{"title":"மொழிபெயர்ப்பு நூல்கள்","description":"Translation Books From Other Languages","products":[{"product_id":"anton-chekhov-aaka-sirandha-kathaigal","title":"ஆன்டன் செக்காவ் அகச் சிறந்த  கதைகள்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் கொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே,\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடு. இதனை நான் வைத்துக் கொள்ளமுடியாது\" என வழக்கறிஞர் கூறினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"ஏன் ? என்ன காரணம் ?\" எனப் பதறினார் மருத்துவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?\" என்று கேட்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"இல்லை. இல்லை தை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசை வைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்.\" என்று வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை..\" என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eநண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்கீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர். மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்ல விட்டிருந்தால்அவமானம்தான் ஆனால் இதை இங்கேவைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்து விடுவது நான் உத்தமம். ஆமாம். இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம் எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இது போன்ற பொருட்கள் பிடிக்கும்..\" எனமுடிவு செய்தார் வழக்கறிஞர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஉடனடியாக அங்குப் புறப்பட்டு சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்த சொத்துவிக்குத் தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப்பாக அன்று மாலை அளிக்கப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":45917634134331,"sku":"BK-90","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/anton_chekhov_aaka_sirandha_kathaigal_500.jpg?v=1747984875"},{"product_id":"fascisathin-ilakanam-nam-avargal","title":"ஃபாசிசத்தின் இலக்கணம் : நாம் - அவர்கள்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஊடுருவும் ஆற்றல்கொண்ட ஃபாசிசத் தந்திரங்கள் உலகெங்கும் எழுச்சிபெற்று வருகின்றன.அவற்றை ஒருங்கிணைக்கும் கட்டமைப்புகளான பத்துத் தூண்களைக் குறித்து இந்நூலாசிரியரும்,புகழ்பெற்ற மெய்யியலாளரும்,பரப்புரை குறித்த ஆய்வறிஞருமான ஜேசன் ஸ்டான்லி இந்நூலில் தனது கவனத்தை குவிக்கிறார்.மக்களை “நாம்” மற்றும் “அவர்கள்” என்று பிரித்தாளும் மொழியையும்,நம்பிக்கையையும் சரியாகத் திட்டமிட்டு,பத்துத் தலைப்புகளில் ஒழுங்குப்படுத்திப் பகுப்பாய்வு செய்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eசமகால ஹங்கேரி,போலந்து,இந்திய,மியான்மர் மற்றும் அமெரிக்கவில் நிகழ்ந்த சம்பவங்களோடு வரலாறு,மெய்யியல்,சமூகவியல் மற்றும் விமர்சனப்பூர்வமான இனவியல் கோட்பாடு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி ஆழ்ந்த கருத்துகளை இந்நூல் ஒன்றிணைக்கிறது.படிப்படியாகப் பெருகிவரும் ஃபாசிசத் தந்திரங்களின் தாக்கங்களைக் குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று இந்நூல் எச்சரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":45917635969339,"sku":"BK-79","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/FascisaththinIlakkanamF.jpg?v=1747984864"},{"product_id":"gaiya-boomithayin-marana-sasanam","title":"கையா பூமித்தாயின் மரண சாசனம்","description":"\u003cp\u003eபுவி என்பது வாழ்வின்றி வேறேது?\u003cbr\u003eஎன்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்\u003cbr\u003eஎன்றே அழைக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்\u003cbr\u003eஉறவு கொண்டதென்கிறது பௌதீகம்.\u003cbr\u003eமனதின் வறுமை உடலில் வெளிப்படும்.\u003cbr\u003eநவீனம் என்ற பெயரில் நீங்கள்\u003cbr\u003eதனிமைப்பட்டுப் போகிறீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉன்னத அறிவுடன் உன்னைப்\u003cbr\u003eபடைத்தேன். ஆள்வதற்கல்ல...\u003cbr\u003eகாப்பதற்காகவே...\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357563015483,"sku":"BK-77","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/products\/gaiya-boomithayin-marana-sasanam500_53beb3d4-f0b6-4f74-83b7-b026960457fd.jpg?v=1747984862"},{"product_id":"ithaiyame-kodaiyaanaal","title":"இதயமே கொடையானால்","description":"\u003cp dir=\"ltr\"\u003eஇருந்தார்கள். தூய்மைபடுத்தப்பட்ட துணியைச் சன்னல்கள் போல் வைத்து மார்புப் பகுதியிலும் அடி வயிற்றிலும் மூடியிருந்தார்கள்.தொடங்க ஆரம்பித்தார்கள். அறுவைச் சிகிச்சை அறையிலிருந்த முதல் குழு, சிறுநீரக மருத்துவர்கள் குழு. அவர்கள்தான் முதலில் உடலைத் திறப்பார்கள்; அவர்கள்தான் கடைசியில் அதனை மூடுவார்கள். லாரல்-ஹார்டி போல் இருவர். மெலிந்த, உயரமான ஒருவர்: அவர்தான் அறுவைச் சிகிச்சை நிபுணர். குட்டையாக, குண்டாக இருந்தவர் உள்ளுறை பயிற்சி மருத்துவர். முன்னவர்தான் குனிந்து அடிவயிற்றில் சிலுவைபோல் ஒரு கீறல் போட்டார் –அதாவது ‘பை லேட்டரல்லேப்பராட்டமி’ (bilateral laparotomy) செய்தார். இடைத்திரை சவ்வை ஒட்டி உடல் இரண்டு பாகமாகப் பிரிக்கப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கல்லீரலும் சிறுநீரகமும், அதற்கு மேல்பகுதியில் நுரையீரலும், இதயமும் இருந்தன. அதன் பின், கிழிவை அகலப்படுத்த, அதற்கான கருவி யைப் பயன்படுத்துவதோடல்லாமல் கைப்பக்குவத்தையும் பயன்\u003cbr\u003eபடுத்துகின்றனர். கைப்பக்குவத்தின் முக்கியத்தை அப்போதுதான் உணர முடிகிறது. அங்குள்ள சூழலுக்கு உடல் பிரயாசையும் தேவைப்பட்டது தெளிவாகியது. உடலின் உள்ளே கசிந்துகொண்டிருந்த இரத்தம் சங்கடத்தை ஏற்படுத்தியது. விளக்கின் ஒளியில் அனைத்துமே சிவப்பாகத் தெரிந்தது.\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003eமருத்துவர்கள் தங்களுக்கு வேண்டிய உறுப்பை எடுப்பதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உறுப்புகளை அவற்றோடு ஒட்டியிருப்பதிலிருந்து பிரிப்பதற்கான கத்தி சரியாகவும், தடங்கலில்லா மலும் வேலை செய்ய வேண்டும். இதுவரை எதையும் வெட்டி எடுக்கவில்லை. சிறுநீரக மருத்துவர்கள் உடலின் இருபக்கமும் நின்றுகொண்டிருந்தனர். மூத்த மருத்துவர் தன் மாணவன் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தார். சிறு நீரகங்கள் மீது தலை குனிந்துகொண்டு, தன்னுடைய செயல் திட்டத்தை ஒவ்வொரு பகுதியாக விளக்கினார். மாணவன் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டான். சில சமயம் கேள்விகள் கேட்டான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eBlurb Description : அவ்விரு பேராசிரியர்களும் சொன்ன தகவல் மெல்ல வெடிக்கும் ஒரு வெடிகுண்டுபோல் அவரை உலுக்கியது. அதாவது, இதய இயக்கம் நிற்பது மரணத்தின் அறிகுறியன்று. மூளையின் செயல்பாடுகள் நிற்பதுதான் மரணத்தின் அறிகுறி. வேறுவிதமாகச் சொல்வதானால், 'நான் சிந்திக்க முடியாமல் போனால், நான் இறந்துவிட்டேன்,' என்று பொருள். இதயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, அதனைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்டு, மூளைக்கு முடிசூட்டும் விழா நடந்தது. குறியீட்டளவில், அது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு - ஒரு புரட்சி.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357562917179,"sku":"BK-76","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/ithaiyame_kodaiyanal_500.jpg?v=1747984860"},{"product_id":"kadalum-oru-kilavanum","title":"கடலும் ஒரு கிழவனும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் 'சில வேளைகளில்\" என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன். ந் தோற்கடிக்கப்படும் போது, படுக்கைதான் உனக் குச் சிறந்தது. என்று எண்ணினான். அது எவ்வளவு சிறந்தது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. இரவு நேரத்தில் இரண்டு குட்டி டால்பின்கள் படகைச் சுற்றின. அவை உருளுவதையும் தண்ணீரை மேலே ஊதித் தள்ளுவதையும் அவனால் கேட்க முடிந்தது. ஆண் டால்பின் ஊதும் சத்தத்துக்கும் பெண் டால்பின் ஏக்கத்துடன் எழுப்பும் சத்தத்துக்கும் இடையே யான வேறுபாட்டை அவனால் கூற முடியும். “அவை நல்லவை. ஒன்றை ஒன்று நேசித்து, கேலி பேசி விளை யாடுபவை. பறவைமீன்களைப் போல் அவையும் நமது சகோதரர் கள்\" என்றான். நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். மிகத் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய சகோதரர்களாகிய நட்சத் திரங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ அந்த அளவு தெளி வாக இருக்கிறேன். இருந்தாலும், நான் தூங்க வேண்டும். நட்சத் திரங்கள் தூங்குகின்றன; நிலவும் சூரியனும் தூங்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357562786107,"sku":"BK-74","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/kizhavanum-oru-kadalum500.jpg?v=1747984859"},{"product_id":"piano","title":"பியானோ","description":"\u003cp\u003eநம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளூம் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். யதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. யதார்த்தமும் புனைவும், அவதானிப்பும் விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பொரும்பாலான்வை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்டமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுலகம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த, பிடிபடாப் பிரேதசங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.\u003c\/p\u003e\n\u003cp\u003e- சி. மோகன், முன்னுரையிலிருந்து...\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357562163515,"sku":"BK-63","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/piano500.jpg?v=1747984845"},{"product_id":"ramrao-vazhvenum-maranam-india-vivasayiyin-nilai","title":"ராம்ராவ் வாழ்வெனும்  மரணம் இந்தியா விவசாயியின் நிலை","description":"\u003cp\u003e\u003cspan\u003eராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியில் வாழ்வு எத்தகை என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்தில் என்ன சிக்கல்? ஓட்டுமொத்தமாக விவசாயத்தில் என்ன சிக்கல்தான் உள்ளது? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆசிரியர் மேற்கொள்ளும் பயணமே இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357562097979,"sku":"BK-62","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/products\/ramrao_vazhvenum_maranam_india_vivasayiyin_nilai_500_2802521c-c11c-402b-b475-e39939fed34b.jpg?v=1747984844"},{"product_id":"seyal-thalaivar","title":"செயல் தலைவர்","description":"\u003cp\u003eசெயல் தலைவர்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357561966907,"sku":"BK-60","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/products\/seyal_thalaivar_500_8b84fb13-190e-4cab-a285-8d340db221af.jpg?v=1747984841"},{"product_id":"thandanai","title":"தண்டனை","description":"\u003cp\u003eகாலந்தோறும் ஒவ்வொரு நாட்டிலும் மாறிவரும் அரசியல் சமூகச் சூழலுக்கேற்பச் சிறைகளும் அவை நிறைவேற்றும் தண்டனைகளும் மாறி வந்துள்ளன. மனிதனை நல்வழிப்படுத்தல் என்னும் போர்வையில் சிறைவாசத்தில் நிறைவேற்றப்படும் அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் கணக்கிலடங்காதவை. சில நேரங்களில், அங்கு அரங்கேறும் சித்திரவதைகள் மனித உரிமை மீறலின் உச்சமாக இருக்கும். ஆனால், அவற்றை வரலாற்று நூல்கள் மறைக்க முயன்றாலும் அத்தகையச் சமூக அவலங்கள் கலை இலக்கியத்தில் பதிவாவதைத் தடுக்க இயலாது. இதனை மீண்டும் நிறுவும் விதமாக 2018ஆம் ஆண்டில் வெளியான  ‘தண்டனை’ என்னும் தஹர் பென் ஜெலூனின் தன்புனைவு புதினம் அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357561442619,"sku":"BK-50","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/thandanai_500.jpg?v=1747984829"},{"product_id":"thuravigalum-puratchiyalargalum-china-1957","title":"துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957","description":"\u003cp\u003eரொமிலா தாப்பர் 1957 இல் சீனாவுக்குச் சென்று வந்த பயனக்குறிப்பே ‘துறவிகளும் புரட்சியாளர்களும், சீனா 1957’ ஆகும். ஸ்ரீலங்காவின் கலைவரலாற்றறிஞரான அனில் டி சில்வாவின் ஆராய்ச்சி உதவியாளராக அவருடன் சென்று, மேஜிஷன், டன்ஹுவாங் ஆகிய இரு பெரும் புத்தமத வரலாற்றிடங்களில் பணிபுரிந்தார்.\nபுரியாத மௌனம் சீனாவில் நிலவிய காலகட்டம் அது. மாவோ ஆட்சியதிகாரத்துக்கு வந்ததும் சீனா மாறத் தொடங்கி இருந்தாலும் பெரும்பாலான பழைய வழிமுறைகள் அப்படியேதான் இருந்தன. அவர் ஆய்வு செய்ய வந்த புத்தமத வரலாற்றிடங்கள் தவிர பீஜிங், சியான், நான்கிங், ஷங்கை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கும் சீனாவின் உட்பகுதியில் இருந்த கிராமங்களுக்கும் ஆசிரியரால் பயணம்செய்ய முடிந்தது. அவரால் முடிந்த வரையில் சீன சமூகத்தை புரிந்துகொள்ள முயன்றார். சீனாவில் செலவழித்த நேரத்தில் அவர் கவனித்த உலகின் மிகப்பழமையான மிகச் சிக்கலான நாடுகளில் ஒன்றான சீனாவின் ஆழமான, வேடிக்கையான, அசலான, தொடர்ந்து உள்ளொளி அளிக்கும் கண்ணோட்டத்தை அப்படியே எதையும் மாற்றாமல் இந்நூலில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357561049403,"sku":"BK-44","price":695.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/gazing-eastwards500.jpg?v=1747984821"},{"product_id":"ullasa-thirumanam","title":"உல்லாசச் திருமணம்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஇது பற்றி விவாதிக்க மீண்டும் ஒருமுறை முலே அகமதுவைச் சந்தித்தான்.\"பொதுவாகப் பார்த்தால் உன் குழந்தைகள் பால் கலந்த காபி போன்றவர்கள். ஒருபுறம் கருப்பு காபியும், மறுபுறம் பாலுமாக இருக்கின்றனர். இறைவன் ஏதாவது காரணங்கள் வைத்திருப்பான். இறைவனின் அருட்கொடையை ஏற்றுக்கொண்டு, இது அவருடைய நல்லுள்ளத்தின் அடையாளம் என நினைத்துக்கொள். மனித இனத் தைப் பலவாறாகப் படைத்து அதன்மூலம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி இறைவன் செய்துள்ளார். கருப்பு மனிதருக்கும் வெள்ளை மனிதருக்குமிடையேயும்; அந்நியருக்கும் இதே நாட்டைச் சேர்ந்தவருக்கும்; இங்கிருப்பவர்களுக்கும் அங்கிருந்து வந்தவர்களுக் கும் என இறைவன் பேதம் பார்ப்பதில்லை. நீ கொடுத்து வைத்தவன் என்பதை நினைவில் வை. உனக்குக் கிடைத்துள்ள நல்வாய்ப்பைத் தேவையற்ற விஷயங்களில் விரயமாக்காதே. நம் மதத்தின் மீதும் நம்பிக்கைகள் மீதும் ஈடுபாடு வருமாறு நல்லதொரு கல்வியை அவர்களுக்கு வழங்கு\".\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eதனக்கு இரண்டு புதிய சகோதரர்கள் கிடைத்திருக்கும் மகிழ்ச் சியை வெளிக்காட்டாமல் இருக்க கரீமால் இயலவில்லை. நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றபோது மகிழ்ந்ததைப்போல் அவன் ஆடுவதும் பாடுவதுமாக இருந்தான். பிரசவத்தின் போது, அங்கு இருந்ததால் இன்று காலை அவன் பயிற்சியில் ஈடுபடவில்லை. அம்மாவிடம் அவன்தான் இச்செய்தியை அறிவித்தான். அவள் ஆச்சரியப்படவில்லை. மாறாக,\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"ஒன்று வெள்ளை, மற்றது கருப்பு என்பதிலிருந்தே அவள் ஒரு சூன்யக்காரி என்பது புலனாகிறது! இதுவரை யாராவது இப்படிக் கேள்விப்பட்டதுண்டா?\" என்றாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eகரீம் எதுவும் மறுத்துப் பேசவில்லை. எல்லோருக்கும் இச்செய்தியை அறிவிக்க வீட்டுக்குள் ஓடினான். வாணலி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு,ஒரு மரக்கரண்டியால் அதை அடித்து ஓசை எழுப்பியபடிக் கூவினான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\"எல்லோருக்கும் ஓர் அறிவி... அறிவிப்பு: ஹஸ்... ஹசன்.. ஹூ...ஹூசேன் வத்திருக்கின்றனர். வாழ்க அப்பா... வாழ்க அம்மா...\"\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eBlurb Description : மொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள்,அநீதிகள்,தீமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமாக உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eமூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில்,ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஇப்புதினத்தைத் தன் மகன் அமீனுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரீம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன்.இயற்கையின் சோதனையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரீமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eவிடாமல் தொடரும் சமூகத் தீமைகள் மீதான தன் அறச்சீற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357561016635,"sku":"BK-43","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/UllaasaThirumanamF.jpg?v=1747984820"},{"product_id":"vazhvu-irappu-vazhvu","title":"வாழ்வு... இறப்பு... வாழ்வு... லூயி பஸ்தேர்","description":"\u003cp\u003eஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடைகளைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல.\u003c\/p\u003e\n\u003cp\u003e“நுண்ணுயிரியலின் தந்தை” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “பாஸ்டராக்கம்” அறிமுகமானது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது. வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்தகைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள்ளார் எரிக் ஒர்சேனா.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357560787259,"sku":"BK-39","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/vazhvu_irappu_vazhvu_500.jpg?v=1747984815"},{"product_id":"viyapootum-cuba","title":"வியப்பூட்டும் கியூபா","description":"\u003cp\u003eசோசாலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துகளையும் மட்டுமின்றி, புரட்சியின் விமர்சகர்களின் கருத்துகளையும் ஆராய்ந்து தாம் கண்டறிந்த முடிவுகளை எமிலி மோரிஸ் இங்கு முன்வைத்துள்ளார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357560688955,"sku":"BK-37","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/products\/viyaputum-cuba500_1a5ca446-5750-4300-81a8-353c6f910a6e.jpg?v=1747984813"},{"product_id":"porkonda-kadhal-thadagam-publications","title":"போர்கொண்ட காதல்","description":"\u003cp\u003e1914ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் நாள் தொடங்கி 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் நிறைவடைந்த மாபெரும் போர் என்று அழைக்கப்பட்ட முதலாம் உலகப் போரின் வரலாறு, நிலப்பரப்புகளை அடிப்படையாகக்கொண்டு A Farewell to Arms என்ற இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. இந்த நாவலின் நாயகன் ஃப்ரெட்ரிக் ஹென்றி நடந்து முடிந்த கதையைச் சொல்வதாக எழுதப்பட்டுள்ளது. 1916-18ஆம் ஆண்டு களுக்கிடையே நான்கு நிலப்பரப்புகளில் நடந்த போரின் நிகழ்வுகள் இந்தக் கதையின் தளங்களாக அமைகின்றன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46357560656187,"sku":"BK-36","price":580.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/PorkondalKadhal500.jpg?v=1747984812"},{"product_id":"intha-ulagathukkum-enakkum-idaiyl","title":"இந்த உலகத்துக்கும் எனக்கும் இடையில்","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eதேற்றங்கள், கைகுலுக்கல்கள் மற்றும் தலையாட்டல்கள் இவற்றின் பொருள் என்ன? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான வித்தியாசத்தின் பொருள் என்ன? எனக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்டுள்ள திரைகளின் பொருள் என்ன?\u003cbr\u003eதிருச்சபைக்குள்ளும், அதன் மர்மங்களுக்குள்ளும் மற்ற ஏராளமான பேரைப்போல் என்னால் பின்வாங்கிச் செல்லமுடியவில்லை. என் பெற்றோர் அனைத்து வறட்டுக் கோட்பாடுகளையும் நிராகரித் தார்கள். வெள்ளையராக இருக்க விரும்பும் மக்களால் சந்தைப் படுத்தப்பட்ட விடுமுறை நாட்களை நாங்கள் புறக்கணித்தோம். அவர்களுடைய இசைப் பாடல்களுக்கு நாங்கள் எழுந்து நிற்கப்-போவதில்லை, அவர்களுடைய கடவுள்களுக்கு முன்னால் நாங்கள் மண்டியிடப் போவதில்லை, அதனால் அந்த நியாயமான கடவுளும் என் பக்கம் இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு இருக்கவில்லை.\u003cbr\u003e“அடக்கமுள்ளவர்கள், இந்த உலகத்தை மரபுரிமையாகப் பெறுவார்கள்” என்பது எனக்கு எந்த அர்த்தத்தையும் தருவதாக இருக்கவில்லை. அடக்கமுள்ளவர்கள், மேற்கு பால்டிமோரில் அடித்துநொறுக்கப்பட்டார்கள், வால்புரூக் சந்திப்பில் காலில் மிதித்துத்துவைக்கப்பட்டார்கள், பார்க்ஹைட்ஸில் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள், நகரச்சிறையில் துவலைக் குளியலறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். பிரபஞ்சம் குறித்த எனது புரிதல் உடல்சார்ந்ததாக இருந்தது, அதன் அறம்சார்ந்த வில் வளைவு ஒழுங்கின்மை நோக்கி வளைந்து, பிறகு ஒரு பெட்டியில் முடிவடைந்தது. துப்பாக்கியை உருவியெடுப்பது என்பது, உடலின் மீதான அதிகாரத்தை ஒரு குழந்தை தன் கையிலெடுத்துக்கொண்டு, மற்ற குழந்தைகளை நினைவுத்திறனின் எல்லைக்குத் துரத்தக் கூடியது - சிறு கண்களைக்கொண்ட பையன் விடுக்கும் செய்தி இதுவாகத்-தான் இருந்தது. என்னைச் சுற்றியிருந்த அனைத்தையும் அச்சம் ஆட்சிபுரிந்தது. அத்துடன் இந்த அச்சம் பெருங்கனவுடன் இணைக்கப்-பட்டிருந்தது என்பதும், கவலையற்ற பையன்களுடன், பை ((pie) மற்றும் பானையில் வறுத்த கறியுடன், நமது தொலைக் காட்சிப் பெட்டிகளில் வெளிக்காட்டப்படும் வெள்ளை வேலிகள் மற்றும் பச்சைப் புல்தரைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது என்பதும், எல்லா கறுப்பின மக்களுக்கும் தெரிந்திருந்ததுபோல் எனக்கும் தெரிந்திருந்தது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46404016472379,"sku":"BK-21","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/intha-ulagathukkum-enakkum-idaiylF.jpg?v=1747984796"},{"product_id":"inraiya-nigahvugal","title":"இன்றைய நிகழ்வுகள்","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eநாசி கட்சி அதிகாரப் பதவியின் அரியணை ஏறும் முன்னரே,ஜெர்மனியின் பல பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிதி ரீதியான ஆதரவை வெளிப்படுத்துகின்றன.அதிகாரத்திற்கு வந்த கையோடு உள்நாட்டு எதிர்ப்புகளை லாவகமாகக் கையாண்ட நாசி அரசு,அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மற்ற தேசங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுகிறது.அந்த முயற்சியில் இடம்பெற்ற பல கைங்கரியங்கள் வரலாற்றில் சொல்லப்படாமலும்,ஆதலால்,அறியப்படாமலும் புதைந்து போயின.அந்த உண்மைகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து அவற்றுக்கும் வரலாற்றின் பெரும் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை நமக்குக் காட்சியை வழங்குகிறார் கதையின் ஆசிரியர்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46404016570683,"sku":"BK-19","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/IndraiyaNigazhvugalF.jpg?v=1747984794"},{"product_id":"illaravasigal","title":"இல்லறவாசிகள்","description":"\u003cp dir=\"ltr\"\u003eபகல் தூக்கத்திற்காகப் படுக்கையில் கிடத்திவைத்தபோது தன் மூத்த மகனுடன் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்து நீண்ட நாட்களாகி விடவில்லை. அவன் கேட்டது நினைவில் உள்ளது. “அப்பா உன்னை எங்குப் புதைக்க\u003cbr\u003eவேண்டும் என்று விரும்புகிறாய்? மொராக்கோவா, பிரான்ஸா?\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003eஉன் உடல் வெள்ளைத் துணியால் சுற்றப்படுவதை விரும்புகிறாயா? அல்லது அழகான கறுப்பு நிற உடையுடன் சவப் பெட்டியில் வைக்கப்படுவதை விரும்புகிறாயா? உன் கல்லறையை நாங்கள் வந்து பார்வையிட வேண்டும் என ஆசைப்படுகிறாயா? அல்லது அதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? எப்படியும் உனக்கு எதுவும் தெரியப்போவதில்லை. நாங்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, உனக்கு எல்லாமே ஒன்றுதான் இல்லையா? உன் உடல் எரிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. திரைப் படங்களில் பார்த்திருக்கிறேன். அது மிகவும் கொடூரமாக இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇஸ்லாமும் இப்போது அதைத் தடை செய்துள்ளது என்று நினைக்கிறேன். அப்படித்தானே? போகட்டும், உன்னிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறேன். உனக்குத் தெரியுமா, நீ நீண்ட காலம் வாழ வேண்டும், ஆமாம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன். இருந்தாலும் எந்த நாடு, என்ன துணி என்பதை மட்டும் சொல்” என்றான்.\u003cbr\u003eமகனுக்குப் பொறுமையாகப் பதில் அளித்தான். “மகனே, நன்கு யோசித்துதான் சொல்கிறேன். மொராக்கோதான் அந்த நாடு. உடலுக்கு வெள்ளைத் துணிதான். கறுப்பு உடை வேண்டாம். நம்முடைய அசுத்தமான கல்லறைகளை நினைத்தால்தான் கவலை\u003cbr\u003eயாக இருக்கிறது. உன் தாத்தா, பாட்டி கல்லறைக்கு நான் போன போது பார்த்திருப்பாயே, அங்குக் காணப்பட்ட சுகாதாரக்கேடு நம்மை முகம்சுளிக்க வைத்தது. எங்குப் பார்த்தாலும் புட்டிகள், பிளாஸ்டிக் பைகள், செத்துக் கிடந்த பூனைகள், தெருநாய்கள், பிச்சைக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள் எனப் பலரது மனிதக் கழிவுகள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நெடுந் துயிலில் ஆழ்ந்துள்ள மறைந்தவர்களுக்கான மரியாதை இல்லை. அவர்களுக்கு அது தேவையில்லை என்று நீ சொல்லலாம். சரி\u003cbr\u003eதான். ஆனால், அப்படி மரியாதை செய்வதுதான் சிறந்த முறை என்பது என் கொள்கை.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46404016603451,"sku":"BK-18","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/illaravasigal500.jpg?v=1747984792"},{"product_id":"en-thanthaiyai-konravar-yaar","title":"என் தந்தையைக் கொன்றவர் யார்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e“ஐரோப்பாவில் நீ உடல்நலம் குன்றிய ஏழையாக இருந்தால்,உனக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன.ஒன்று,உடல் நலமற்ற நிலையிலும் நீ வேலைக்குப்போய் செத்து மடியலாம்;அப்படி இல்லையென்றால்,நாளடைவில் அரசு நலத்திட்டத்தின் கீழ் வந்துகொண்டிருக்கும் உதவிகள் எல்லாம் படிப்படியாகக் குறைக்கப்படுவதனாலும் நீ செத்து மடியலாம்.” – எதுவார் லூயி\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஅரசு நலத் திட்ட அமைப்பில் காணப்படும் குறைபாடுகள் பிரான்சில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும்,குறிப்பாக,முதலாளித்துவம் வலுப்பெற்றிருக்கும் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஅதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிந்த நீரோடை போன்ற நடையில் எதுவார் லூயி எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":46404016636219,"sku":"BK-17","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/EnThanthaiyaiKondravarYaarF.jpg?v=1747984791"},{"product_id":"magizhchiyaana-maranam","title":"மகிழ்ச்சியான மரணம்:ஆல்பொ காம்யு","description":"ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம் என்ற நாவலின் முதல் பகுதிக்கு, ‘இயற்கை மரணம்’ என்றும், இரண்டாம் பகுதிக்கு ‘உணர்வு மரணம்’ என்றும் தலைப்புகள் கொடுத்திருக்கிறார். \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eஇயற்கை மரணத்திற்கு ஜாக்ரெஸின் மரணத்தையும், உணர்வு மரணத்திற்கு பத்ரீஸ் மெர்சோவின் மரணத்தையும் உதாரணமாகக் காட்டியிருக்கிறார்.\u003cbr data-mce-fragment=\"1\"\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":47800258363707,"sku":"BK-15","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/magizhchiyaanamaranamF.jpg?v=1747984789"},{"product_id":"tidupa","title":"டிடுபா","description":"\u003cp class=\"selectable-text copyable-text x15bjb6t x1n2onr6\" dir=\"ltr\"\u003e\u003cspan class=\"selectable-text copyable-text xkrh14z\"\u003eஅடிமைத்தனத்தையும், இனவெறியையும், பாலியல் அடக்குமுறைகளையும் எதிர்த்து தன்னுடைய குரலை உலகமறிய செய்கிறாள் டிடுபா!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"selectable-text copyable-text x15bjb6t x1n2onr6\" dir=\"ltr\"\u003e\u003cspan class=\"selectable-text copyable-text xkrh14z\"\u003eமறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும், ஒரு பெண்குரல் இது!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"selectable-text copyable-text x15bjb6t x1n2onr6\" dir=\"ltr\"\u003e\u003cspan class=\"selectable-text copyable-text xkrh14z\"\u003eமேரிஸ் காண்டே எழுதிய இந்த நாவல், சாதி, பாலின, இன அரசியலின் நிறைவேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கும்!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"selectable-text copyable-text x15bjb6t x1n2onr6\" dir=\"ltr\"\u003e\u003cspan class=\"selectable-text copyable-text xkrh14z\"\u003eஇது ஒரு கதையல்ல… இது ஓர் எதிர்ப்பு!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":50402800632123,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/TITUBA_Front_2.jpg?v=1751285967"},{"product_id":"அந்த-நாளில்","title":"அந்த நாளில்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஇந்த எல்லா புகைப்படங்களுக்கும் முன்னால், நான் என் அன்றாட வாழ்க்கையில், என் அன்றாட யதார்த்தத்தில் இருக்கிறேன் என்பதை அறிவேன். ஆனால் அதுதான் நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eநான் ஒரு நாவலாசிரியர் அல்ல, என்னால் எதையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடியாது. என் கண்களுக்கு முன்னால் எது இருக்கிறதோ அதன் மீதுதான், எனக்கு ஆர்வம் உள்ளது. மிகக் கடினமான விஷயம், அதைப் பற்றிக்கொள்வதுதான். இந்தப் புகைப்படங்கள் எனக்கு மிகவும் மர்மமானவை அல்ல, ஆனால் அவை அனைத்தும் என்னை ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு, தூய்மையான உணர்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு தருணத்தையும்தான் நான் கண்டுபிடித்து நிறுத்திவைக்க முயல்கிறேன்…\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":50989421297979,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/Antha-Nalil---front-wrapper-Resized.jpg?v=1778232383"},{"product_id":"எதிர்மொழி","title":"எதிர்மொழி","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cb id=\"docs-internal-guid-86c14116-7fff-3a0a-8aae-cad1490d1e48\"\u003e\u003cspan\u003eமயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந்தையிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்தாள். உறுதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அல்லாமல் வேறு எதற்காக அவள் மயில்கொன்றையில் வந்து அமர்ந்திருப்பாள்?\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":50991639626043,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/Ethir-mozhi--Front-Wrapper.jpg?v=1771925529"},{"product_id":"கடந்து-வரும்-இளவேனிற்காலம்","title":"கடந்து வரும் இளவேனிற்காலம்","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cb id=\"docs-internal-guid-ab993507-7fff-5c57-baf4-874f61bc9a88\"\u003e\u003cspan\u003e1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவு குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள், குறிப்பாக ஒரு சிறுமியும் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டது பற்றிய ஒரு காஷ்மீர் முஸ்லிம் பெண்ணின் அரிதானதும் நேர்மையானதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":50992294822203,"sku":null,"price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/Kadanthu-Varum---Front-Wrapper.jpg?v=1771928738"},{"product_id":"கிழக்கில்-வெகு-தூரத்தில்","title":"கிழக்கில் வெகு தூரத்தில்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cb id=\"docs-internal-guid-6f7666d2-7fff-9d45-70b3-87101f8ddc93\"\u003e\u003cspan\u003eஇருபது வயதுடைய ரஷ்ய இளைஞனும், சுமார் நாற்பது வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண்ணும் உலகில் அதிக தூரம் (சுமார் 10,000 கி.மீ.) செல்லும் டிரான்சைபீரியன் ரயில் பயணத்தில் சந்திக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களுக்காக அந்த ரயிலில் ஏறிய அவர்கள் பயணத்தின்போது ஏற்படும் அவர்களது சந்திப்பு எத்தகையது - அந்தச் சந்திப்பின் இறுதியில் என்ன நடக்கிறது - என்பதை விவரிப்பதுதான் இக்குறுநாவலின் கதை. இடையிடையே ரஷ்யாவில் சோவியத் கட்டமைப்பு மறைந்த பின் நிகழும் அரசியல் - சமூக அவலங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. அத்துடன் ரஷ்யாவின் வியப்பூட்டும் புவியியல் அமைப்பும் சித்தரிக்கப்படுகின்றது. மலைகளும் காடுகளும் ஏரிகளும் நம் கண்முன் வந்துவந்து போகின்றன. மொத்தத்தில், ஒருசில நாட்களே நீடிக்கும் ஒரு மென்மையான உறவைத் தரிசிக்கவும், ஒரு பிரம்மாண்டமான அயல் நாட்டு நிலப்பரப்பைக் கற்பனையால் கண்டுகளிக்கவும், இம்மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":50992312582459,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/Kizhakil---Front-Wrapper.jpg?v=1771929308"},{"product_id":"வருடிச்-செல்லும்-வழித்தடங்கள்","title":"வருடிச் செல்லும் வழித்தடங்கள்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eபல சமயங்களில் நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நானோ இந்த உலகத்தை விட்டு வெகு திருப்தியாக நீங்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது அடையக்கூடிய காரியமா என்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஅது உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ச்சிகளால் தேக்கிவைக்க முடியாத வாழ்க்கையின் ஓர் அங்கம். வாழ்க்கை என்பது கண் முன்னாலே கடந்துசெல்கின்ற ஒன்று, அதை எடுத்துச்செல்வதற்கு எதுவும் இல்லை. வெறுமனே சாவுக்காகக் காத்திருப்பது போன்றது. வாழ்வில் காலம் என்ற ஒன்றே இல்லை. குழந்தைப் பருவம், பெண்மை, ஆண்மை, வயோதிகம், வாழ்வு, சாவு, காதல், காதல் அற்றமை, திருப்தி, திருப்தியற்றமை என எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும். தெளிவு, மடமை, இருத்தல், இல்லாமையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":50992317104443,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0789\/8778\/8603\/files\/Varudi-Sellum---Front-Wrapper.jpg?v=1771930217"}],"url":"https:\/\/thadagam.com\/collections\/translation.oembed?page=2","provider":"Thadagam","version":"1.0","type":"link"}