கனவான என் கனவு - தமிழ்ச்செல்வன்
- Details
- Published on Tuesday, 13 December 2011 09:21
- Written by Super User
தலை நிமிர்ந்த சிகரம்
மிதந்து வரும் ஆறு
புன்னகைக்கும் பூக்கள்
உறவாடும் சிட்டு
மின்னிடும் மின்மினி
கூடி உண்ணும் காகம்
குழந்தைகள் நிறைந்த குடும்பம்
பசியறியா வயிறு
கந்தகம் புகையாக் கானகம்
சிதையா உடல்
இரத்தம் படியா நிலம்
பூச்செண்டோடு தமிழன்
கனவான இது நினைவாகும் வரை
காத்திருப்பேன் நானும்-
கையில் ....






