Description
ஆதிகாலம் தொடங்கி கருவிகள், உடை என மனித இனம் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளது. அவற்றில், மனித வாழ்வின் உயிராதார உற்பத்தியாக இருப்பது உழவு மட்டுமே. இந்தப் புரிதலை கால மாற்றத்தின் போக்கில் மனிதன் எங்கோ தவறவிட்டுவிட்டதன் விளைவே இன்று உலகெங்கும் உழவுத் தொழில் சந்தித்து நிற்கும் பெருஞ்சிக்கலின் ஆணிவேர்.
உலகெங்கிலும் நிலவும் இந்த உழவுச் சிக்கலில் இந்திய விவசாயத்தின் நிலையோ மிக மோசமாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கலின் விளைவாக உழவுத் தொழில் சந்தித்து நிற்கும் பெருஞ்சிக்கலை மிக நெருக்கமான கோணத்தில் இந்நூல் நம் முன் வைக்கிறது.
படித்த இளைஞர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்வது மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும், உழவுத் தொழிலைச் சுற்றியுள்ள பல நுட்பமான சிக்கல்கள் அனைத்தையும் இந்நூல் மிக விரிவாகவே அலசுகிறது.
Reviews
There are no reviews yet.