காடுகளும் காட்டுயிர்களும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் - சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 01 September 2011 16:28
- Written by Super User
காடுகளும் காட்டுயிர்களும் இல்லாத ஒர் உலகை கற்பனை செய்து பாருங்கள். கற்பனையே படுபயங்கரமாக இருக்கிறதல்லவா? இவ்வுலகம் நிலைத்திருக்க காடுகளும் காட்டுயிர்களும் சிறப்பாக பங்காற்றுகின்றன.
காடுகள் இல்லையெனில் காடுகளை சார்ந்து வாழும் காட்டுயிர்களான புலி முதல் சிறு பூச்சி வரை புல் பூண்டு ஆறு குளங்கள் ஏரிகள் என்று யாவும் இருக்காது.
காடுகளே நம் வாழ்வின் ஆதாரம். ஒரு நாட்டிற்கு சராசரிய 33சதவீதம் பரப்பளவு காடுகள் தேவை ஆனால் தமிழகம் பெற்றிருப்பதோ 17 சதவிதத்திற்கும் குறைவே. காடுகள் செழித்தால் மட்டுமே காட்டுயிர்கள் வளமுடன் வாழும். பருவமழை பொய்க்காமல் இருக்கும். நிலத்தடி நீர் பெருகும். குடி நீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் ஏரி ஆறு குளங்கள் நிரம்பி காணப்படும்.
காடுகளிகன் வளத்திற்கு குறியீடாக புலி யானைகளை குறிப்பிடலாம். ஒரு காட்டில் புலி செழித்து இருந்தால் இரை விலங்குகளான மான்கள் காட்டு மாடுகள் யாவும் சமன் நிலையில் இருக்கும். காட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் இரை விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து மேய்ச்சல் பரப்பு குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும். இதனால் காடுகளின் வளம் சீர்குலையும்.
காடுகளில் யானைகளின் எண்ணிக்கை குறைந்தால் யானையை சார்ந்து வாழக் கூடிய சிறு விலங்குகள் பறவைகள் அழியும் யானைகளுக்கு ஒரு நாளைக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை பசுந்தாவரங்கள் உணவாக தேவைப்படுகிறது.
தன் உணவுக்காக ஒரே இடத்தில் தங்காமல் காடுகள் முழுக்க சுற்றியலைந்து கிளைகளை ஒடித்தும் முறித்தும் தாவரங்களை உண்கின்றன யானைகள் சாப்பிட்டது போக மற்றதை பல வித மான்கள் காட்டு மாடுகள் உண்கின்றன. இலைகளுடன் தாவரங்களின் விதைகளாகயும் உண்டு. தன் கழிவுகள் மூலம் வீரியமிக்க விதைகளாக காடுகள் முழுக்க பரப்புகிறது. காடுகள் செழிக்க இது ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும் யானைகள் நடந்து செல்லும் போது மண் கிளறப்படுவதால் வெளிவரும் பூச்சிகளை உண்ணிக கொக்கு நாகணவாய் போன்ற பறவைகள் உண்கின்றன. கோடை காலத்தில் தும்பிக்கையின் நுண்ணுர்வு மூலம் நீர் ஊற்று உள்ள பகுதியை கண்டுபிடித்து நீர் பறுகுவதால் மற்ற சிறிய விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெரும் நன்மை புரிகிறது.
இவ்வாறு பெரிய விலங்குகள் சூழலியலில் தன் பங்களிப்பை செவ்வனெ செலுத்துகின்றன. சிறு மற்றும் பெரிய விலங்குகளும் சூழல் சமன்பாட்டில் பெரும் பங்காற்றுகின்றன.
புலி சிறுத்தை போன்ற இரை கொல்லிகள் சாப்பிட்ட உணவின் எஞ்சிய பகுதியை ஒநாய் நரி செந்நாய் போன்ற சிறு விலங்குகள் உண்டு காட்டை சுத்தப்படுத்துவதுடன் தானும் விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன.
பலவித மான்கள் காட்டு மாடு போன்றவை இரை கொல்லிகளான புலி சிறுத்தை சிங்களுக்கு இரையாவதுடன் புல் தாவரங்களை உண்டு மேய்ச்சல் பரப்பு அதிகரிக்காமல் சமன் நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
சூழல் சமன்பாட்டில் பறவைகளின் பங்பளிப்பு.
பறவைகள் யாவும் கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு இதமாகவும் அமைந்திருக்கின்றன. நீர்ப் பறவைகள் யாவும் நீர் வரத்திற்கு முக்கிய குறியீடாக விளங்குகின்றன.
நீர் நிலைகளில் ஆயிரக்கணக்கில் பறவைகள் குவியும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பறவைகளின் எச்சங்கள் சிறந்த உரமாகின்றன நீரில் உள்ள மீன்கள் பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகின்றன.
பழங்களை உண்ணும் சின்னாள்கள் (mulbuls) குக்குறுவான்கள் (Barbet) இருவாயன்கள் அல்லது இருவாட்சி (hornbill) போன்ற பறவை இனங்கள் தான் உண்ணும் பழங்களின் விதைகளை பரப்பி பல தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு உதவுகின்றன.
பெருப்பான்மையான பறவைகள் பூச்சியுண்ணிகளாக உள்ளன. கீச்சான்கள் ( shrike ) நாளொன்றுக்கு 50கிராம் வரையிலும் பனங்காடைகள் 100கிராம் வரையிலும் நாகனாவாய் என்கிற மைனாக்கள் 150கிராம் வரையிலும் புச்சிகளை தின்கின்றன என்கிறது ஒரு கணக்கீடு.
இந்தியாவில் சுமார் 30000 வகைப் பூச்சிகள் இருக்கின்றன. இதில் பெரும்பான்மையான பூச்சிகளைப் பறவைகளே உணவாக்கி அழிக்கின்றன. பொருளாதார வேளாண்மையில் பறவைகளின் பங்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மகறந்த சேர்க்கைக்கு உதவக் கூடிய பறவைகளாக தேன் சிட்டு தையல் சிட்டு பூஞ்சிட்டு போன்றவற்றை கூறலாம். பலவித பூக்களின் தேனை உண்டு மகறந்த சேர்க்கை நிகழ்த்துகின்றன.
காடுகளை சுத்தப்படுத்தும் துப்புரவாளனாக பிணப் தின்னி கழுகுகள் விளங்குகின்றன. இறந்த விலங்குகளை புலி சிறுத்தை சிங்கம் போன்ற இரை கொல்லிகள் உண்டது போக எஞ்சியதை நரி ஒநாய் செற்நாய் போன்ற சொறி விலங்குகளுடன் தானும் உண்டு காடுகளை சுத்தப்படுத்துகின்றன. எஞ்சியவற்றை புழு பூச்சிகள் உண்ண மற்றது மண்ணில் மக்கி புதிய தாவரங்கள் முளைக்க புதிய உணவு சுழற்சி தொடங்குகிறது.
நகரங்களை சுத்தப்படுத்தும் பறவையாக நாம் அன்றாடம் கானும் காக்கையை கூறலாம். தினக்தேனும் நகரத்தில் குவியும் கற்றகளை காக்கையுடன் நாகணவாயும் சோந்து உண்டு நகரை தூய்மைப்படுத்துகிறது.
விலங்குகளும் பறவைகளும் சுற்றுக் சூழலில் செலுத்தும் பங்களிப்பை போலவே பூச்சிகளும் செயலாற்றுகின்றன. சிறு பூச்சிகள் புழுக்கள் வண்ணத்தும் பூச்சிகள் வண்டுகள் என யாவும் சூழல் சமன்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன.
கண்ணுக்கு விருந்தாக பல வண்ணங்களில் காணும் வண்ணத்துப் பூச்சிகள் மகறந்த சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தும்பிகள் யாவும் பூச்சியுண்ணிகளாக விளங்குகிறது. பூச்சிகள் சமன் நிலையில் இருக்க பறவைகளுடன் தும்பிகளும் இணைந்து பங்காற்றுகின்றன. சிறு பூச்சிகள் வண்ணுத்துப் பூச்சிகள் வண்டுகள் போன்றவையே இவற்றின் முக்கிய உணவாகும். நாகணவாய் பச்சை பஞ்சுருட்டான் போன்ற பல பறவை இளங்களுக்கு தானே உணவாக அளமகின்றன தும்பிகள்.
விவசாயிகளின் நண்பனான மண்புழு மண்ணை புரட்பு போட்டு காற்று உள்ளே புக வழி ஏற்படுத்துகிறது. மண்ணை இலகுவாக்குகிறது. நமது வீட்டின் மூலைகளில் வலைகளை விள்ளி உணவுக்காக காத்திருக்கும் சிலந்திகளுக்கு கொசுக்களே முக்கிய உணவாகின்றன.விவசாயிகளுக்கு எதிரியாக உள்ள எலிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நண்பனாக பலவித பாம்புகள் விளங்குகின்றன.இவ்வாறு பல்வேறு பூச்சியினங்களும் பறவைகளும் விளங்குகளும் சுற்றுச் சூழலிலும் மனிதர்களுக்கு நன்மை புரிகின்றன.
இவ்வுலகத்தில் பரவி இருக்கும் காட்டுயிர்களான விலங்குகள் பறவைகள் புழு பூச்சிகள் செடி கொடி தாவர வகைகள் என அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து ஒழுங்கமைப்புடன் செயல்புரிகின்றன.
கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் 50 சத விதமான இயற்கை வளங்களை அழித்த மனிதன் இனியாவது தவறை திருத்தி “மற்ற உயிரினங்களோடு இணைந்த ஒரு இணைப்பே மனிதன்” என்ற பேருண்மையை உணர வேண்டும்.
காட்டுயிர்களின் செயல்பாடுகளை உணர்ந்து இயற்கையோடு இணைந்து வாழ மனிதன் முன் வர வேண்டும்.
துணை நின்ற நூல்
1. இயற்கை செய்திகள் சிந்தனைகள் ச.முகமது அலி. இயற்கை வரலாறு அறக்கட்டளை - பக்.97
ஆந்தைகள் : அபசகுணத்தின் குறியீடா? ஆஸ்திரேலிய பறவையா? ஒரு மீளாய்வு -சண்முகானந்தம்






