Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-4 ]

”ஏனென்றால் நமக்கு உதவ கடவுளைத் தவிற வேறு எவரும் இல்லை” பிரான்சிஸ் சேவியர்.

புதிய எஜமானர்களாக போர்ச்சுக்கீசியர் கொச்சியிலிருந்து வந்து மூர்களை அடக்கியபின் பிரதிபலனுக்காக முப்பது கிராமங்களைச் சார்ந்த சுமார் 20,000 பரவர்களை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக்கியதுடன் 1532-ல் போர்த்துக்கீசியர் தூத்துக்குடியில் கால் பதித்தனர். கன்னியாகுமரி தொடங்கி இராமேஸ்வரம் வரையில் சுமார் 30 கிராமங்கள் பரவர்களின் கிராமங்களாக இருந்தன. அதில் முத்துக்குளித்துறையின் தலைமையாக 16-ஆம் நூற்றாண்டில் உருவான கிராமம்தான் தூத்துக்குடி.

Read more:

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-3 ]

தூத்துக்குடி முத்துக்குளித்துறை ஓவியம்முத்துக்களின் கதை அல்ல, மூழ்கியவனின் கதை

காட்டைப் போல கடலும் அரிய வகை உயிரினங்களைக் கொண்டது. காட்டில் அரியவகை மரங்களும், மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்களும், லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்கி உருவான  கனிமங்களும் இருப்பது போன்று கோடிக்கணக்கான ரகசியங்களும் அரிய வகை கனிமங்களும் கொட்டிக்கிடப்பதுதான் கடல்.

Read more:

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் - கணேசகுமரன்

ஏ எலினே எலி எலி .... ஏ எலினே எலி எலி ... மசாகா கின் மாராகே... மசாகாகின் மாராகே - விளக்கம் இறுதியில்.

Read more:

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-2 ]

’’தேச விரோதிகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு அணு உலைக்கு எதிராகப் போராடுகிறார்கள் இந்துக்களே உஷார்! 2011- டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் நான் நாகர்கோவிலுக்குச் சென்ற போது அந்த நகரமெங்கும் இந்து அமைப்புகள் ஒட்டியிருந்த போஸ்டரின் வாசகங்களில் இதுவும் ஒன்று. வந்தேரி கிறிஸ்தவர்கள் என்றும், திருச்சபைப் பாதிரிகளின் போராட்டம் என்றும் தொடர் பிரச்சாரம் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்து அமைப்புகளும் சரி இனவாத பாரதீய ஜனதா கட்சியும் சரி கணிசமான செல்வாக்குள்ளக் கட்சிகள்.

Read more:

நேர்காணல் : விழுப்புரம் கோ.செங்குட்டுவன் -பாரதி இளவேனில்

விழுப்புரம் நகரில் பிறந்த கோ. செங்குட்டுவன் கலை இலக்கியப் பண்பாட்டுத் துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பத்திரிகையாளராகத் தனது சமூகப் பணியைத் தொடங்கியவர்.

நெம்புகோல், தமிழிலக்கியப் பேரவை, தென்பெண்ணை போன்ற கலை இலக்கிய இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டவர்.

Read more:

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம் 1 ]



வரலாற்றுச்  சிறப்பு மிக்க மாப்ளா போராட்டத்தை விவசாயிகளின் எழுச்சி என்று பதிவு செய்கிறது வரலாறு.  பிரிடீஷாருக்கு எதிரான கிளர்ச்சியில் பங்குபெற்ற  மைசூர் சமஸ்தானமும் அதன் கீழ் இயங்கிய குட்டிக் குட்டிக் சமஸ்தானங்களும் வரிகொடா கலகத்தைத் துவங்கிய போது அதுவும் விவசாய மக்களின் போராட்டமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.  ஒரு வர்க்கமாக விவசாயிகளை அடையாளப்படுத்தவும் பொது வெளியில் அதை அங்கீகரிக்கவும் செய்யும் பொது மனம்.

Read more:

மல்லாட்டை மண்வாசம் : விழுப்புரம் மாவட்டப் படைப்பாளிகளுடன் ஓர் சந்திப்பு -பாரதி இளவேனில்

விழுப்புரம் வட்டாரத்துக்கு மற்றுமொரு பெயருமுண்டு.

“மல்லாட்டை ஜில்லா”

மணிலாப் பயறு அதிகம் விளைவதால் இந்தப் பெயர். இந்த வட்டாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் தொடங்கி, நிகண்டு, மரபிலக்கியம், நவீன இலக்கியம் என வளர்ந்து ஹைக்கூ ஆய்வாளர்கள் வரை பல்வேறு பரிமாணப் படைப்பாளிகள், கலைஞர்கள் பலருண்டு.

Read more:

திணையியல் கோட்பாடுகள் - பாமயன்



உலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. சிந்துச் சமவெளி நாகரிகம், நைல் நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்று பண்டை நாகரிகங்களைப் பற்றிய பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்த நாகரிகங்களில் மக்கள் கூட்டத்தை இயக்குகின்ற கூறுகளாக இருப்பது சடங்குகளும், பூசனைகளுமாக இருக்கின்றன. சடங்குகளில் இருந்து கட்டி எழுப்பப்பட்ட குமுகங்களாக இருந்துள்ளதை ஆய்வளார்கள் வெளிப்படுத்துகின்றனர்.

Read more:

நூல் மதிப்புரை : சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம் -ஜெகன்

திருத்தல்வாதத்தை எதிர்க்கும் முயற்சி…


தற்போதைய தமிழக அறிவுத்தளத்தில் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனேகம்பேர் மார்க்சியத் திருத்தல்வாதத்திற்கு பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்பது, உண்மையான, உறுதிப்பிடிப்புளள மார்க்சியவாதிகளுக்கான சவால்களை கடினப்படுத்தியுள்ளது.

Read more:

லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு - குறும்பனை சி.பெர்லின்


கேள்வி: தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத மந்திரி என்று யரையாவது சொல்லமுடியுமா?


பதில்: காமராசர் ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்த லூர்தம்மாள் சைமன் தான் லஞ்சம் வாங்காத மந்திரி.

Read more:

இர்பான் அபீப் அவர்களின் மார்க்சிய வரலாற்றுவரைவியல் பற்றிய ஒரு பார்வை -அ.கா.ஈஸ்வரன்

இந்திய வரலாறு குறித்து ஆய்வுரைகள் (ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி) என்ற முப்பது ஆண்டுகளாக இர்வான் அபீப் எழுதிய தொகுப்பு நூல் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இதில் முதல் கட்டுரை மார்க்சிய வரலாற்றுவரைவியல் குறித்த பிரச்சினைகள் (Problems of Marxist Historiography) என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

Read more:

தமிழ் நாடா, திராவிட நாடா? - தி.பரமேசுவரி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Read more:

[பகுதி 2] தலித் இலக்கியத்தின் தந்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்-டி.எல்.சிவகுமார்

தலித் இலக்கியம் ஒரு பார்வை :

“தலித் என்பது ஒரு மராத்திய சொல் “தல“ என்பது மராத்திய மொழியில் புமியையும், மண்ணையும் குறிக்கும். அதில் வேர்பிடிக்க ஒரு பொருளையும் குறிக்கும் இந்த மண்ணில் வேர்பிடித்தவர்களே என்ற பொருளில் “தலித்“ என்கிற சொல்லைப் பயன்படுத்துறோம்” என்று சுபமங்களா இதழில் தயாபவார் கூறுகிறார்.

Read more:

தமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..! -ஆர்த்தி

ஆங்கில இலக்கியம் பற்றியும், ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் மீதும் அழிக்கமுடியாத சில பொதுவான கருத்துகள் உண்டு. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல,

Read more:

(மூட) நம்பிக்கையால் தன்னம்பிக்கையை, வீரத்தை, ஆற்றலை ,சுயசிந்தனையை இழந்த தமிழர்கள் -சண்முகானந்தம்

கடவுளைப் பற்றி நினைத்து மனிதன் ஏங்குவதைத் தடுக்க சமூகப் புரட்சி ஒன்றால் தான் முடியும்.
-காரல் மார்க்ஸ்.


வரலாற்றுக்கு முந்திய காலத்தில் மனித இனம் தன்னை மிஞ்சிய சக்திகளாக காற்று, நிர், நெருப்பு போன்றவற்றை கண்டு அஞ்சியது. கருவிகளை கண்டுபிடிக்கும் முன்னர் நாகரிகமற்ற பொதுவுடைமை சமூகம் நிலவியது.

Read more:

விளிம்பு நிலை மனிதர்கள் : நிறம் மாறும் பூக்கள் - கணேச குமாரன்

முன்பெல்லாம் புலனாய்வு பத்திரிகைகளில் வாராவரம் அவர்கள் ஏதாவது கோரித்தைதளை அட்டையொன்றில் எழுதியபடி தென்படுவர்கள். எங்களுக்கும் ரேஷன் கார்டு எங்களுக்கும் பாஸ்போர்ட் எங்களுக்கும் வேலை இப்போதெல்லாம் அப்படியில்லை .

Read more:

சிட்டுக்குருவி -K.R. நந்தகுமார்


சிட்டுக்குருவி, சிட்டாய் பறந்துகொண்டிருந்த சிட்டுக்குருவிகளின் காலம் போய்.., இன்று சிட்டுக்குருவிகளைகாண மனிதர்கள் சிட்டாய் பறந்து கொண்டிருக்கும் காலம் இது. மனிதனுக்கே மனிதன் அடைக்கலம் தராத இந்த காலத்தில் அடைக்கலப் பறவையாம்
சிட்டுக்குருவிக்கு எங்கு அடைக்கலம் தரப்போகிறான் ...... இந்த மனிதன்.

Read more:

யார் இவர்கள் ? எங்கிருந்து வந்தார்கள்? - கணேச குமாரன்

ஒரு தகவல்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377ன்படி தண்டனைக்குரிய குற்றமாக ஓரினச் சேர்க்கை கருதப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கிலாந்தில் போடப்பட்ட இப்பழமையான சட்டம் அங்கு நடைமுறையில் இல்லை. [ சற்றுமுன் தான் அதற்கு தடை விதித்திருக்கிறது நீதிமன்றம் ]

Read more:

உறங்கா நகரம் - சமன் செய்யப்பட முடியாத இரவுகளின் துயரம் -இவள் பாரதி

உறங்கா நகரம் - வெ. நீலகண்டனின் அற்புதமான பதிவு என்று ஒற்றைவார்த்தையில் தொலைக்காட்சியில் ஒரு படத்திற்கான விமர்சனத்தை சொல்வது போல் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் இதைப் போலான படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் அனுபவங்களே கற்பனைகளை விட உயர்ந்தவை என்ற மனப்பாங்கிலும் இந்நூல் குறித்து சில கருத்துகளை முன்வைக்கிறேன். கற்பனைகளை விட விசித்திரமானவை உண்மை.

Read more:

இவர்களும் மனிதர்கள் தான். - கணேச குமாரன்

THE DIFFERENCE BETWEEN ME AND A MAD MAN IS THAT I’M NOT MAD

Read more:

தலித் இலக்கியத்தின் தந்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் -டி.எல்.சிவகுமார்

முன்னுரை:

நீ ஒரு பிராமணப் பெண்ணுக்கு பிறந்த பிராமணனென்றால்
நீ வேறு வழியாக ஏன் பிறக்கவில்லை?

என்று இந்திய சமூகத்தில் புரையோடியிருந்த சாதிய அமைப்பைக் குறித்து கேள்வி எழுப்பிய 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவவாதியும் கவிஞருமான கபீரின் பக்திமுறையைப் பின்பற்றி வந்த குடும்பம்தான் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குடும்பம்.

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.