தடாகம் வெளியீடு
...ன்னா செத்தபாம்புகூட கொத்த வருமாம் ஒரு ஆட்டக்கலைஞனின் பயணம்:பெ. சென்றாயப்பெருமாள்
...ன்னா செத்தபாம்புகூட கொத்த வருமாம் ஒரு ஆட்டக்கலைஞனின் பயணம்:பெ. சென்றாயப்பெருமாள்
Couldn't load pickup availability
ஒரு அருந்ததிய தலித் நாட்டுப்புற ஆட்டக்கலைஞனின் வாழ்க்கை வரலாறு இது. அவர் எழுதிய மூலப் பிரதியின் பதிப்பு இது. இதன் முந்தைய வடிவம் ‘ஒரு ஆட்டக்கலைஞனின் பயணம்’ (காலச்சுவடு, 2019). மூலப் பிரதியின் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் வட்டார வழக்கும் கலந்த நடை அப்படியே முன்வைக்கப்பட்டுள்ளது. மிகக் குறிப்பான வட்டாரவழக்குச் சொற்களுக்கும் தெலுங்குச் சொற்றொடர்களுக்கும் விளக்கம் தரப்படவில்லை. எந்த ஒரு பிரதியும் வாசகனுக்கு மொழி குறித்த ஒரு தேடலுக்கான ஆரம்பமாக அமையவேண்டும். தலித் இலக்கியமும் வட்டாரவழக்கு இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.
செத்தபாம்புகூட கொத்த துடிக்கும் அடிமட்ட நிலையில் கிராமங்களுக்கிடையே அலைந்து பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் கலைசார்ந்த வாழ்க்கையை எந்தவித ஒப்பனையும் இல்லாமல் விவரிக்கும் தலித் படைப்பு இது.
Share


