புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தடாகம் பதிப்பகம் மேற்கொண்டு வரும் பல முயற்சிகளில் வினாடி–வினா போட்டி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அறிவுப் போட்டி, தமிழ் வாசகர்களிடையே புத்தகத்தின் மீது உள்ள உறவையும், அறிவுக்கான ஆழமான தேடலையும் வளர்க்கும் ஒரு அரிய முயற்சியாக அமைந்திருக்கிறது.
புத்தகங்கள் சார்ந்த தெளிவான தகவல்கள், சுவையான வினாக்கள், பொது அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வினாடி–வினா போட்டி, வாசிப்பை மேலும் இனிமையாக மாற்றும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இது சாதாரண போட்டி அல்ல; வாசிப்பு என்பது ஓர் அனுபவம், அது வாழ்வின் ஒரு பகுதியாக உருமாற வேண்டும் என்பதற்கான நினைவூட்டல்.
#பொது_இடங்களில்_புத்தகம்_வாசிப்போம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, தடாகம் இந்த வினாடி–வினா நிகழ்வை தொடங்கியது. நூலகம், பூங்கா, காபி ஷாப், மின்சார ரயில், பேருந்து, மெட்ரோ ரயில், கடற்கரை என எங்கு வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே இதன் பொருள். வாசிப்பின் மகிழ்ச்சியை பரப்புவதற்கும், சமூகத்தில் புத்தக வாசிப்பை ஒரு பழக்கமாக மாற்றுவதற்கும் இதுவொரு சிறந்த முயற்சி எனக் கருதுகிறோம்.
இப்போது, தடாகம் வினாடி–வினா 3 தயாராகியுள்ளது! இந்த அறிவுத் திருவிழாவில் நீங்களும் கலந்து கொள்ளலாம். புத்தகங்களை நேசிக்கும் உங்கள் உள்ளம், அறிவை பகிர விரும்பும் உங்கள் ஆர்வம் - இவை இரண்டும் சேரும் போது, வாசிப்பும் அறிவும் ஒன்றிணைந்து ஒரு சிந்தனையின் திருவிழாவாக மாறும். வாருங்கள்! பங்குபெறுங்கள், வெல்லுங்கள், புத்தகங்களுடன் நட்பு வளர்த்துக்கொள்ளுங்கள்! உங்களுக்காக சிறந்த நூல்களை வெளியிட்டு வரும் எங்களுடன் தொடர்பில் இருங்கள்!
போட்டியில் கலந்து கொண்டு 8 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் வாசகர்களுக்கு கூபன் கோட் (Coupon Code) வழங்கப்படும். அந்த கூபன் கோடை பயன்படுத்தி நம் தடாகம் புத்தகப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கும் புத்தகம் (ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களாகவும் இருக்கலாம்) ரூ.100 தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
போட்டியில் கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்!
Click Here https://forms.gle/wVzL9XKSz2v2Wevi6
என்றும் நட்புடன்,
தடாகம் பதிப்பகம்