இலக்கியம்
மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-4 ]
- Details
- Published on Thursday, 17 May 2012 13:29
- Written by அருள் எழிலன்
”ஏனென்றால் நமக்கு உதவ கடவுளைத் தவிற வேறு எவரும் இல்லை” பிரான்சிஸ் சேவியர்.
புதிய எஜமானர்களாக போர்ச்சுக்கீசியர் கொச்சியிலிருந்து வந்து மூர்களை அடக்கியபின் பிரதிபலனுக்காக முப்பது கிராமங்களைச் சார்ந்த சுமார் 20,000 பரவர்களை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக்கியதுடன் 1532-ல் போர்த்துக்கீசியர் தூத்துக்குடியில் கால் பதித்தனர். கன்னியாகுமரி தொடங்கி இராமேஸ்வரம் வரையில் சுமார் 30 கிராமங்கள் பரவர்களின் கிராமங்களாக இருந்தன. அதில் முத்துக்குளித்துறையின் தலைமையாக 16-ஆம் நூற்றாண்டில் உருவான கிராமம்தான் தூத்துக்குடி.
மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-3 ]
- Details
- Published on Wednesday, 02 May 2012 09:04
- Written by அருள் எழிலன்
முத்துக்களின் கதை அல்ல, மூழ்கியவனின் கதை
காட்டைப் போல கடலும் அரிய வகை உயிரினங்களைக் கொண்டது. காட்டில் அரியவகை மரங்களும், மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்களும், லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்கி உருவான கனிமங்களும் இருப்பது போன்று கோடிக்கணக்கான ரகசியங்களும் அரிய வகை கனிமங்களும் கொட்டிக்கிடப்பதுதான் கடல்.
திணையியல் கோட்பாடுகள் - பாமயன்
- Details
- Published on Thursday, 15 March 2012 11:02
- Written by Super User

உலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. சிந்துச் சமவெளி நாகரிகம், நைல் நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்று பண்டை நாகரிகங்களைப் பற்றிய பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்த நாகரிகங்களில் மக்கள் கூட்டத்தை இயக்குகின்ற கூறுகளாக இருப்பது சடங்குகளும், பூசனைகளுமாக இருக்கின்றன. சடங்குகளில் இருந்து கட்டி எழுப்பப்பட்ட குமுகங்களாக இருந்துள்ளதை ஆய்வளார்கள் வெளிப்படுத்துகின்றனர்.
மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-2 ]
- Details
- Published on Monday, 23 April 2012 07:07
- Written by அருள் எழிலன்
’’தேச விரோதிகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு அணு உலைக்கு எதிராகப் போராடுகிறார்கள் இந்துக்களே உஷார்! 2011- டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் நான் நாகர்கோவிலுக்குச் சென்ற போது அந்த நகரமெங்கும் இந்து அமைப்புகள் ஒட்டியிருந்த போஸ்டரின் வாசகங்களில் இதுவும் ஒன்று. வந்தேரி கிறிஸ்தவர்கள் என்றும், திருச்சபைப் பாதிரிகளின் போராட்டம் என்றும் தொடர் பிரச்சாரம் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்து அமைப்புகளும் சரி இனவாத பாரதீய ஜனதா கட்சியும் சரி கணிசமான செல்வாக்குள்ளக் கட்சிகள்.
லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு - குறும்பனை சி.பெர்லின்
- Details
- Published on Thursday, 23 February 2012 12:28
- Written by Super User

கேள்வி: தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத மந்திரி என்று யரையாவது சொல்லமுடியுமா?
பதில்: காமராசர் ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்த லூர்தம்மாள் சைமன் தான் லஞ்சம் வாங்காத மந்திரி.
மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம் 1 ]
- Details
- Published on Tuesday, 20 March 2012 06:47
- Written by டி.அருள் எழிலன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாப்ளா போராட்டத்தை விவசாயிகளின் எழுச்சி என்று பதிவு செய்கிறது வரலாறு. பிரிடீஷாருக்கு எதிரான கிளர்ச்சியில் பங்குபெற்ற மைசூர் சமஸ்தானமும் அதன் கீழ் இயங்கிய குட்டிக் குட்டிக் சமஸ்தானங்களும் வரிகொடா கலகத்தைத் துவங்கிய போது அதுவும் விவசாய மக்களின் போராட்டமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு வர்க்கமாக விவசாயிகளை அடையாளப்படுத்தவும் பொது வெளியில் அதை அங்கீகரிக்கவும் செய்யும் பொது மனம்.
தமிழ் நாடா, திராவிட நாடா? - தி.பரமேசுவரி
- Details
- Published on Tuesday, 21 February 2012 09:52
- Written by Super User
“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.






