தடாகம் வெளியீடு
ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்
ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்
ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்
மனிதன் வாழ்வு, இறப்பு மூலமாக இவ்வுலகில் பெறும் வளர்ச்சி பற்றியும் பேசுதற்கரிய பிரம்மத்தில் அவன் விதி இறுதி அடைவதைப் பற்றியும் அவை விரிவாக விளக்குகினறன. உபநிடதங்கள் பற்றி இத்தகைய பாராட்டுகள் குவிக்கப் பட்டிருந் தாலும் அவற்றை ஆழ்ந்து நோக்குவார் வேறு முடிவுகள் எடுக்க நேரும். வேதங்களினின்றும் அவை மாறுபடவில்லையென்று கூறும் சர்மாவே "உபநிடதங்கள் ஒரு கீழ்த்தரமான வேள்விச் சமயத்தை (Aratherlowtype of sacrificial religion) எக்காலத்திற்கும் பொதுவான ஓர் அரிய மெய்யுணர்வுச் சமயமாக (A great mystical religion) மாற்றும் பெரிய பணியில் ஈடுபட்டன" என்று கூறுவார் (சர்மா 2). ஆனால் வேள்விச் சமயத்தையும் வேள்வியையும் புகழ்ந்து பாடும் இடங்கள் உபநிடதங்களில் உண்டு. சுவேதாஸ்வதர உபநிஷதம்,
எல்லாக் கடவுளரும் வாழும் மிகவுயர்வான, மாறுபாடு அடையாத விண் ணுலகில் இருக்கு வேதமும் உள்ளது. அவனை அறியாதவன் இருக்கு வேதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வான்? இதைத் தெரிந்தவர்களே அமரத்துவம் அடைவார்கள். இப்பொருளிலிருந்துதான் படைத்தவன் வேதங்களையும் வேள்விகளையும் சடங்குகளையும் இருந்ததையும் இருப்பதையும் வேதங்கள் சொல்வதையும் வெளிப்படுத்துகிறான். (சர்மா 258)
என்று தெளிவில்லாமல் பேசும்.
பிருகதாரண்யக உபநிஷதம் வேள்விக்குதிரையே எல்லாமென்று பாராட்டுவதையும் காணலாம்:
விடியலே வேள்விக்குதிரையின் தலை : கதிரவன் அதன் கண்; காற்று அதன்மூச்சு: தீ அதன் திறந்த வாய் வருடம் அதன் உடல வான் அதன் முதுகு, இடைப்பட்ட உலகம் அதன் வயிறு பூவுலகம் அதன் குளம்பு ; நான்கு பகுதிகள் அதன் பக்கங்கள். இடைப்பட்ட பகுதிகள் அதன் விலா எலும்புகள் பருவங்கள் அதன் உறுப்புகள் மாதங்களும் அரை மாதங்களும் அதன் மூட்டுகள்; பகல்களும் இரவுகளும் அதன் பாதங்கள் : விண்மீன்கள் அதன் எலும்புகள்: மேகங்கள் அதன் சதை மணல்கள் அதன் பாதி செரித்த உணவு : ஆறுகள் அதன் குருதி நாளங்கள் மலைகள் அதன் சாற்குரையும் நுரையீரலும், செடிகளும் மரங்களும் அதன் மயிர் உதிக்கும் கதிரவன் அதன் முன்பகுதி மறையும் கதிரவன் அதன் பின்பகுதி, மின்னல் அதன் கொட்டாவி, இடி அதன் அசைவு, மழை அதன் சிறுநீர்; பேச்சு அதன் கணைப்பு -சர்மா 182)
வேள்விக்குதிரை இவ்வாறெல்லாம் பொருளற்ற முறையில் புகழப்படுவதற்குச் சமாதானம் கூற முனையும் அரவிந்தர் அங்கு அது குறியீட்டுப் பொருளாக அண்டத்தைக் குறிக்கும என்பார்.