Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

நாமக்காரக் குட்டி

நான் ஊகிக்காத அளவு அடிவிழுந்துவிட்டது. அடிவிழுந்த மாத்திரத்தில் காவ்... காவ்.. என்று ஊரையே கூட்டுமளவுக்கு சத்தம்போட்டது.

Read more:

[சிறுகதை] அறியாப் பருவத்தில்... - யாழினி முனுசாமி

அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவள் வெகு நாட்களுக்குப் பிறகு தேவாலயத்திற்குச் சென்று முழங்காலிட்டு மனதுக்குள் ஜெபிக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

Read more:

ஒய்யார கொண்டை -நடராஜன் கிருஷ்ணன்

சிங்கார சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலர் கனவுகள் வருகின்றன. நியான் விளக்குகளால் சொலிக்கும் கனவு நகரம். வழு வழு சாலைகளில் வழுக்கி விரையும் கார்கள்.

Read more:

[சிறுகதை] ஆயுத பூசை மகிமை - கி. நடராசன்

மக்கள் நண்பனான காவல்துறைக்கு ஆசை இருக்காதா என்ன? தெருவோரக் குட்டிக்கடைகள், சிறிய கடைகள், பெரிய ஸ்டோர்கள், மெகா மார்ட்கள், தொழிற்சாலைகள், வீடுகள், கோயில்கள், அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தன. நம்ப போலிஸ் ஸ்டேன் மட்டும் விதிவிலக்கா என்ன?

Read more:

ஒரு தகடும் மூன்று ஆணிகளும் -கரன் கார்க்கி

குன்றுகள் நிறைந்த ஒரு சமமற்ற நிலப்பரப்பில் சிலர் அகழ்ந்து கொண்டிருந்தனர்.
ஏராளமான பள்ளங்கள் சமீபத்தில் தொண்டப்பட்டவை தான். முகம் முழுக்க முடி முளைத்த நடுத்தரமான வயதுடையவன், " இது தான்.. இது தான்.. இதுவேன் தான்" என்று கத்திக் கொண்டு பள்ளத்திலிருந்து மேலேறி வந்தான். அவனது முகம் சிவந்து வியர்த்துக் கொட்டியது.

Read more:

சிறுகதை : குட்டிப்பையனின் பொம்மை -நடராஜன் கிருஷ்ணன்

“மாமா நாளைக்கு பிள்ளை வீட்டுகாரர்கள் கை நனைக்க வருகிறார்கள் நீங்க நிச்சயம் வரனும்”

மச்சானின் இந்த அழைப்பிற்கு பின், என் முகத்தில் தோன்றி மறைந்த தயக்கம் அவனுக்குப் புரிந்தது விட்டது.

“நீங்கதான் மாமா முன்னின்று செய்ய வேணும். நம்ப குடும்பத்தில் நீங்க தான் பெரியவங்க.. நீங்க கட்டாயம் வரனும்... நீங்க தான் முன்னின்று நடத்தனும்”

Read more:

மவுனத்தின் தரவுகள் -ஆர்.மணிகண்டன்

அம்மா கொடுத்த பட்டியலோடு பெரிய ஒயர் கூடையும் கையுமாக படியிறங்கினான் பாஸ்கர். வாசல் புங்கமர நிழல் இன்னும் தரைவிரியத் தொடங்கவில்லை. காகங்கள் கிளைவிட்டுப் பறக்கத் தொடங்கின. மலையனூர் அம்மாவாசைக் கூட்டம் பெரிய பஸ் ஸ்டேண்டிலிருந்து இறங்கி அதனதன் ஊருக்குத் திரும்ப வேண்டி டவுன்பஸ்களுக்காக அங்கங்கே காத்திருந்தது.

Read more:

கனவு -இரா. பாலன்

அப்போதே நான் அவர்களைப் போல அந்தத் திசையில் பயணித்திருக்க வேண்டும். இத்திசை தெளிவான பாதையற்றுகிடக்கிறது. பார்வைக்கு, எதிரே இருப்பவை எல்லாம் தெளிவற்று கிடக்கின்றன. இத்திசையில் அடர்ந்த மரத்தின் இலைகளின் இடைவெளியில் ஊடுருவும் ஒளிக்கீற்றுகள் இல்லை. எல்லாவற்றிற்கும் நாய் போல் அலைகின்றேன்.

Read more:

நிர்வாணம் [சிறுகதை] -கரன் கார்க்கி

வீதியெங்கும் மனிதர்கள் நிதானமற்று எதிரும் புதிருமாய் நடந்து கொண்டிருந்தார்கள். அவனை கடந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த வேறொன்றின் மீது மோதி தரையில் சருக்கி கொண்டு போகும் தருணத்தில் அச்சமடைந்தவர்களின் குரல் அவனை பதறவைத்தது.

Read more:

தண்டனை ! -எம்.ரிஷான் ஷெரீப்

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன்.

Read more:

கன்று குட்டி -பாலாஜி

முகத்தில் யாரோ மயிலிறகில் மெல்ல தடவிக் கொடுப்பது போலத் தோன்றியது. நிச்சயம் அவளாகத்தான் இருக்கும் என்ற நினைப்புடன், வெகுநேர தூக்கத்திலிருந்து சட்டென கண்விழித்துப் பார்த்தேன் “விடிஞ்சது கூட தெரியாம கும்பகர்ணனாட்டம் எவ்வளவு நேரம் தூங்குரன்பார்” என்ற குரல் காதில் விழுந்தது.

Read more:

கமலா -இரா. பாலன்

முனியனுக்காக பஞ்சாயத்து கூடியது. சின்னவயசிலேயிருந்தே அந்த ஊருக்கு பெரியமனுசனா இருந்தவங்க பஞ்சாயத்தை நடத்தினாங்க. முனியனுக்கு முன்னும் பின்னும் யாருமில்லை.

முனியனை பற்றி சொல்லவேண்டுமானால் அவன் எவ்வித ஆதரவின்றி, பராமரிப்புமின்றி காற்றை மட்டுமே நம்பி வழ்கிறவன். உழவு மட்டைப்போல கஷ்டப்பட்டு உழைப்பவன்.

Read more:

மொழிபெயர்ப்பு சிறுகதை : ஷேர்லெம் அலெய்க்கெம் - யுமா வாசுகி-யுமா வாசுகி

"ஷோலெம் அலெய்க்கெம்"எனும் ஹீப்ரு சொல், அஸ்ஸலாமு அலைக்கும் எனும் அரபிச் செற்களுக்குச் சமமான பொருளடையது உங்களுக்குச் சமாதானம் சாலமன் ரபீனொவிச் எனும் இயற்கைபெயரைக் கொண்ட எழுத்தாளரின் புனைபெயர்தான் ஷோலெம் அலெய்க்கெம் இவர் ரஷ்ய எழுத்தாளர் அந்தோன் சேகவின் ஊரைச் சேர்ந்தவர்.

Read more:

செம்மறி -பச்சியப்பன்

இப்படி திடீரென்று மைனா செத்துப்போவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கூடைகள் மொழுக ஆட்டுச்சாணி எடுத்துக்கிறேன் என்று திண்ணையில் படுத்துக் கிடக்கிறவரிடம் ஒருதடவைக்கு இரண்டு தடவை கேட்டுக்கொண்டிருந்த தேவகி எறவானம் இடிக்குமோ என்று கவனமாய்க் குனிந்துபோய் ஒருக்களித்தவாக்கில் இருந்தவரை உளுக்கினாள்.

Read more:

தாய்மை -எம்.ரிஷான் ஷெரீப்

அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும்.

Read more:

பொழப்பு -தி.சு.பா

'இன்ன பொழப்பு தான் பாக்கணும், இப்படித்தான் வாழ்க்கேல வாழணும்ட்டு ஏதாச்சும் விதிமுறை இருக்குதா என்ன?'

எனக்கு அப்படில்லாம் எதுவும் தோணலைங்க. அதெல்லாம் சுத்த ஹம்பக்! தவிர, அந்த மாரி சித்தாந்தம், வீர வசனம்லாம் வாழ்க்கேல சௌந்தர்யம், சுகம் இப்படி எல்லாம் நம்ம சூழ்ந்து இருக்கறப்ப வேண்ணா வரும்ங்க. அப்போ நான் இருந்த நெலமைக்கு, மலம் திங்கிற பன்னி கூட பரவால்லங்க. தன் சாப்பாட்ட தின்னுபுட்டு "உர்" ருனு பெருமிதமா உறுமிட்டு போகும்.

Read more:

1929 [சிறுகதை] -இரா. பாலன்

இந்தியச் சமூகத்தில் ஒருவன் தன் குழந்தைகளிடம் காட்டும் கவனமும், பரிவும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஏனென்றால், விஷம்போல் ஏறும் விலைவாசியும், பனிபோல் உறையும் கூலியும், தொல்லை கொடுக்கும் வரிகளும் இருந்தும் கூட அவன் தன் குழந்தைகளைக் கவனித்துப் பராமரிப்பதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள்.

Read more:

பட்டுப்புடவை -சொர்ணபாரதி

பட்டுப்புடவை
சொர்ணபாரதி
உயர்நத மாடியில் அமைந்திருந்த அந்த அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தான் அவன், மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு அவனைச் சூழ்ந்தபடி தங்கள் தேவைகளுக்கேற்ற கேள்விகளை வீசிக்கொண்டிந்தனர். அவர்களுக்குத் தகுந்த பதில்களைச் சொன்னபடி கோப்புகளைப் புரட்டியவாறே ஏதோ ஒரு பழைய பாட்டை அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

Read more:

பின்னோக்கி நீளும் கனவின் தடம்...-மயூ மனோ

கனவில் அடிப்பதாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது அலாரம். இமைகளைத் திறக்க முடியாமல் பிரித்து இருட்டுக்கு கண்களைப் பழக்க முற்பட்டேன். சிறிதாய் விலக்கப்பட்டிருந்த திரைச்சீலைகளினிடையே யன்னல் கண்ணாடியில் பட்டுத் தெறித்து உள் நுழையப் போராடிக் கொண்டிருந்தது காலை வெளிச்சம்.

Read more:

நிழலில்லாத பெண் -பால்நிலவன்

இப்படி திடுதிப்பென்று மழை வருமென்று யார்தான் எதிர்பார்த்தார்கள். பஞ்சாயத்து போர்டு கட்டடத்திற்குள் நாற்பது பேருக்கும்மேல் குறட்டை விட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நாலைந்து பேர் மட்டும் சூளுயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்த மணிலா மூட்டைகளின் மீது படுத்தபடி விழித்துக் கொண்டிருந்தனர்.

Read more:

என் ஜன்னலின் சினேகிதி ! -எம்.ரிஷான் ஷெரீப்

ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது. அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது. இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல. வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.