தடாகம் வெளியீடு
ஆன்டன் செக்காவ் அகச் சிறந்த கதைகள்
ஆன்டன் செக்காவ் அகச் சிறந்த கதைகள்
தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் கொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே,
"நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடு. இதனை நான் வைத்துக் கொள்ளமுடியாது" என வழக்கறிஞர் கூறினார்.
"ஏன் ? என்ன காரணம் ?" எனப் பதறினார் மருத்துவர்.
"எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?" என்று கேட்டார்.
"இல்லை. இல்லை தை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசை வைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்." என்று வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.
"மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை.." என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.
நண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்கீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர். மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.
"இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்ல விட்டிருந்தால்அவமானம்தான் ஆனால் இதை இங்கேவைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்து விடுவது நான் உத்தமம். ஆமாம். இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம் எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இது போன்ற பொருட்கள் பிடிக்கும்.." எனமுடிவு செய்தார் வழக்கறிஞர்.
உடனடியாக அங்குப் புறப்பட்டு சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்த சொத்துவிக்குத் தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப்பாக அன்று மாலை அளிக்கப்பட்டது.