[தமிழ்ச் செய்வியல் நூல்கள் வரிசை] - பரிபாடல் : முனைவர் ஆ. மணவழகன்
- Details
- Published on Thursday, 15 March 2012 07:07
- Written by Super User

எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல் பரிபாடல். எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பழம்பாடல் இதனை ‘ஓங்கு பரிபாடல்’ என்று சுட்டுகிறது. இதனால் இதன் சிறப்பு விளங்கும்.
[ செவ்வியல் நூல்கள் வரிசை ] பதிற்றுப்பத்து - ஆ. மணவழகன்
- Details
- Published on Monday, 20 February 2012 13:07
- Written by Super User
சங்க இலக்கிய நூற்தொகுப்பான எட்டுத்தொகையின் புறம் சார்ந்த நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. இது சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடக்கூடிய சிறப்பினைக் கொண்டது. இதில், பத்து சேர அரசர்களைப் பற்றிப் பத்துப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்தின் கடின நடை காரணமாக இலக்கிய ஆசிரியர்கள் இதனை ‘இரும்புக்கோட்டை’ என்று வழங்குவர்.
முதலாளித்துவ சமூக உற்பத்திமுறை ! -அ.கா.ஈஸ்வரன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 15:58
- Written by editor
முதலாளித்துவத்தில் உழைப்புச் சக்திகள் -
நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியிலிருந்து (சிதைவிலிருந்து) தோன்றிய, புதிய உற்பத்தி முறையே முதலாளித்துவமாகும். நிலப்பிரபுத்துவத்தின் ஊடே தோன்றிய சிறுபண்ட உற்பத்தியாளர்கள், மற்றும் நிலப்பிரபுத்துவத்தால் தூக்கி எறியப்பட்ட, அதவாது நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட வேலையற்ற பட்டாளம் ஆகியவற்றில் முதலாளித்துவத்தின் தொடக்கம் அடங்கியிருக்கிறது. அதாவது முதலாளித்துவம் தோன்றுவதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருந்தன.
மாவோவிற்குப் பிந்தைய சீன இடதுசாரி சமீபத்திய விவாதங்கள் - ஹூன் சூ (தமிழில் பாலன்)
- Details
- Published on Sunday, 20 November 2011 03:36
- Written by Super User
சீன இடதுசாரிகளுக்கிடையிலான அரசியல் மோதல்கள் முன்னெப்போதும் இராத வகையில் இந்த ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. எதிரெதிர் முகாம்களின், தீவிரமான மாறுபட்டட அரசியல் நிலைகுறித்த விவாதங்களை,
சமூக உணர்வுநிலை வடிங்களில் ஒன்றான மதம் -அ.கா.ஈஸ்வரன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 10:18
- Written by editor
சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.
தொல்காப்பியப் பதிப்புரை - பா.ஜெய்கணேஷ்(பா.இளமாறன்)
- Details
- Published on Thursday, 03 November 2011 18:00
- Written by Super User

தொல்காப்பியப் பதிப்புரைகள்: 1847 - 1950
(புனைவிலிருந்து தன்னுணர்விலிருந்து ஆய்வை நோக்கி…)
தமிழ் இலக்கண, இலக்கியங்களை வாசிப்பது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு அவற்றிற்கு வெளிவந்த பதிப்புகளையும், அப்பதிப்புகள் வழங்கும் தரவுகளையும் வாசிப்பது இன்றைய நிலையில் மிகமுக்கியச் செயல்பாடாக அமைகின்றது.
பெண் கவிஞர்களின் அகமும் புறமும் -கவிஞர் நந்திதா
- Details
- Published on Sunday, 07 August 2011 17:39
- Written by editor
"பாட்டெழுதுறது பசி மாதிரி - பூரணி" ; இன்றைய காலங்களில் மேற்கூறிய தன்மையில் பெண்களின் எழுத்து வகையிலான பதிவுகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன எனலாம். இருப்பினும் சற்று முன்னோக்கிப் பார்க்கையில், மிகக் குறைந்த அளவிலான பதிவுகளே வரலாற்றில் காண முடிகிறது.
செவ்வியல் நூல்கள் வரிசை (எட்டுத்தொகை - ஐங்குறுநூறு) -முனைவர் ஆ. மணவழகன்
- Details
- Published on Thursday, 03 November 2011 17:41
- Written by Super User
எட்டுத்தொகை இலக்கியங்களுள் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அக இலக்கியம் ஐங்குறுநூறு. இவ்விலக்கியமே எட்டுத்தொகையுள் அடியளவால் மிகவும் சிறிய பாடல்களைக் கொண்டது (3 அடி முதல் 6 அடிவரை).
திருமிகு திருநங்கைகள் -அக்ஷயா ராஜேந்திரன்
- Details
- Published on Sunday, 07 August 2011 17:34
- Written by editor
சமூகத்தில் சிலரால் மதிக்கப்பட்டு, பலரால் அவமதிக்கப்பட்டு மனதாலும் உடலாலும் வேறுபட்டு தங்களை யாராவது புரிந்து கொள்ள மாட்டார்களா? அரவணைக்க மாட்டார்களா? எங்களை இந்தச் சமூகம் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவே அங்கீகரிக்காதா? எனும் ஆதங்கங்களோடு தங்கள் வாழ்க்கையை ஒரு போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர்கள் திருநங்கைள்.
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் : குறுந்தொகை - முனைவர் ஆ. மணவழகன்
- Details
- Published on Tuesday, 20 September 2011 16:49
- Written by Super User

எட்டுத்தொகை நூல் வைப்பு முறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘குறுந்தொகை. இது அக இலக்கிய வகையைச் சார்ந்தது. இதற்கு உரை எழுதியவர் பேராசிரியர் என்றும், அவர் எழுதாமல் விட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்றும் கூறப்படுகிறது.
தொழிலாளிக்கெல்லாம் தொழிலாளியாய் (ஐங்கெல்ஸ்) -தோழர் செல்வி
- Details
- Published on Sunday, 07 August 2011 17:16
- Written by editor
தென்றல் வீசும் வசந்தகால மாலை. குளிர் சோலையில் சிவனும் பார்வதியும். மகிழ்ந்த மனதோடு இருக்கும் சிவனை நோக்கி பார்வதி, ''நம்மையே கணந்தோறும் துதித்துக் கொண்டு இருக்கும் அந்த பக்தனுக்கு அருளக்கூடாதா? அவனின் வறுமையை தயை கூர்ந்து நீங்கள் நீக்கி அருள வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கின்றார். சிவனும் பரிசீலிக்கிறேன் என்கிற ரீதியில் புன்னகையைத் தவழ விடுகின்றார்.
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் : நற்றிணை - முனைவர் ஆ. மணவழகன்
- Details
- Published on Wednesday, 07 September 2011 17:40
- Written by Super User
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.
பெண்ணியத்தின் தோற்றமும் முடிவும். -இரா. பாலன்
- Details
- Published on Friday, 05 August 2011 14:46
- Written by editor
2011ஆம் ஆண்டில் உலக பெண்கள் தினத்தில் நமக்கென சொல்லத்தக்க வரலாற்றை படைத்துச் சென்ற பெருமைமிகு வரலாற்றிற்க் குறியவர்களான நமது தாய்மார்கள், சகோதரிகள் கனவை நனவாக்குவோம்! அவர்களுக்கு நமது தேசத்தின் உயர்நத கௌரவம் உரித்தாகட்டும்.
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் வரிசை - முனைவர் ஆ.மணவழகன்
- Details
- Published on Wednesday, 17 August 2011 11:59
- Written by Super User
![]()
எட்டுத்தொகை நூல்கள்
பழந்தமிழர் எழுதிய பாடல்களில் காலத்தால் மறைந்ததும் மறைக்கப்பட்டதும் போக, எஞ்சிய, கிடைத்த பாடல்கள் தேவையுணர்ந்த சிலரால் தேடித் தொகுக்கப்பட்டன.
உலகம் வியக்கும் போராளிப் பெண்கள் -இவள் பாரதி
- Details
- Published on Friday, 05 August 2011 14:41
- Written by editor
காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள்.
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் : 1. தொல்காப்பியம் -முனைவர் ஆ.மணவழகன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 19:14
- Written by editor
ஓர் அறிமுகம்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும் தனித்தன்மைகளையும் கொண்டவை பழந்தமிழ் நூல்கள். அதனாலேயே, தமிழ் இனத்தில் பண்பாடு, அரசியல், நாகரிகம், பழக்க-வழக்கம், தொலைநோக்குச் சிந்தனைகள் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் காரணிகளுள் முதன்மையானவையாகப் பழந்தமிழ் நூல்கள் திகழ்கின்றன.
சுகந்தியின் மௌனம் -ச.விசயலட்சுமி
- Details
- Published on Thursday, 04 August 2011 16:57
- Written by editor
ஓராண்டுக்கு முன் சுப்ரபாரதிமணியனைத் திருப்பூரில் பார்த்தேன். அவரைப் பார்த்த அவ்வெயிற்காலையில் சுகந்தியைப்பற்றி கேட்க வேண்டுமென்ற பரபரப்பு மனம்முழுவதும் ஓடியது. நேரடி அறிமுகமற்ற மனிதரிடம் எப்படிக் கேட்பதென்ற தயக்கம்.
பத்துப்பாட்டை முன்வைத்து - ஒலிக்குறிப்பு என்னும் மொழி -ச. அன்பு
- Details
- Published on Wednesday, 10 August 2011 17:15
- Written by editor
படைப்பு எனும் இருப்புக்குள் எண்ணற்ற, ஆற்றல்பெற்ற மனிதனின் அருங்கலைகளுள் தலைமை சான்றக் கலை மொழி. எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் இக்கருத்துப் பரிமாற்றக் கலை, மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், சமுதாய இணைப்புக்கும் இன்று துணை செய்து நிற்கிறது.






