புலி யாருக்கு?-ஆவணப்பட விமர்சனம். -சண்முகானந்தம்
- Details
- Published on Wednesday, 10 August 2011 11:14
- Written by editor
புலி யாருக்கு?-ஆவணப்பட விமர்சனம்.
காடுகளின் செழிப்பிற்கு அடையாளமாக கருதப்படும் புலகள், மனிதனுடனான போராட்டத்தில் இன்று, 1500க்கும் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் காடுகளின் வளரும் சீர்கெட்டுள்ளது.
உணவு சங்கிலியின் உச்சத்தில் புலிகளும், அதை தொடர்ந்து பல கொறி விலங்குகளும் உள்ளன. காட்டில் புலிகளின் உண்ணிக்கை குறிப்பிட்ட அளவு இருந்தால், அதனுடைய இரை உணவான மான்கள், காட்டுமாடுகளுடைய எண்ணிக்கை சும அளவிய் இருக்கும். புலிகளின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் இரை விலங்குகளான மான்கள், காட்டுமாடுகளுடைய எண்ணிக்கை அதிகரித்து உணவு பற்றாக் குறை ஏற்பட்டு காட்டிள் வளம் சீர்குலையும்.
இந்த பிண்ணினியில் தான் ஆண்ட்டோ இயக்கத்தில் வெளிவந்துள்ள “புலி யாருக்கு?” ஆவணப் படத்தை நோக்க வேண்டியுள்ளது. படத்திள் தலைப்பே இயக்குனர் ஒரு சார்பில் இருந்து இயக்கியுள்ளாரா? என்ற சந்தேகத்தை இளப்பியுள்ளது. குறுந்தகட்டிள் மேல் இடம் பெற்றுள்ள ஒவியம் இயக்குளர் பற்றிய சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
காடு என்பது காட்டுயிர்கள் வாழ தகுதியான ஒரே இடம் இதில் எவருக்கும் மாற்று கருத்து. இருக்க முடியாது. 110 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1500 புலிகள் என்றால்? புலிகளால் மனிதர்களுக்கு பிரச்னையா? அல்லது மனிதர்களால் புலிகளுக்கு பிரச்னையா? இயக்குனருக்கே வெளிச்சம்.
33 சதவீதம் இருக்க வேண்டிய காட்டு படுதிகள், 22 சதவீதம் மட்டுமே இருப்பதற்கு காட்டுயிர்க்கள் காரணமா? மனிதர்கள் காரணமா? தமிழகத்தில் 9 சதவீதம் மட்டுமே காட்டு பகுதிகள் உள்ளதாக் அறிக்கை கூறுகிறதே? இதற்கெல்லாம் இயக்குனர் தான் பதில் கூற வேண்டும்.
புலிகள் சரணாலயம் அமைக்கப்படும் போது சுற்றுவாப் பகுதி ( Butter zone ) அடர்ந்த வனப் பகுதி ( core zone ) என இரு பகுதிகளாக பிரிப்பது வழக்கப் சுற்றுலாப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை, மக்களை தகுந்த இழப்பீடு கொடுத்து மாற்று இடத்தில் குடியமர்த்துவது வழக்கமான ஒன்று.
அதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பை பெற்று, அவர்களையும் சுற்றுச்சுழல், காட்டுயிர்கள், வனம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி, அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.
ஆவணப்படத்தில் ஒருவர் பின் ஒருவராக கூறுவது போல், மனித உரிமைகள் காப்பாற்றப்படவில்லை. காட்டிற்கும், புலிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என அனைவரும் கூறுவது (ச.டுகமது அலி, சு.தியோடார் பாங்கரன் நிங்கலாக) வேடிக்கையாக உள்ளது. மட்டுமல்லாமல் அவர்களது அரசியல் பின் புலம் சார்ந்தே அசைந்துள்ளது.
காடும், புலிகளும் வளமாக இருந்தால் மட்டுமே. மனிதன் நலமாக வாழ முடியும் என்ற எளிய உண்மை புரியாமல் போனது வேடிக்கை தான். காடு என்பது காட்டுயிர்கள் வாழ்வதற்கு உரியது என்ற கருத்தை தெளிவாக தோழர்.ச.முகமது அலியும், சு.தியோடார் பாசுகரன் அவர்களும் கூறியிருப்பது கவளத்திற்குரியது.
காடு பரப்பளவை சுருக்கி, விவசாய நிலங்களாக, வீட்டு மனைகளாக மாற்றியவன் மனிதனே, நேற்று வரை காடாக இருந்த பகுதி இன்று நிலங்களாக பாறியது, காட்டுயிர்களுக்கு தெரியாதே? உணவுக்காக நிலங்களில் இறங்கும் காட்டுயிர்களை எதிரிகளாக மனிதன் தானே சித்தரித்தான்.
காடுகளில் மனிதர்களும் வாழும் பட்சத்தில் வெரு விரைவில் காடுகளின் எழில் குலையும். உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ள புலி, பேருயிரான யானைகள் உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களை நாம் (மனிதர்கள்) இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்வோம்.
சுற்றுச் சூழல், காட்டுயிர் சார்ந்த ஆவணப்படம் எடுக்கும் போது, காட்டுயிர் சார்ந்த அறிவியல் நிதியான உண்மைகள், துறை சார்ந்த அறிஞர்களின் துணையோடு படமாக்கும் போது மட்டுமே ஆவணப்படம் முழுமையடையும்.
புலி யாருக்கு?-ஆவணப்படம் முன்முடிவுகளின்படி எடுக்கப்பட்டதாவே தெரிகிறது. புலி உள்ளிட்ட காட்டுயிர்கள் பேசாது என்பதாலேயே தங்களுடைய விருப்பதிற்கு ஏற்ப எடுப்பது தவறு.
இவர்களுடைய வாத்ததிள் மனிதன் மட்டுமே நாட்டிலும், காட்டிலும் வாழ்ந்தால், காட்டயிர்கள் யாவும் வேண்டாமே? அப்படி ஒரு நிலையை சமூகம் எட்டுமானால் மனித இனமும் மிஞ்சாது என்பதை உரத்துக் கூறுவோம்.






