அமைதி பூங்கா - ஏ.சண்முகானந்தம்
- Details
- Published on Saturday, 04 February 2012 16:01
- Written by Super User
தமிழகம் அமைதி பூங்காவாம்...
மானமுற்று...
சூடு, சொரணையற்று...
செத்த பிணங்களாய்...
சொந்த மண்ணில் ஏதிலிகளாய்...
திரிவதற்கு பெயர் தான் அமைதி பூங்காவா?
தமிழகம் அமைதி பூங்காவாம்...
தமிழ் மண்ணில் தமிழ் இல்லை...
வந்தேரிகளின் வேட்டை காடாய்...
அண்டை மாநிலங்கள் துரோகமிழைக்க...
இதற்கு பெயர் தான் அமைதி பூங்காவா?
தமிழகம் அமைதி பூங்காவாம்...
கூடங்குளம்...
கல்பாக்கம்...
நீயூட்ரினோ ஆலை...
தமிழனுக்கு சவக்குழி தயார் செய்யும் போதும்...
மயான அமைதி...
இது தான் அமைதி பூங்காவா?
தமிழகம் அமைதி பூங்காவாம்...
கண்ணுக்குத் தெரியாத கடவுள் பெயரால்...
இராயிரம் ஆண்டுகளாக அடிமை...
எண்ணூறு ஆண்டுகளாக மற்ற இனத்தவரிடம் அடிமை...
அடிமை வாழ்வில் பெருமை கொள்ளும் தமிழர்கள்...
இதற்கு பெயர் தான் அமைதி பூங்காவா?
அடிமை
தை 1
வீதிகளில் கால் பதித்தேன்
வண்ண மிகு கோலங்கள் வரவேற்றன...
Happy Pongal - டன்...
தாய் மண்ணில் தமிழ் தான் இல்லை...
என்று மடியும்
எங்கள் அடிமையின் மோகம்...
வாழ்வு
பொங்கல்...
கிறிஸ்துமஸ்...
ரமலான்...
தமிழ் நடிகர்... நடிகைகள்...
பேட்டி... திரைப்படம்... நகைச்சுவை... ஆட்டம்...
தொலைக்காடசி விளம்பர இடைவெளியில்...
அவசரகதியில் காலை சிற்றுண்டி!
தொலைக்காட்சி விளம்பர இடைவெளியில்...
அவசர அவசரமாக மதிய உணவு!!
நிகழ்ச்சி முடியும் முன்னே... பார்த்த களைப்பில் உறக்கம்...
தொலைக்காட்சியில்... நடிகர்... நடிகைகளில்...
வாழ்வை தொலைத்த
அடிமை ஜென்மங்கள்?
பட்டிமன்றத் தமிழ்
உலகத்தின் மூத்தகுடி தமிழ்குடி
உலகத்திற்கு நாகரீகத்தை... விவசாயத்தை கற்றுக் கொடுத்த இனம்
முத்தமிழ் மட்டுமல்ல அனைத்து தமிழ் இலக்கியங்கள் கரைபுரண்டோடும்
சங்கமிக்கும் இடம் பட்டிமன்றம்...
பட்டிமன்றம் மட்டுமே தமிழுக்கான இடம் என்றாகி விட்டது!
யதார்த்ததில்...
ஆங்கிலமும்... இந்தியு(ய)ம்...
பேயாட்டம் போடுகின்றன
தமிழ் தொலைந்து போய் ஒரு தலைமுறை ஒடிவிட்டது
இன்று பட்டிமன்றத் தமிழ்...
நாளை நூலகத் தமிழ்...
நாளை மறுநாள்
வழக்கொழிந்த மொழி...
தமிழ் மெல்ல சாகவில்லை!
தமிழ் தேசியர்களே!
தமிழ் ஆர்வலர்களே!
மனித உரிமை பேசுபவர்களே!
இடதுசாரியம் பேசுபவர்களே!
சமூக மாற்றத்தை கோருபவர்களே!
வேகமாக சாகிறது... சாகடிக்கப்படுகிறது...
நிமிர்வதும்... மடிவதும்...
உன் கையில்
போராடு...
அனைத்து விடியலுக்கும்
போராடு...
சாதி கடந்து
மதம் கடந்து
போராடு...
ஒடுக்கப்பட்ட மக்களாய்...
வரலாறு உன் கையில்...
அடிமை விலங்கு உடைய
போராடுவதை தவிர...!
ஏ.சண்முகானந்தம்
ஒளிப்படக் கலைஞர்






