தடாகம் வெளியீடு
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்
சென்னையின் ஒரு பள்ளியில் சிறுமிக்கு நத்தையை வரைந்து வருதல் வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்படுகிறது. நத்தையை நேரில் கண்டறியாத குழந்தை தன் அம்மாவிடம் நத்தையை வரைந்து தருமாறு சொல்கிறது. அவளின் அம்மாவும் நத்தையை நேரில் கண்டறியாதவள் ஆகையால் தனமனதில் உள்ளவாறு வரைகிறாள். அதைப்பார்த்த சிறுமியின் தந்தை வரையப்பட்ட நத்தை நத்தை போலல்லாமல் சங்குசக்கரம் போல் உள்ளதெனக் கூற சிறுமியின் அம்மா தான் நத்தையை நேரில் பார்த்தறியாததைக் கூற சிறுமி நத்தையை நேரில் பாரக்க ஆசைப்படுகிறார். தன் சிறுவயதில் தன் கிராமத்தில் நத்தைகளை மிகுதியாக இருந்ததையும் நத்தைகளை சமைத்து உண்பது தங்கள் உணவுப்பழக்கமாக இருந்துள்ளதையும் நினைவுகூர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் கிராமத்து விளிம்புநிலை மக்களுடனான வாழ்வை மிக யதார்த்தமாக இருந்தது இருந்தபடி அவர்களின் வாழ்வியற்கூறுகளை மிக அழகாக மக்களின் வட்டார மொழியில் விவரித்து நாவலுக்குள் நம்மை கட்டிக்கூட்டிச் செல்கிறார்.
இக்கதையில் இடம்பெற்றிருக்கின்ற சம்பவங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று அது வேறு வடிவம் பெற்று இருக்கிறது. இந்த வடிவ மாற்றத்தை தலித்துக்கள் தற்காலிக விடுதலைக்கான வழியாக நம்பி இருக்கின்றனர்.