தடாகம் வெளியீடு
கிழக்கில் வெகு தூரத்தில்
கிழக்கில் வெகு தூரத்தில்
Couldn't load pickup availability
இருபது வயதுடைய ரஷ்ய இளைஞனும், சுமார் நாற்பது வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண்ணும் உலகில் அதிக தூரம் (சுமார் 10,000 கி.மீ.) செல்லும் டிரான்சைபீரியன் ரயில் பயணத்தில் சந்திக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களுக்காக அந்த ரயிலில் ஏறிய அவர்கள் பயணத்தின்போது ஏற்படும் அவர்களது சந்திப்பு எத்தகையது - அந்தச் சந்திப்பின் இறுதியில் என்ன நடக்கிறது - என்பதை விவரிப்பதுதான் இக்குறுநாவலின் கதை. இடையிடையே ரஷ்யாவில் சோவியத் கட்டமைப்பு மறைந்த பின் நிகழும் அரசியல் - சமூக அவலங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. அத்துடன் ரஷ்யாவின் வியப்பூட்டும் புவியியல் அமைப்பும் சித்தரிக்கப்படுகின்றது. மலைகளும் காடுகளும் ஏரிகளும் நம் கண்முன் வந்துவந்து போகின்றன. மொத்தத்தில், ஒருசில நாட்களே நீடிக்கும் ஒரு மென்மையான உறவைத் தரிசிக்கவும், ஒரு பிரம்மாண்டமான அயல் நாட்டு நிலப்பரப்பைக் கற்பனையால் கண்டுகளிக்கவும், இம்மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
புத்தகம் பற்றி
- ஏழுத்தாளர்:
- மைலிஸ் தெ கெராங்கால்
- பதிப்பு:
- ஜனவரி 2026
Share
