தடாகம் வெளியீடு
அறிவியல் கலைஞர் ராசேசுவரி 1906
அறிவியல் கலைஞர் ராசேசுவரி 1906
ஈ.த. இராசேசுவரியம்மையார் விஞ்ஞானத்தில் 1928ஆம் ஆண்டு பி.ஏ. தேர்விலும் 1931ஆம் ஆண்டு எம்.ஏ. தேர்விலும் சென்னை மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். 1932ஆம் ஆண்டு போதனா முறையில் புலமைப் பட்டம் பெற்றார். இவர் பள்ளி, கல்லூரி கல்வியைக் கற்ற நிலையங்களை அறிய இயலவில்லை. இவருடைய தந்தை தணிகாசல முதலியார் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருந்ததால் சென்னை அல்லது அருகாமைப் பகுதியில் அவர்கள் வசித்திருக்கலாம்; இராசேசு வரியும் சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருக்கலாம் எனக் கருதலாம். இராசேசுவரியம்மை மகளிர் ஆசிரியர் தொழிற் பயிற்சிக்கான சென்னை வெலிங்கடன் சீமாட்டி கல்லூரிப் பெளதிக கலைப் பேராசிரியையாகப் பணியாற்றினார். இவர் பணியில் சேர்ந்த வருடம், குடும்ப வாழ்வு உட்பட பிற தகவல்களைத் திரட்ட இயலவில்லை. இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளே இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.