மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த சூலப்புரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் சென்றாயப்பெருமாள். தமிழ்நாட்டின் ராஜா–ராணி ஆட்டம் எனும் நாட்டுப்புறக் கலைகளை தலைமுறை தலைமுறையாகச் செய்துவந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கிராமங்களுக்கிடையே அலைந்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு அருந்ததிய தலித் நாட்டுப்புற ஆட்டக்கலைஞனின் வாழ்க்கையை எந்தவித ஒப்பனையும் இல்லாமல் “...ன்னா செத்த பாம்புகூட கொத்த வருமாம் - ஒரு ஆட்டக்கலைஞனின் பயணம்” என்ற தனது நாவலில் விவரிக்கிறார் சென்றாயப்பெருமாள் அவர்கள்.
சிறுவயதில் கல்வியைத் தொடர முடியாமல் பள்ளியைவிட்டு விலகிய அவர், தனது கடுமையான உழைப்பாலும் உறுதியாலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக உயர்ந்தார். ஆனால் சமூக மற்றும் சாதி பாகுபாடுகள் அவரைத் துரத்தியது. “irregular teaching credentials” என்ற பொய்க்குற்றச்சாட்டில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை உயர்நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, பணி மீட்பு மற்றும் நிலுவை ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இருந்தபோதிலும் பல்கலைக்கழகம் அவ்வுத்தரவை நிறைவேற்ற மறுத்தது. சமூகத்தின் அடி ஆழத்திலேயே பதிந்திருக்கும் சாதியாதிக்கமும் பாகுபாடுகளும் எவ்வாறு ஒருவரின் உழைப்பையும் கனவுகளையும் தடுமாறச் செய்கின்றன என்பதைக் காட்டும் மிகுந்த வலிமை கொண்ட ஆவணப்படமாகவே தண்டிக்கப்படும் பேராசிரியர் உருவாகியுள்ளது.
French Institute of Pondicherry (IFP) எனும் நிறுவனத்தின் History of Tamil Documentaries தொடரின் மூன்றாவது நிகழ்வு, பேராசிரியர் டாக்டர் பி. சென்றாயப்பெருமாளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஆவணப்படத் திரையிடலாகவும் கலந்துரையாடலாகவும் அமைந்துள்ளது.
இது டாக்டர் சென்றாயப்பெருமாள் அவர்களின் தனிப்பட்ட கதை மட்டுமல்ல, நாட்டின் பல தலித் சமூகங்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் சமூகச் சான்றாகவும் திகழ்கிறது.
திரையிடலுக்குப் பின், எழுத்தாளர் சென்றாயப்பெருமாள் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள் ஹிமான்ஹு & ஆய்னா அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி ஒரு தனிப்பட்ட கதையைக் காட்டிலும், கல்வி, சமூக நீதி, சாதி பாகுபாடு, நாட்டுப்புறக் கலை, தலித் இலக்கியம் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஆழமான உரையாடலுக்கான மேடையாக அமைகிறது.
📅 தேதி: ஆகஸ்ட் 28
🕝 நேரம்: மாலை 2.30
📍 இடம்: Nehru Hall Conference Room, Pondicherry IFP
📞தொடர்புக்கு: kannan.m@ifpindia.org boopathiraj.s@ifpindia.org
📙 *புத்தகம் பெற*: 98400 70870