயற்கையில் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல் அழக்கத் தொடங்கினான். அதன் விளைவுகளை மனித சமூகம் இன்று சுனாமியாக, புவி வெப்பமடைதலாக, ஓசோன் படலத்தில் ஓட்டையாக என பலவிதங்களில் அனுபவித்து வருகிறது.

காடுகளும் காடுகளில் காணப்படும் மரங்களும் மனிதனின் பார்வையில், லாப நோக்கத்துடனும் , வியாபார நோக்கத்துடனும் கண்டதன் விளைவு, உலகம் இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பளவுள்ள காடுகளை இழந்துள்ளது.

சரி, காடுகளும், காட்டுயிர்களும், மரங்களும் மனித வாழ்க்கைக்கு, சுற்றுச் சூழலுக்கும் உதவுகின்றனவா?

உலகில் காணப்படும் மிகப்பெரிய மழைக்காடுகளில் நமது மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்று. மழைக்காடுகள் என்பது என்ன?

பல நூறு ஆண்டுகளாக வளர்ந்து செழித்திருக்கும் காகைப் , இங்கு வருடத்திற்கு 150 செ.மீட்டருக்கு மேல் மழை பொழியவும், இங்கு வளர்ந்து இருக்கும் மரங்கள் 45 மீட்டர் உயரத்திலுள்ளன, இவை தவிர மரங்களின் உச்சியில் வாழக் கூடிய சிங்கவால் குரங்கு, (Lion -Tailed mange) மான்கள், காட்டுக் கோரி, பலவித மான பாலுட்டிகள் , புழு , பூச்சி , பறவைகள் போன்ற அனைத்தும் இணைந்ததே மழைக் காடு, பத்து சதுர கி.மீ பரப்புளள மழைக் காட்டில் 750 வகையாள மரங்கள் , 125 பாலுட்டிகள், 400 பறவையினங்கள், 100 ஊர்வன, மற்றும் 60 நீர் நில வாழ்வன இருக்கலாம் எனும் போது மழைக்காட்டின் அருமையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் இழந்த காடுகளாலும், மரங்களாலும் ,நாம் சராசரி மழை அளவை இழந்ததுடன் நீல நிலைகள் வற்றுவது, நிலத்தடி நீர் குறைவது என பல விளைவுகளை அனுபவித்து வருகிறோம்.

காடுகள் அழிக்கப்படுவதில்

1. குடியிருப்புகளாக மாற்றப்படுவது,
2. விவசாய நிலங்களாக ஆக்ரழிக்கப்டுவது
3. மரங்களை தொடர்ந்து வெட்டுவதால்
4. பெரிய தொழிற்சாலைகளை அடர்ந்த காடுகளுக்குள் துவக்குவது
5. மிகப்பெரிய அணைகளை கட்டுவது
6. கோவில்கள் கட்டுவது, பிரபலபடுத்துவது. போன்றவை முக்கிய காரணங்களாக செயல்படுகிறது.

காட்டுயிர்களின் அழிவிற்கு

1. சமூகத்தில் புரையோடியுள்ள மூட நம்பிக்கைகள்.
2. கள்ள வியாபாரத்திற்காக வேட்டையாடுதல்
3. மின்சார கம்பிகளில் சிக்கி உயிர் இழப்பது.
4. மின்சார ஊர்தி தடங்களில் ஏற்படும் விபத்துகளில் இறப்பது போன்றவை முக்கிய காரணிகளாக செயல்படுகின்றன.

காடுகளை அழிப்பதினாலும், குடியிருப்புகளாக மாற்றுவதினாலும் ஏற்படும் விளைவுகளை தற்போது ஆண்டு தோறும் நீலகிரி, ஊட்டியில் நிலச்சரிவு என்ற செய்தியின் ஊடாக காண்கிறோம்.

காடுகளும், மரங்களும் மனித வாழ்விற்கு அரணாக விளங்குகின்றன காடுகளை அதன் இயல்பு நிலையிலேயே இருக்கும் என்பது இயற்கை நமக்களிக்கும் பாடுமாகும்.

காடுகள் வளமாக இருப்பதற்கான ஒர் அறிகுறி காட்டுயிர்களின் பேருயிரான யானனை புலி போன்றவை வளமாக இருந்தால் காடும் வளமாக உள்ளது என்றே கூறலாம்.

உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் புலிகள் சரியான எண்ணிக்கையில் இருந்தால், அதனுடைய இறை விலங்குகளான மான்கள், காட்டுமாடுகள் சரியான விகிதத்தில் இருக்கும்.

புலிகளின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் இறை விலங்குகளான மான், காட்டு மாடு போன்றவை பல்கி பெருகி உணவு (புல், இலை,தழை) தட்டுப்பாடு எற்பட்டு காட்டின் வளம் சீர் குலையும்.

இதை போன்றே , அனைத்து காட்டுயிர்களும் (புழு, பூச்சிகள், உட்பட) ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன என்பதை நினைவில் கொள்வோம்(மனிதன் உட்பட )
காட்டுயிர்களையும், காடுகளையும் அறிவியல்க கண் கொண்டு பார்ப்போம், காப்போம். மூட நம்பிக்கையும், சுயநல வெறியும், பழங்கதைகளும், காட்டுயிர்களும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது என உறுதியாக கூறலாம்.

இந்திய துணைக் கண்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் காடுகளுடன் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றன. சங்க காலம் தொடங்கி இன்று வரை காடுகளில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களது அன்றாட தேவைகளுக்காக தேன், விறகு , பழங்கள் என காடு சார்ந்த பருபொருட்களையும், சில நேரங்களில் விலங்குகளை வேட்டையாடி உணவாக்கி வந்தனர் , இந்த பாரம்பரிய பழக்கங்களால் காடுகளுக்கும், காட்டுயிர்களுக்கும், எந்த சிக்கலும் இல்லை. மனித- காட்டுயிர் மோதல் நிகழ் நிகழ்ந்ததாக பதிவுகள் இல்லை மழைக்காடு என்பது, பூமத்திய ரேகையின் இருபுறமும் இருக்கும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில், மழை நன்கு பெய்யும் இடங்களில் (வருடத்திற்கு 150 செ.மீ மேல் ) பல்லூழி காலமாக வளர்ந்து அடர்ந்து செழித்து இருக்கும் கானகமே மழைக்காடு எனப்படுகிறது.

எவ்வித அடிப்படை வசயடைன் இன்றி, பல்வேறு இன்னல்கள், இயற்கை சீற்றங்களுக்கு இடையிலும் பழங்குடியின மக்கள் காடுகளை பாதுகாத்து வருகின்றனர்.
தமிழகத்தின் மழைக்காடுகளை மக்கள் சோலைக் காடு என்று அழைக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை நாம் அறிந்த மழைக்காடு (அ) சோலைக்காடு ஆகும். நமது தமிழகத்தில் ஜவ்வாது மலையில் மலயாளிகள், அகத்திய மலையில் காணிகள், பழனி மலைத் தொடரில் காடர்கள், புலயர்கள், நீலகிரியில் கோத்தர்கள் என பழங்குடியின மக்கள் பல்வேறு பெயர்களில் வாழ்கின்றனர்.

தமிழகத்தில் சோலைக் காடுகள் மாஞ்சோலை, களக்காடு, டாப்ஸ்லிப், சோலையார், மற்றும் வால்பாறை போன்ற மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. சோலைக் காடுகளின் இயற்கை கட்டமைப்பு பின் வருமாறு அமைகிறது. ஒரு நான்கு சதுர மைல் பரப்பளவுள்ள காட்டில் 750 வகையான மரங்கள், 125 வகையான பாலூட்டிகள், 400வகையான பறவையினங்கள், 100 வகையான ஊர்வன மற்றும் 60 வகையான நீர்- நில வாழ்விகள் இருக்கின்றன. என்கிறார் உயிரியியலாளர்கள் 3 ஒவ்வொரு மரமும் சராசரியான 400 இனப் பூச்சிகளுக்கு வாழிடமாக உள்ளது. எனும் போது பல்லுயிரியத்தின் (Biodiversity) உண்மைம நமக்கு புரிகிறது.

நமது இந்திய துணைக்கண்டத்தின் இருக்கும் இயற்கை வளங்கள் பற்றிய ஒரு கணக்கீடு. உலக மொத்தமான 250000 தாவங்களில் கிட்டதட்ட 15000 வகை தாவரங்களும், உலக மொத்தத்தில் 5சதவீதம் பூமியின் மொத்த நிலப்பரப்பில் இரண்டு சதவீதமுள்ள இந்தியாவில் உள்ளது என்பது மிகவும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள், அதனுடன் இணைந்துவாழும் பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள், செடி, கொடி, புல்,பூண்டு என அமைத்தும் இணைந்த பிணைப்பே பல்லுயிரியம்(Biodiversity) எனப்படுகிறது.

பல்லுயிரியத்துடன் இணைந்த ஒரு கண்ணியாக பழங்குடியிமைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மழைக்காடுகளில் வாழ்ந்து வருகின்றன.

பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்தவரை அதன் பல்லுயிரியத்தன்மை கட்டுக் கோப்பில் இருந்தது. காடுகள், மரம், செடி , கொடிகள், சிறு பூச்சிகள், முதல்பேருயிரான யானைகள் வரை ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. மனிதனும் அதில் ஒரு அங்கம் தான்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பான காலம் வரை அனைத்தும் ஒரே சீராக சென்று கொண்டிருந்தன. ஆங்கிலேயர்கள் நமது நாட்டை அடிமைபடுத்தியவுடன் அவர்களுக்கு தெரிந்தது நமது மழைக்காடுகளும் இயற்கை வளமும் தான் விட்டு வைப்பார்களா?

அன்று ஆரம்பித்த சீரழிவு இன்று வரை முடிவில்லாமல் தொடர்கிறது. அது வரை காடுகளுக்கு பாதுகாப்பாக இருந்த பழங்குடியினர் சிறிது சிறிதாக காட்டிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர்.

காடுகளில் நெடிதுயர்ந்த, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்திருந்த மரங்கள் வெட்டப்பட்டு பல்வேறு பணிகளுக்காக லண்டனுக்கும், இந்தியாவில் இரயில் பாதை அமைப்பதற்கும் கொண்டு செல்லப்பட்டன. நமது காடுகளில் அன்று தொடங்கிய மரண ஒலம் இன்றுவரை தொடர்கிறது உலகில் முக்கிய உயிர் கோளமான மேற்கு தொடர்ச்சி மலையின் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பசமை பாலைவனம் (Greeen Desert ) என்றழைக்கப்படுகின்ற பணப்பயிகளை தேயிலை காபி தோட்டங்கள் பயிரிடப்பட்டன. ஒரு சில பெரு முதலாளிகள் கைகளில் தான் இவையாவும் உள்ளன. பழங்குடியின மக்கள் தேயிலை காபி தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நமது இயற்கை வளங்கள் சிறிது, சிறிதாக அழிக்கப்பட்டு அதன் கடைசிக் கட்டத்தில் இன்று உள்ளது என்பது மிகுந்த வேதனைகுறிய செய்தியாகும்.
காடுகளின் நிலை இப்படி எனில், காட்டுயிர்கள் நிலை மேலும் மோசம், வேட்டையாடுதல் , பெருமைக்காகவும், புகழுக்காகவும் தொடர்ந்து நடைபெற்று ஆங்கிலேய அதிகாரிகளுடன், நமது குறுநில மன்னர்களும் இணைந்து ஆயிரக்கணக்கான காட்டுயிர்களை கொன்றழித்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிந்து, நம்மவர்களின் கையில் ஆட்சி மாறியது. மட்டும் மாறவில்லை மேலும் மோசமாக இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன.
சட்டவிரோதமாக காடுகளுக்குள் செல்வோர் அதிகரிக்கத் தொடங்கினர். வனத்துறை உருவாக்கப்பட்ட பிறகுப் நிலைமை சீர் அடையவில்லை இந்த காலகட்டத்தில் பழங்குடியின மக்கள் காடுகளுக்கு செல்வதும், படுபொருட்களை சேகரிப்பதும் வனத்துறையின் அனுமதியின் பெயரிலேயே நடைபெற்றது.
1972-ம் ஆண்டு அமலாக்கப்பட்ட காட்டு உயிரினங்கள் (பாதுகாப்பு ) சட்டம், பழங்குடியின மக்களுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது காடுகளில் வாழ்வதே கேள்விக்குறியானது.

வனத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த பின் காடுகளும், காட்டுயிர்களும் செழித்திருக்கிறதா? காடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளால் வாகனங்களில் அடிபட்டு இறப்பது, சட்ட விரோதமாக காட்டுயிர்களை கொல்வது. மரங்களை வெட்டிகடத்துவது, விளை நிலங்களை பெருக்குவது, மின் ஊர்தியில் , மின்சாரம் பாய்ச்சி என பல்வேறு வடிவங்களில் காட்டுயிர்கள் இறப்பது என இந்த நிமிடம் வரை தொடர்கிறது.

சில புள்ளி விவரங்கள் :

- சென்ற நுற்றாண்டின் தொடக்கத்தில் லட்சத்தை தொட்டிருந்த பேருயிர்களான யானைகள், இன்று 40,000-க்கும் குறைவு.
- 40000-க்கும் அதிகமாக நமது காடுகளில் கம்பீரமாக சுற்றித்திரிந்த தேசிய விலங்கான புலிகள், இன்று 1400-க்கும் குறைவாக, மனிதருடன் ஜீவ மரண போராட்டம் நடத்துகின்றன.
- பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முடன் வாழ்ந்த சிவிங்சிப் புலி, (Chettah ) இன்று நம்முடன் இல்லை, முற்றிலும் அழிக்கப்பட்விட்டது?
- ஆயிரக்கணக்கில் இருந்த சிறுத்தைகள் (Peoperd) இன்று சில நூறுகளாக வாழ்கின்றன.
- பசுமையான மழைக் காடுகளில் வாழும் சிங்கவால் குரங்கு, (Lion tail Macouque ) உலகின் ஆபத்திற்குள்ளான உயர் வகை விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய விலங்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய விலங்குகளின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 195-க்குள் இருக்கலாம்.
- இந்திய 3 நாய்களின் எண்ணிக்கை ஏழத்தாழ 800-க்குள் இருக்கலாம்.
- தமிழகத்தில் சாதாரணமாக காணப்பட்ட இந்திய மயில், (Indian Bustard ) தற்போது தமிழகத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இராஜஸ்தான் மற்றும் சில பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது குறைந்த எண்ணிக்கையில்
- இந்தியாவின் ஒன்பது மான் இனங்களில் 5வகை மான் இனங்கள் இன்று மிகவும் அரிதாகி விட்ன.
- இந்தியா முழுவதும் பரவியிருந்த ஆசிய சிங்கங்கள் ,( Asiatic lion ) இன்று குஜராத்தின் கிர் சரணலாயத்தில் மட்டும் ஏறத்தாழ 500க்குள் வாழ்கிறது.
- திருகு கொம்புடன் அழகுறசுற்ரித் திரிந்த வெளிமான்கள், (Black buck ) இன்று கிண்டி தேசிய பூங்கா, கோடியக்கரை வெளிமான் சரணாலயம், சத்தியமங்கலம் காடு, இராஜஸ்தானில் சில பகுதிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது.
- காடுகளின் துப்புறவாளனாக திகழ்ந்த பிணம் தின்னிக் கழுகுகள் (Valture ) சத்திய மங்கல காட்டில் 50க்கும் குறைவாக உள்ளது. வட இந்திய காடுகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது
- பல்வேறு பறவை இனங்களும் இன்று அழிவின் விளிம்பில் காணப்படுகிறன.
- காட்டுயிர்களின் வாழிட எல்லைகள், வழித்தடங்கள் வேகமாக சுருங்கி வருதல், காட்டுயிர்களின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணம் மேல் குறிப்பிட்டவற்றில் அழிவுக்கு ஒரு முக்கிய காரணம்.
- மேலே குறிப்பிட்டவற்றில் அனைத்தும் மக்கள் மக்கள் தோகை பெருக்கத்தினால், மனிதனின் பேராசை மற்றும் சுய நலத்தால் மட்டுமே நடந்தவைகளாகும்.
- மனிதன் தன்னை ஆகச் சிறந்தவனாக நிலைத்தன் விளைவு தான் காட்டுயிர்களின் அழிவு.
- பழங்குடியின மக்களின் பாதுகாப்பில் இருந்த வரை காடுகளும் காட்டுயிர்களும் செழிப்பாகவே இருந்தன.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த மக்கள் தொகை , இன்று 110க் கோடியாக உயர்ந்துள்ளது, காடுகளுகம், காட்டுயிர்களும் வேகமாக அழிந்தே வந்துள்ளது.

இயற்கை வளங்கள்சீரழிவிற்கு மக்கள் தோகை பெருக்கம் காடுகளையும், காட்டுயிர்களையும் வணிக நோக்கில் பார்ப்பது காடுகளை விளை நிலங்களாக மாற்றுவது காடுகளை விளை நிலங்களாக மாற்றுவது போன்றவை முக்கிய காரணங்களாக விளங்குகிறன.

இன்னும் கூட சில சமூகங்கள் காட்டு உயிரினங்களின் பாதுகாப்புக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. துhவர இனங்களையும், விலங்குகளையும், குறிப்பாக அச்சுறுத்தபட்ட இனங்களையும், பாதுகாப்பதற்காக சுமார் 26 கொள்கைகளை கடைபிடிக்கும் 399 வருடப் பழமையுள்ள விஷ்ணுயி என்ற வட இந்திய மக்களினம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

முதாளித்துவ சமூகத்தின் உச்சம் ஏகாதிபத்தியம் என்றார் காரல் மார்க்ஸ், பொதுவுடைமை சமுகம் மட்டுமே மனிதனுக்கு, இயற்கைக்குமான ஒத்திசைவைத் தருகிறது. பழங்குடியினமக்கள் காடுகளின் இருந்து அப்புறபடுத்தப்பட்ட நிலையில் காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்க பகுத்தறிவு சிந்தனையோடு, அறிவியல் பார்வையில், பொதுவுடைமை பாதையில் மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வளலர்களும், இயற்கையியலாளர்கள் என அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய காலமிது.
காடுகளும், காட்டுயிர்களும் இருந்தால் மட்டுமே , மனித சமூகம் பூமியில் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை அனைவருக்கும் சொல்லி வைப்போம்.

பி.கு. பழங்குடியின மக்களின் வாழ்வியல் நிலை பின்புலம், அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டது. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அல்லலுறுவது போன்ற சிக்கல்கள் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம். வேறோடு சந்தர்ப்பத்தில் அதை காண்போம்.

துணை நின்ற நூல்கள்
1. மழைக்காட்டில் ஒரு மாலை நேரம்- சு தியோடர் பாசுகரன் - காட்டுயிர் கூதல் 2004 இ.எண் 16
2. பூவுலகு - அக்டோபர் நவம்பர் - 2009
3. மழைக் காட்டில் ஒரு மாலை நேரம் - பு. தியோடர் பாசுகரன் - காட்டுயிர் கூதல் 2004 இஎண்-16
4. காட்டு உயிரினங்கள் ஒரு தகவறிக்கை - காட்டுயிர்-குளிர் 2005 இ.எண்.19
காட்டு உயிரினங்கள் ஒரு தகவறிக்கை - காட்டுயிர் - வேனில் 2005 இ.எண். 21

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS