தடாகம் வெளியீடு
அல்ஜியர்ஸ்: எதிர்ப்பின் தலைநகரம்:எலெய்ன் மோஹ்டெஃபி
அல்ஜியர்ஸ்: எதிர்ப்பின் தலைநகரம்:எலெய்ன் மோஹ்டெஃபி
'அல்ஜியர்ஸ்: எதிர்ப்பின் தலைநகரம்' நூலின் ஆசிரியரான எலெய்ன் மோஹ்டெஃபி, 1960களில் அப்பொழுதுதான் விடுதலை அடைந்திருந்த ரூல்ஜீரியாவும், மற்ற ஆப்பிரிக்க நாடுகளும், உலகத்தில் இன்னும் விடுதலை அடையாமலிருந்த பிற நாடுகள் காலனிய நுகத்தடியைத் தூக்கியெறிவதற்கு உதவியது தொடங்கி, அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த கறுப்புச் சிறுத்தைகள் அமைப்பிற்கு நாடுகடந்த புரட்சிகரத் தளமொன்றை நிறுவுவதற்கு உதவியது வரையிலான தனது நினைவுகளை இந்நூலில் வழங்குகிறார்.
வாழ்க்கை கிளர்ச்சியூட்டுவதாகவும் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்ததாகவும் இருந்தது,' என்று மோஹ்டெஃபி எழுதுகிறார் - 'ஜன்னலினூடாகப் பார்த்தபடி, சிறகுகளை அடித்துக்கொண்டிருக்கும் ஓர் ஈயாக நான் இருந்தேன்'. ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் தொடர்பாளராகவுமிருந்த அவரது அனுபவங்கள் அவரை நியூயார்க்கிலிருந்து பாரிஸுக்கும் அல்ஜீரியாவுக்கும் ஆப்பிரிக்காவின் வேறுசில நாடுகளுக்கும் இட்டுச்சென்றன.