தடாகம் வெளியீடு
கலக்கல்
கலக்கல்
குளத்தைக் கலக்கும்போதுதானே சேற்றில் புதைந்துகிடக்கும் முத்துக்களும் உயர் ரக மீன்களும் கைக்குக் கிடைக்கின்றன! அவ்வாறே அநீத சமூகக் குளம் கலக்கப்படும் போதுதான் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வரும். அவைகள்தான் மக்களை விழித்தெழச் செய்யும். அந்த விழிப்புணர்வுதான் விடுதலைக்கு வித்திடும். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த ஏட்டிற்குக் 'கலக்கல்' என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கலக்கல் பணியைச் செய்கிறவர்கள் இறைவாக்கினர்களாக இருந்திருக்கிறார்கள். சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் சமூக விடுதலையைத் தேடுபவர்களும் தானே இப்பணியைச் செய்ய முடியும். அப்பணியின் சிறு முயற்சியாக இந்த ஏடு எழுதப்பட்டுள்ளது. தலித்மக்கள், குறிப்பாக தலித் பெண்கள், சமூக, சமய சுழற்சியில் மீண்டும் சிக்கிக்கொள்ளாமல் விடுதலை வாழ்வு பெறவேண்டுமென்னும் ஆவலோடு என் அனுபவங்களை எழுத்தாக வடித்துள்ளேன்.