தடாகம் வெளியீடு
கொங்கு நாட்டு பாறை ஓவியங்கள்
கொங்கு நாட்டு பாறை ஓவியங்கள்
Couldn't load pickup availability
பாறை ஓவியங்கள், ஒரு சமூகத்தின் எண்ணங்கள், இயற்கைச் சூழல், நம்பிக்கைகள்,
சடங்குகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு முக்கியக் கூறாகும்.
குறிப்பாக, சமூகத்தின் விளிம்புநிலை மக்களைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள பாறை
ஓவியங்கள் முதன்மை ஆதாரமாக உள்ளன. பழங்குடி மக்களின் வாழ்வியலுடன் நேரடியாகத்
தொடர்புடைய பாறை ஓவி-யங்களில் காணப்படும் செய்திகளும், அதன் பின்னணி
கருத்துக்களும் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
பாறை ஓவியங்கள் குறித்து இதுவரை வெளிவந்த நூல்களில் அதிகம் பேசப்படாத பல்வேறு
புதிய அம்சங்களை இந்நூல் பதிவு செய்கிறது. குறிப்பாக, பாறை ஓவியங்களை வரையப்
பயன்படுத்திய பொருட்கள், வரையப்பட்ட ஓவியங்களின் வகைகள், பாறைகளின் இயற்கை
தன்மைகள் ஆகியவை தெளிவாக. துல்லியமாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,
பாறை ஓவியங்களை ஓர் உயிருள்ள சமூக ஆவணமாக வாசகர் உணர முடியும்.
Share


