வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. ஒரு சிந்தனையிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான புதிய சிந்தனைகள், வாசிப்பின் மூலமே வடிவெடுக்கின்றன. இந்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் பணியில், தடாகம் பதிப்பகம் தொடர்ந்து புதிய புத்தகங்களை உங்கள் முன் கொண்டு வந்துகொண்டு இருக்கிறது.
வரலாற்று நிகழ்வுகளை, நினைவுக் குறிப்புகளை, தன் வரலாற்றை பதிவு செய்யும் நூல்களாகவோ, செழுமையான உள்ளடக்கங்களை ஆராயும் படைப்புகளாகவோ, மொழிபெயர்ப்பு மூலம் உலக இலக்கியங்களை தமிழில் கொண்டுவரும் முயற்சியாகவோ, தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் எழுத்துக்களாகவோ – தடாகம் பதிப்பகம் தனது பதிப்புகள் மூலம் வாசிப்பை பலதரப்புகளில் வளர்த்து வருகிறது.
தடாகம் பதிப்பகம் வாசகர்களுடன் ஒரு நெருங்கிய உறவை கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம், வாசகர்கள் எந்த வகை புத்தகங்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். அத்துடன், புத்தகங்கள் குறித்தும் கலந்துரையாடல் கூட்டங்கள் குறித்தும் நூலக பயன்பாடு, வாசிப்பு அனுபவம் குறித்தும் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முயலுகிறோம்.
வாசிப்பு என்பது தனி அனுபவமல்ல – ஒரு சமூகத்தின் சிந்தனை பயணம். இந்த பயணத்தில் கலந்துரையாடல் என்பது ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. இந்த சிந்தனையில் உங்களையும் இணைத்துகொள்ள இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளுங்கள்.
கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்!
Click Here -https://forms.gle/17cg6HiGt42MoYFf8
என்றும் உங்களுடன்
தடாகம் பதிப்பகம்