இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி, 1929ஆம் ஆண்டு வெளிவந்த "A Farewell "to Ams" என்ற நாவல், அந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவரது நாவல்களிலேயே இது தலையானதாகவும் விளங்கியது: அவரைப் புகழின் உச்சியில் நிறுத்தியது. இன்றும் மங்காப் புகழுடன் நீடித்து நிலைத்து நிற்கிறது. அவர் ஒரு வலிமையான அமெரிக்க எழுத்தாளர் என்ற இடத்தை உறுதி செய்தது.
அந்நாவல் 'போர்கொண்ட காதல்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
1914ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் நாள் தொடங்கி 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் நிறைவடைந்த மாபெரும் போர் என்று அழைக்கப்பட்ட முதலாம் உலகப் போரின் வரலாறு, நிலப்பரப்புகளை அடிப்படையாகக்கொண்டு A Farewell to Arms என்ற இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. இந்த நாவலின் நாயகன் ஃப்ரெட்ரிக் ஹென்றி நடந்து முடிந்த கதையைச் சொல்வதாக எழுதப்பட்டுள்ளது. 1916-18ஆம் ஆண்டு களுக்கிடையே நான்கு நிலப்பரப்புகளில் நடந்த போரின் நிகழ்வுகள் இந்தக் கதையின் தளங்களாக அமைகின்றன.
புத்தகத்தை இங்கே வாங்கலாம்.