தடாகம் வெளியீடு
ஃபாசிசத்தின் இலக்கணம் : நாம் - அவர்கள்
ஃபாசிசத்தின் இலக்கணம் : நாம் - அவர்கள்
ஊடுருவும் ஆற்றல்கொண்ட ஃபாசிசத் தந்திரங்கள் உலகெங்கும் எழுச்சிபெற்று வருகின்றன.அவற்றை ஒருங்கிணைக்கும் கட்டமைப்புகளான பத்துத் தூண்களைக் குறித்து இந்நூலாசிரியரும்,புகழ்பெற்ற மெய்யியலாளரும்,பரப்புரை குறித்த ஆய்வறிஞருமான ஜேசன் ஸ்டான்லி இந்நூலில் தனது கவனத்தை குவிக்கிறார்.மக்களை “நாம்” மற்றும் “அவர்கள்” என்று பிரித்தாளும் மொழியையும்,நம்பிக்கையையும் சரியாகத் திட்டமிட்டு,பத்துத் தலைப்புகளில் ஒழுங்குப்படுத்திப் பகுப்பாய்வு செய்கிறார்.
சமகால ஹங்கேரி,போலந்து,இந்திய,மியான்மர் மற்றும் அமெரிக்கவில் நிகழ்ந்த சம்பவங்களோடு வரலாறு,மெய்யியல்,சமூகவியல் மற்றும் விமர்சனப்பூர்வமான இனவியல் கோட்பாடு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி ஆழ்ந்த கருத்துகளை இந்நூல் ஒன்றிணைக்கிறது.படிப்படியாகப் பெருகிவரும் ஃபாசிசத் தந்திரங்களின் தாக்கங்களைக் குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று இந்நூல் எச்சரிக்கிறது.