வாழும் மூதாதையர்கள்: தமிழக பழங்குடிகள் – அறிமுகம்

வாழும் மூதாதையர்கள்: தமிழக பழங்குடிகள் – அறிமுகம்

0 1875

ஆதிவாசி, காட்டுவாசி, முதுகுடி, பழங்குடி, வனவாசி, மலைமக்கள் மற்றும் இதர பல்வேறு பெயர்களால் அடையாளப்படுத்தப்படும் இம்மக்களே இம்மண்ணின் பூர்வகுடிகள். இவர்கள் நம் அனைவரின் மூதாதையர் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. பழங்குடிகள் என்றாலே, இலை தழைகளை கட்டிக்கொண்டு, அரைகுறை ஆடையுடன், விலங்குகளின் எலும்புகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, “கைய்யோ, முய்யோ” என்று பேசுவதும். அரைகுறை ஆடையுடன் நடனமாடுவதும்தான்அவர்களுக்கான அடையாளமாக நம் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. இதில் சினிமாவிற்குப் பெரும் பங்குண்டு. நகரத்தில் உள்ளவர்களைப் போல நவ-நாகரிக உடையணிந்த ஒருவரை “இவரப் பாத்தா பழங்குடி போல இல்லையே” என்று கருத்து கூறும்  மனப்பான்மையே நம்மில் பலருக்கும் உள்ளது. பல்வேறு சமூகங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள்கூட இவ்வகையான மனப்பான்மைக்கு விதிவிலக்கல்ல. பழங்குடிகள் என்றாலே அடைப்புக்குறிகள் சொல்வதைப்போல ஏதோ ஒன்றை நம் சமூகம் கற்பனை செய்து வைத்துள்ளது. தனக்கு மேலும் கீழும் எப்போதும் ஒரு சாதியிருப்பதை ஏற்கும் நமது சாதியமனப்பான்மையில் பழங்குடிகள் குறித்த அதீத கற்பனைகள் தவிர்க்க முடியாததே. பொதுவெளி சமூகத்தவர்கள் மத்தியில் பழங்குடிகள் குறித்துப் புனைந்து வைத்துள்ள இவ்வாறான அபத்தங்களைக் களைவதே, பழங்குடிகளுக்கு ஆதரவான ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்கான முதன்மைப் பணியாகும்.

பழங்குடிகள் என்பவர்கள் வேறுயாருமல்ல, நம்மைப் போலவே வாழும் சகமனிதர்கள். எளிமையாகச் சொல்வதென்றால் இயற்கையோடு வாழக் கற்றுக்கொண்டவர்கள், செயற்கையான வாழக்கை முறையை விரும்பாதவர்கள், நம்மைப் போல் இன்னும் முழுமையாக சீர்கெடாதவர்கள். ஆனால், நாமோ இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையில் இருந்து வெகுதூரம் விலகிப் பயணித்துவிட்டு, இயற்கையை அழித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நோக்கையும் நியாயமுடையதாக நம்மைநாமே நம்பவைத்துக்கொண்டோம். நமது வாழ்வியலை நாமே சீர்குலைத்தது போதாது என்று பழங்குடிகளின் வாழ்வையும் சேர்த்தே அழித்து வருகிறோம் என்பதே யதார்த்தம்.

 

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க காடு சுற்றுசூழல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள் , கீழுள்ள சுட்டியை கிளிக் செய்து –

http://panuval.com/p/2000027-kaadu-one-year-subscription

NO COMMENTS

Leave a Reply