தடாகம் வெளியீடு
காஃப்கா: இறுதி நாட்கள்:லொரா(ன்) செக்சிக்
காஃப்கா: இறுதி நாட்கள்:லொரா(ன்) செக்சிக்
லொரா(ன்) செக்சிக்கின் இந்த நூல் மாபெரும் ஜெர்மன் எழுத்தாளர்களில் ஒருவரான காஃப்காவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை நாவலாகக் காட்சிப்படுத்துகிறது.
1883 ஜூலை 3ஆம் தேதி பிறந்து, 1924 ஜூன் 3ஆம் தேதி மறைந்த காஃப்கா, 20ஆம் நூற்றாண்டு மேற்கத்திய இலக்கியத்தில் மிகப் பெரிய ஆளுமையாக அனைவராலும் போற்றப்பட்டவர். கடுமையான காச நோயால் மறைந்த காஃப்கா இலக்கியத்தில் மட்டுமன்றி, அவரைச் சுற்றியிருந்தவர்களின் மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அவர்களில் முக்கியமானவர்கள் மூவர்.
ராபர்ட் – இவர் ஒரு மருத்துவ மாணவர். இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர். உடல்நலம் பாதித்திருந்த இவர் காஃப்காவைச் சந்தித்தது ஒரு சானடொரியத்தில். இருவருக் குள்ளும் ஓர் ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது. காஃப்கா இறக்கும்வரை அவருடன் இணைபிரியாமல் இருந்து பணிவிடைகள் செய்திருக் கிறார்.
ஓட்லா – காஃப்காவின் மூன்று சகோதரிகளில் இவள்தான் இளையவள். தன் சகோதரனின் மீது அவள் கொண்டிருந்த பாசம் அளவில்லாதது, ஆதர்சமானது.
டோரா – காஃப்காவின் காதலி. காஃப்கா அவளை முறைப்
படித் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனாலும், அவளே அவருடைய துணைவியாகக் கருதப்படுகிறாள்.
தன் மரணத்திற்குப் பின்னும் காஃப்கா இவர்களது வாழ்க் கையில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நாவல்.
இந்நாவலின் வரலாற்றுப் பின்புலம் குறிப்பிடத்தக்க
வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதை நிகழும் காலம்
20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி. ஒரு புறம் நாஜிசமும், மற்றொரு புறம் பொதுவுடைமைத் தத்துவமும் தனிமனித உரிமைகளுக்குச் சவாலாக அமைகின்றன.
துயர நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. அவை காஃப்காவின் மறைவுக்குப் பின்னால் நிகழ்ந்தாலும், அவற்றையெல்லாம் தன் படைப்புகளில் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தி இருப்பதுதான் காஃப்காவின் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.