Description
தமிழறிஞர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ம.பொ.சிவஞானம், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம், டி.கே.சி. ரசிகமணி, ரா.பி.சேதுபிள்ளை, சுத்தானந்த பாரதியார், ச.சோ.சோமசுந்தர பாரதியார், கோவைக் கிழார் போன்றோரின் கட்டுரைகள் வெளியான தமிழ்த் தென்றல் இதழில், இராசேசுவரி தமிழில் எழுதிய அறிவியல் கட்டுரைகள் தனித்துவமாய் மிளிர்கின்றன.
சைவ ஆன்மீகப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்து உலக, உடல் இயக்கத்தை அறிவியல் வழியில் சமூக அறிவியல் கலை இலக்கியப் பின்புலத்தில் விளக்கினார். அக, புற நானூறுகளில் காதலையும் போரையும் விதந்தெழுதிய சங்கப் புலவர்கள் பாடாத, இவ்வுலகப் பொருட்களை ஒளியால் எழுப்பும் சூரியனே பெரியவன் என அறிவித்தார்.
பிற மொழிகளின் அறிவியல் சொற்களைத் தமிழாக்கத் தெரியாமல் மேதாவிகள் தவித்தபோது, சுமார் இருநூறு சொற்களைத் தமிழாக்கித் தனித்துவமாய் மிளிர்ந்தார். அன்றாட வாழ்வில் அறிவியலுக்கு முரணான ஆன்மீகத்தைக் கைக்கொண்டு முரண்பட்ட இரட்டை முகங்களோடு வாழ்வோர் உடலையும் உலகையும் விளங்கிக்கொள்ள இராசேசுவரியின் எழுத்துகள் துணைபுரிவதோடு கல்விப் புலத்தார் அனைவருக்குமான ஆய்வு முறையியலாக வழிகாட்டுகின்றன!
cmsmasters
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.