ஏ.இராஜலட்சுமி கவிதைகள்
- Details
- Published on Tuesday, 27 December 2011 03:19
- Written by Super User
பதிப்பகம்
படைப்பாளி என்பதான
கிரீடங்கள் சுமக்கும்
உன் கழுத்து
வளைந்து தொங்குகிறது
கேட்பவர்க்கு
நவீனம் என்றபடி.
பிரக்ஞையற்ற
உன் சமூகச் செயல்பாடுகள்
புழுங்கிப் போய்
மூச்சையடைக்கும்
எதிரில் இருப்பவருக்கு
பதிலுரைக்கிறாய்
சமூக அக்கறை என்பதாக.
பிம்பங்களைக்
கட்டியெழுப்புகிறாய்
உன் தேவையின் பொருட்டு
படைப்புகளை
படைப்பாளியை மிதித்தபடி
கூறுபோட்டு கடைகிறாய்.
எப்பொழுதும்
வெளிச்சம் தேடியே
அலைகிறது
உன் விட்டில்.
நீயறியாதது
பெயரறியா
பல பாடல்கள் உண்டு
தமிழி்ல் என்பதை.
பெயருக்குப் பாடுபடும்
நீ
அறியப்படுவாய்
மிகச் சரியாக
வரலாற்றின் ஏடுகளில்.
..........................................
P¸zuõUP®
படம் வரைந்துதரச் சொல்லி
நிறங்களை வைத்துக் கொண்டு
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்
அக்காவின்
ஐந்துவயது மகனிடம்
வாத்தினை வரைந்து
நிறமளிக்கச் சொல்ல
பார்த்துவிட்டு வீசுகிறான்
“இது பொண்ணுங்க
கலர் அடிக்கிறது
வாத்துக்கெல்லாம்
நான் கலர் அடிக்கமாட்டேன் சித்தி”
சிங்கம் புலி மாதிரி
தனக்கு
வரைந்தளிக்குமாறு
கூடுதல் அதிர்வுடன்
அழத் தொடங்குகிறான்
என்னைப் புறந்தள்ளி.
...........................................
நிறைவேறிவிட்டிருக்கிறது
என் மரணம்
ஒரு மலர்மலர்வதைப் போல
அழகாகவோ
மரம் வீழ்வதைப் போன்று
கடுமையாகவோ இன்றி
அறுவை சிகிச்சை போல்
வலியற்று
பிறகு பெருவலியோடு
வடுக்கள் சிவக்க.
............................................
தொடர்ந்து
உருவாக்கப்படுகிறேன்
களிமண் பொம்மை போன்று
பிடி நழுவி
சிதறுவதையும்
விடுவதில்லை நீ
எப்படியும்
உருவாக்கிவிட
முயல்கிறாய்
கீறல்களோடும்
வடுக்களோடும்
குருதி வழியும்
தருணத்திலும்
உன்
அனைத்துத்
திறமைகளையும்
கூரிய ஆயுதமாக்கி
என் மீது
பிரயோகிக்கிறாய்
நெருடலான
உன் அருகாமை
குறித்த
நிறைய கேள்விகள்
அலைந்து கொண்டிருக்கின்றன
புறமெங்கும்.
................................................
தேடல்
கனவுகளின்
கடைசித் துளிகளும்
காய்ந்துகிடக்கிறது
வற்றிய
என் தேசத்தின்
புற்கள்
பசுமை தொலைத்து
சாய்ந்து கிடக்கிறது.
மேகத்தின்
சில துளிகளும்
எனை விடுத்து
நகர்ந்து செல்கிறது
உதிர்ந்த
பசிய இலைகளும்
காற்றில் கிழிகின்றன
எங்கே
என் இறுதி?
...................................
பதிப்பகம்
படைப்பாளி என்பதான
கிரீடங்கள் சுமக்கும்
உன் கழுத்து
வளைந்து தொங்குகிறது
கேட்பவர்க்கு
நவீனம் என்றபடி.
பிரக்ஞையற்ற
உன் சமூகச் செயல்பாடுகள்
புழுங்கிப் போய்
மூச்சையடைக்கும்
எதிரில் இருப்பவருக்கு
பதிலுரைக்கிறாய்
சமூக அக்கறை என்பதாக.
பிம்பங்களைக்
கட்டியெழுப்புகிறாய்
உன் தேவையின் பொருட்டு
படைப்புகளை
படைப்பாளியை மிதித்தபடி
கூறுபோட்டு கடைகிறாய்.
எப்பொழுதும்
வெளிச்சம் தேடியே
அலைகிறது
உன் விட்டில்.
நீயறியாதது
பெயரறியா
பல பாடல்கள் உண்டு
தமிழி்ல் என்பதை.
பெயருக்குப் பாடுபடும்
நீ
அறியப்படுவாய்
மிகச் சரியாக
வரலாற்றின் ஏடுகளில்.
...................................
கறைபடியாத என் தேசம்
நொறுங்கிக் கிடக்கிறது
சிதிலங்களுடன்.
மரணத்தின் நாவு
ருசித்துவிடாமல்
காத்த
என் உணர்வுகள்
பறிபோக
என் கனவு மலர்கள்
கருகிக் கால்தடங்களுடன்
குருதி வழியக்
கிடக்கின்றன.
வற்றலாய்
உலர்ந்த
என் பசுங்கிளைகள்
பற்றியெறியாமல்
காத்தலில்
மூர்ச்சையாகும்
என் பொழுதுகள்.
........................
இனிப்பின் சுவை
நெருங்கிய தோழி நீ
ஒரு காலத்தில்
இடப்பகிர்வு
உணவுப் பரிமாறல்
ஆற்றாமைக்கான ஆறுதலென
உன் பொருட்டு
நிறைய தேவைகள்
நிறைவேற்றப் பட்டன
என்னால்.
துரும்பையும்
கிள்ளி வழங்காத
உன் தோழமை
என்றுமே
கசந்ததில்லை எனக்கு.
நிறைய விலகல்களை
நிகழ்த்திவிட்டாய்
மிகச் சில நாட்களில்
எனினும்
கடுமையின்றிக் கழிந்தன
என் நாட்கள்.
எனைவிடுத்து
அனைவருக்கும்
உன் திருமண அழைப்பிதழை
வழங்கி மகிழ்ந்தாய்
உள்ளார்ந்த வாழ்த்தோடு
விலகி நின்றேன்.
ஒரு இருண்ட மழைநாளில்
எல்லோருக்கும்
இனிப்பு வழங்கினாய்
எனக்கும் சேர்த்து
நான்
இருக்கையில் இல்லாதபொழுதில்.
உன்
அனைத்துத் தந்திரங்களையும்
கண்டு நகைத்தபடி
குப்பைக் கூடையி்ல் கிடக்கிறது
உன்னால் வீசப்பட்ட
எனக்கான இனிப்பு.






