தடாகம் வெளியீடு
இதயமே கொடையானால்
இதயமே கொடையானால்
இருந்தார்கள். தூய்மைபடுத்தப்பட்ட துணியைச் சன்னல்கள் போல் வைத்து மார்புப் பகுதியிலும் அடி வயிற்றிலும் மூடியிருந்தார்கள்.தொடங்க ஆரம்பித்தார்கள். அறுவைச் சிகிச்சை அறையிலிருந்த முதல் குழு, சிறுநீரக மருத்துவர்கள் குழு. அவர்கள்தான் முதலில் உடலைத் திறப்பார்கள்; அவர்கள்தான் கடைசியில் அதனை மூடுவார்கள். லாரல்-ஹார்டி போல் இருவர். மெலிந்த, உயரமான ஒருவர்: அவர்தான் அறுவைச் சிகிச்சை நிபுணர். குட்டையாக, குண்டாக இருந்தவர் உள்ளுறை பயிற்சி மருத்துவர். முன்னவர்தான் குனிந்து அடிவயிற்றில் சிலுவைபோல் ஒரு கீறல் போட்டார் –அதாவது ‘பை லேட்டரல்லேப்பராட்டமி’ (bilateral laparotomy) செய்தார். இடைத்திரை சவ்வை ஒட்டி உடல் இரண்டு பாகமாகப் பிரிக்கப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கல்லீரலும் சிறுநீரகமும், அதற்கு மேல்பகுதியில் நுரையீரலும், இதயமும் இருந்தன. அதன் பின், கிழிவை அகலப்படுத்த, அதற்கான கருவி யைப் பயன்படுத்துவதோடல்லாமல் கைப்பக்குவத்தையும் பயன்
படுத்துகின்றனர். கைப்பக்குவத்தின் முக்கியத்தை அப்போதுதான் உணர முடிகிறது. அங்குள்ள சூழலுக்கு உடல் பிரயாசையும் தேவைப்பட்டது தெளிவாகியது. உடலின் உள்ளே கசிந்துகொண்டிருந்த இரத்தம் சங்கடத்தை ஏற்படுத்தியது. விளக்கின் ஒளியில் அனைத்துமே சிவப்பாகத் தெரிந்தது.
மருத்துவர்கள் தங்களுக்கு வேண்டிய உறுப்பை எடுப்பதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உறுப்புகளை அவற்றோடு ஒட்டியிருப்பதிலிருந்து பிரிப்பதற்கான கத்தி சரியாகவும், தடங்கலில்லா மலும் வேலை செய்ய வேண்டும். இதுவரை எதையும் வெட்டி எடுக்கவில்லை. சிறுநீரக மருத்துவர்கள் உடலின் இருபக்கமும் நின்றுகொண்டிருந்தனர். மூத்த மருத்துவர் தன் மாணவன் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தார். சிறு நீரகங்கள் மீது தலை குனிந்துகொண்டு, தன்னுடைய செயல் திட்டத்தை ஒவ்வொரு பகுதியாக விளக்கினார். மாணவன் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டான். சில சமயம் கேள்விகள் கேட்டான்.
Blurb Description : அவ்விரு பேராசிரியர்களும் சொன்ன தகவல் மெல்ல வெடிக்கும் ஒரு வெடிகுண்டுபோல் அவரை உலுக்கியது. அதாவது, இதய இயக்கம் நிற்பது மரணத்தின் அறிகுறியன்று. மூளையின் செயல்பாடுகள் நிற்பதுதான் மரணத்தின் அறிகுறி. வேறுவிதமாகச் சொல்வதானால், 'நான் சிந்திக்க முடியாமல் போனால், நான் இறந்துவிட்டேன்,' என்று பொருள். இதயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, அதனைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்டு, மூளைக்கு முடிசூட்டும் விழா நடந்தது. குறியீட்டளவில், அது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு - ஒரு புரட்சி.