Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

பரமக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு காவல்துறையின் அத்துமீறலே காரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு ஆய்வு : அ.சவுந்தரராசன் பேட்டி

பரமக்குடி.செப்.15-

பரமக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு காவல் துறையின் அத்துமீறலும், உளவுத்துறையின் பொறுப் பற்ற தன்மையுமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறி னார்.

கூடிய கூட்டதைக் கலைக்க முன்னறிவிப்பின்றி தலித் மக்களின் நெஞ்சைக் குறி வைத்து காவல்துறை சுட்டது ஏன் என்ற வினாவையும் அவர் எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், காவல்துறை கடு மையாக சீர்த்திருத்தம் செய்யப் பட வேண்டிய துறையாக மாறி யுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பரமக்குடியில் செப்டம்பர்  11 ம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான வர்களின் குடும்பத்தினரையும். காயம்பட்டவர்களையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு சந்தித்து ஆறுதல் கூறியது. இதன் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அ.சவுந்தரராசன் கூறியதாவது :

செப்டம்பர் 11ம் தேதி பரமக் குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. காவல்துறை யால் பாதிக்கப்பட்ட குடும்பங் களைச் சந்தித்தப் பிறகு அந்த அதிர்ச்சி மேலும் கூடுதலாகி யுள்ளது.இந்த நடவடிக்கை என்பது காவல்துறையின் முதிர்ச்சியற்ற தன்மையைத் தான் காட்டுகிறது.

படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த த.பழனிக் குமார் என்ற தலித் சமுதாயத் தைச் சேர்ந்த  மாணவனுக்கு  அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜான்பாண்டியன் கேட்ட தற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால். அவர் சென்றால் கலவரம் எனத்தடுத் தார்கள். ஆனால், அவர் கைது செய்யப்பட்டப் பின் தேவை யற்ற பிரச்சனை ஏற்பட்டுள் ளது. இதற்கு காவல்துறையின் அத்துமீறலும், உளவுத்துறை யின் பொறுப்பற்ற தன் மையுமே காரணமாகும்.

இச்சம்பவம் நடந்த போது, சில நூறு பேர் தான் இருந்துள் ளனர். அவர்கள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவும் இல்லை. காவல்துறையின் வஜ்ரா வாக னத்தில் காவலுக்கு காவலர்கள் இருக்கும் போது அதில் எப்படி தலித் மக்கள் தீ வைத்திருக்க முடியும்? காவல்துறையினர் தான் அவ்வாகனத்திற்கு தீ வைத்ததாக சிலர் கூறுகிறார் கள். தமிழகஅரசு நியமித் துள்ள நீதிபதியின் விசாரணை யில் அந்த உண்மைகள் வெளி வரக்கூடும்
.
பரமக்குடியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாதது என அரசால் சொல்ல முடியாது.  அமைதி யான முறையில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி துப் பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது  அவர்களின் மார்பிலும், கைகளிலும் குண்டுகள் பாய்ந் துள்ளன. காலுக்குக்கீழே யாரும் சுடப்படவில்லை. கூட்டத் தைக் கலைக்க காவல்துறை நினைக்கவில்லை என்பதை இத்தாக்குதல் உறுதிசெய்துள் ளது. துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு காவல்துறை தடியடியும் நடத்தியுள்ளது என்பது அதிர்ச் சியை மேலும் அதிகப்படுத்தி யுள்ளது. இந்த மரணத்திற்கு காரணமான, பலர் படுகாயப் படுவதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக தமிழக அரசு இடைநீக்கம் செய்ய வேண்டும்.

ஆனால். இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்காத நிலையில் அவர்களை வைத்துக் கொண்டு நீதி விசாரணை நடத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

இப்படுகொலைகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யாமல், பலி கொடுத்தவர் களின் குடும்பத்தினரை சந்தே கம் என்ற பெயரில் கைது செய்ய முயற்சி செய்வது கண் டனத்திற்குரியது. 144 தடை யாணை நீடிக்க எந்த முகாந்திர மும் இல்லை. மக்கள் மத்தியில் தேவையற்ற அச்ச உணர்வை யும். பதற்றத்தையும் இந்த தடையாணை ஏற்படுத்தியுள் ளது. உடனடியாக இந்த தடை யாணையை திரும்பப் பெற வேண்டும்.

காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்: அவர்களின் குடும் பத்திற்கு நிவாரணமாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளை தமி ழக அரசு ஏற்க மறுத்துள்ளது. ஏழை,எளிய நிலையில் உள்ள  குடும்பத்தில் வருவாய் ஈட்டிய மகனை, தந்தையை  இழந்து நிற்கும் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி என்பது ஏற்க முடியாதது. காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்ட வர்கள் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் வழங்கும் தமிழக அரசு, காவல்துறையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வழங்குகிறேன் என்கிறது. இதை ஏற்க முடியாது என வலி யுறுத்தி, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செப்டம்பர் 17 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பரமக்குடியில் நடைபெற் றது இரண்டு பிரிவினருக் கிடையே ஏற்பட்ட மோதல் அல்ல. காவல்துறை நடந்து கொண்ட விதத்தால் ஏற்பட்டது.

பழனிக்குமார் படு கொலைக்கு அவர் சுவரெழுத்து எழுதியது தான் காரணம் என முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் பேசியிருப்பது, பரமக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களிடையே தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு என்ற பெயரில் காவல் துறை வீடு வீடாகச் சென்று மிரட்டிவருகிறது. இது கடுமை யான பதட்டத்தையும், அச்சத் தையும் அம்மக்களிடையே உரு வாக்கியுள்ளது. இதன் காரண மாக ஆண்கள் வீட்டில் தூங்கு வதில்லை என்ற நிலை உருவாகி யுள்ளது. அச்சத்தையும், பீதி யையும் அரசும், காவல்துறை யும் உருவாக்கக்கூடாது. காயத் திற்கு மருந்திடும் நடவடிக் கைக்குப் பதில் காவல்துறை யின் நடவடிக்கை மிரட்டுவதாக உள்ளது.

தென்மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சாதிய மோதல் உருவான போது அதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு,சாதிய மோத லுக்கு வேலையின்மையே அடிப் படைக் காரணம் என்றது. ஆனால் இதுவரை அந்த அறிக் கையின் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். நாங்குனேரி திட்டம் அறிவித்ததோடு எந்த நட வடிக்கையும் இல்லாமல் உள் ளது. சிப்காட் அமைக்கப்படும் என்பதும் அறிவிப்பாகவே உள்ளது. சேது சமுத்திரத்திட் டம் 600 கோடி ரூபாய் செலவு செய்து பாதியிலே நிற்கிறது. ஆகவே, தமிழகத்தின் தெற்குப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குதற்கான நடவடிக் கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக் கொறடா கே,பாலகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.லாசர், இரா. அண்ணாதுரை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் உள்ளிட்ட தலைவர் கள் உடனிருந்தனர்.




கணவனை இழந்த `கர்ப்பிணியின் கதறல்

மதுரை.செப்.15-

பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் மற்றும்  காயமடைந்தவர்கள் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இமானுவேல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11 ம் தேதி நினைவு அஞ்சலி செலுத்தச் சென்ற மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் கண் மூடித்தனமாக தடியடியும் நடத்தியது.இதில் ஜேயபால், கணேசன், பன்னீர்செல்வம், தீர்த்தக்கனி, வெள்ளைச்சாமி, முத்துக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இத்துடன் காவல்துறை நடத்திய தாக்குதலிலும், துப்பாக்கிச்சூட்டிலும் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுதல்

பரமக்குடியில் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தவர் களின் குடும்பங்களையும், காயம்பட்டவர்களின் குடும்பங் களையும் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன், சட்டமன்றக் கொறடா கே.பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.லாசர், இரா.அண்ணாதுரை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி.சம்பத், மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பத்திரிகை கொடுக்கச் சென்றவர் பலியான சோகம்

காவல்துறையின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் குடும்பத்தினரை தலைவர் கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தனது மகனின் திருமணத்திற்காக பத்திரிகை கொடுப்பதற்காக கணேசன் பரமக்குடி சென்று, பேருந்தில் இருந்து இறங்கிய போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான சோகத்தை அவரது குடும்பத்தினர் சோகத்துடன் எடுத்துரைத்தனர்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பல்லவராயனேந்தலைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்களிடம் கூறுகையில், ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் எங்களது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்; அப்போது எந்த முன்னறிவிப்புமின்றி காவல்துறை துப்பாக் கிச்சூடு நடத்தியது; அதன் பிறகுதான் தடியடி நடத்தியது; தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காவல்துறை தாக்கியது. இதைத்தட்டிக் கேட்டவர்களை தாக்க ஆரம்பித் ததுதான் பிரச்சனைக்கான காரணம் என எடுத்துரைத்தார்.

காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் இறந்த கணேச னின் மகனின் திருமணம் 11 ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இத்திருமணம் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நிச்சயம் செய்யப்பட்ட பின் திருமணம் நடைபெறாவிட்டால், நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகும் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் செப்டம்பர் 15 ம் தேதி கணேசனின் மகன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

திருமணத்திற்குச் சென்றவர் பலி

காக்கனேந்தல் கிராமத்தினைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர்  மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திரு மணத்திற்குச் சென்று விட்டு ஊர் திரும்பிய போது பரமக்குடி யில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள் ளார். அவரது குடும்பத்தை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

திருப்பரங்குன்றத்திற்கு வெள்ளைச்சாமியுடன் சேர்ந்து சென்று காவல்துறை நடத்திய கொடூரத்தாக்குதலில் குற்றுயிரும், குலையுயிருமாய் வெள்ளைச்சாமி போராடியதை கண்ட சாட்சியான சின்னாள் என்பவர் கூறியதாவது

: ஐந்து, ஆறு காவல்துறையினர் வெள்ளைச்சாமியை சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். அடி பொறுக்க முடியாமல் ஓடிய அவர் சாக்கடையில் விழுந்த போதும் அவரைத் தூக்கி வந்து தாக்கினர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை இளையான்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்கள் வெள்ளைச்சாமியை மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்கள். அவரை மதுரைக்கு கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்து விட்டது என கண்கலங்கினார்.

கர்ப்பிணி மனைவி கதறல்

திருமணமாகி ஒன்றரை வருடங்களாகும் ஜேயபால் என்ற இளைஞர் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி காயத்ரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவரையும், ஜேயபால் குடும்பத் தினரையும் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு சந்தித்து ஆறுதல் கூறியது.

கலப்புமணம் புரிந்துகொண்டுள்ள காயத்ரி கூறுகையில், லாரி ஓட்டுநரான எனது கணவரின் வருவாயில் தான் எங்கள் குடும்பம் வாழ்ந்து வந்தது. பால்குடம் எடுத்து வரு கிறார்கள். விரைவில் வீட்டுக்கு வந்து விடுவேன். வேட்டு சத்தத்தில் பேசுவது கேட்கவில்லை. பிறகு பேசுகிறேன் எனக்கூறிய எனது கணவரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என கதறியழுதார். இதுவரை இமானுவேல்சேகரன் நினைவு நாளையொட்டி எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. ஆனால், காவல் துறையில் உள்ள சில அதிகாரிகள் முன்னின்று நடத்திய தாக்குதலால் தான் இப்பிரச்சனை ஏற்பட்டது. தமிழக முதல் வர் ஜெயலலிதா கூறுவது போல, இது சமுதாயத்தினருக் கிடையே நிகழ்ந்த சண்டையல்ல. நாங்கள் தாயாய், பிள்ளை யாய் தான் இருக்கிறோம் என மஞ்சூர் கிராம மக்கள் கூறினர்.

இதையடுத்து காவல்துறையினரின் துப்பாக்கிக்குண்டு களுக்கும், தாக்குதலுக்கும் உயிரிழந்த  முதுகுளத்தூர் தாலு காவைச் சேர்ந்த வீரம்பல் பன்னீர்செல்வம், கீழக்கொடும் பனூரைச் சேர்ந்த தீர்த்தக்கனி. சடையனேரியைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோரது குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு ஆறுதல் கூறியது.
பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற்றுத்தரும் என தலைவர்கள் அவர்களி டம் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்  இரா.ஞானவாசகம். மாவட்டச் செயலாளர்(பொறுப்பு) ஏ.கோவிந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் என்.கலையரசன், மாவட்டச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சிவாஜி, எம்.ராஜ் குமார், வி.காசிநாததுரை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குணசேகரன், திப.மோதிலால், பி.தமிழ்ஜோதி,  எம்.அய்யாத்துரை, முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் பி.கே. முருகேசன் மற்றும் ஏ.நாகநாதன், எம்.மூர்த்தி, நஜிமூதின், தெட்சிணாமூர்த்தி, எஸ்.ஆர்.ராஜன்,எஸ்.பி.கேசவன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS