தடாகம் வெளியீடு
தந்தையர்களும் தனயர்களும்
தந்தையர்களும் தனயர்களும்
Couldn't load pickup availability
இந்த நாவலின் முக்கியமான கதாபாத்திரம் கோர். தந்தை ஜீவன் காணாமல் போனது பற்றிக் கேள்விப்பட்டதால், ரஷ்யப் பயணத்தைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு, ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் உள்ள தனது வீட்டிற்கு கோர் திரும்பி வருகிறான். அதே நேரத்தில் கோரின் வீட்டிற்கு ஜார்ஜியாவில் உள்ள திபிலிசி என்ற நகரிலிருந்து இன்னொருவனும் வந்து சேர்கிறான். அவன் பெயர் குரோபோ. அவன் யார் என்று யாருக்குமே தெரியவில்லை. கோரின் தந்தையான நாடோடி இசைக் கலைஞன் ஜீவனுக்கு, திபிலிசியில் ஏற்பட்ட இன்னொரு உறவின் மூலம் குரோபோ பிறந்திருக்கிறான். இரண்டு சகோதரர்களும், கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள். நேர் எதிரான குணநலன்களைக் கொண்டவர்கள்.
காணாமல் போன ஜீவனுக்கு நடந்தது என்ன? இந்தப் படைப்பு கிட்டத்தட்ட ஒரு மர்ம நாவல் போல் விரிகிறது. இறுதியில் இரண்டு சகோதரர்களும் பிரிந்து செல்கின்றனர். அவர்கள் மீண்டும் சந்திப்பார்களா..?