Description
ஆரிய ஸநாதந ஹிந்துமத படிநிலைச் சாதியமைப்பின் சிக்கலை விரிவாக விவாதிக்கும் போக்கை பிரித்தானியரின் நவீன அச்சுப் பண்பாடு விளைவித்தது. இதன் வழியாகக் கருத்துகள், தேவைகள், வரலாறு அடையாளம் போன்றவை வெளியிடப்பட்டன. ஒவ்வொரு ஜாதியினரும் மதத்தினரும் பொது ஊடகங்களைச் சார்ந்திருந்த அதே சமயம் தங்களுக்கெனச் சுயமாகவும் பத்திரிகைகளை வெளியிட்டனர். மகளிருக்கெனத் தனி இதழ்கள் வெளியாயின. இவற்றில் பலவும் அழிந்துவிட்டன; சொற்பமானவை முழுமையாகவும் செல்லரித்தும் தப்பிப் பிழைத்துள்ளன. இவற்றைக் கண்டெடுத்து மறுபதிப்பு செய்வது அவசியம். ஆதிதிராவிடர்களை மையப்படுத்தி அவர்களும் பிறரும் எழுதிய நூல்கள், கட்டுரைகள், கலை இலக்கியப் படைப்புகள் போன்றவற்றை ஆவணப்படுத்தும் போக்கு கடந்த இருபது ஆண்டுகளாக நிகழ்கின்றன.
படிநிலை ஜாதியக் கட்டமைப்பு நவீனமாக உருமாறிக்கொண்டிருந்த அக்கால நிகழ்வுப் போக்கோடு தங்களை இணைத்துக்கொண்டு அதற்கு ஆதரவாகவும் தங்கள் முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பனவற்றுக்கு எதிராகவும் கடிதம், விண்ணப்பம், அறிக்கை போன்ற வடிவங்களில் ஆதி திராவிடர்கள் அச்சு ஊடகங்களில் வினையாற்றியவை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட, திராவிட இயக்க அரசியல், ‘கோட்பாடு அடிப்படையில் முரண்பட்டவை அல்ல’. முந்தையதிலிருந்து பிந்தையது பரிணமித்ததால் அவை ஒன்றுக்குக்கொன்று இணக்கமாய் இயங்கின.
Reviews
There are no reviews yet.