
இதயமே கொடையானால்
₹260.00
இந்நாவலின் கதை பிரான்சு நாட்டில் நிகழ்கிறது. பிரான்சின் வடமேற்கு நகரருகே ஒரு விபத்து நடைபெறுகிறது. அதன் தொடர் நிகழ்வுகள் அந்நாட்டின் தலைநகர் பாரிசில் இடம்பெறுகின்றன. இடையிடையே ஏராளமான நகரங்களும், சிற்றூர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் பெயர்களைப் பிரஞ்சு மொழி உச்சரிப்பை ஒட்டியே தமிழில் கொடுத் திருக்கிறோம். இவையனைத்தும், பிரஞ்சுப் பண்பாட்டுச் சூழலை உணர்த்த உதவும் என்பதில் ஐயமில்லை.
இந்நாவலின் கதைக்கருவை ஓரிருவரிகளில் சொல்லிவிடலாம். ஆனால், முழு நாவலைப் படிக்கும்போதுதான், கதை மாந்தர்களாகிய பெற்றோர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆகியோர் வெளிப்படுத்தும் மனிதநேயத்தின் மேன்மையையும், அர்ப்பணிப்பின் ஆழத்தையும் புரிந்துகொள்ள இயலும். உறுப்புத் தானத்தின் மகத்துவமும் புரியவரும்.
மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மட்டும் உரித்தானதன்று. நாம் அனைவருக்குமே அது உரித்தானதுதான், ஏனெனில், நாம் அனைவருமே, தினம்தினம், ஏதோ ஒரு விதத்தில் அத்துறையோடு தொடர்புகொண்டிருக்கிறோம். ஆகையால், இந்நாவல் அத்துறையைப் புரிந்துகொள்ள மிகவும் பயன்படும் என்ற நம்பிக்கையோடு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம். அந்நோக்கம் நிறைவேறினால், அதுவே இந்த மொழி பெயர்ப்பின் வெற்றியாகும்.
Additional information
Publisher | Thadagam | தடாகம் |
---|---|
Author | Maylis de Kerangal | மைலிஸ் தெ கெராங்கால் |
Translator | S. R. Kichenamourty | எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி |
ISBN | 978-93-93361-01-1 |
Publication Year | 2022 |
Reviews
There are no reviews yet.