தடாகம் வெளியீடு
பாதரவே:அபிமானி
பாதரவே:அபிமானி
கிராமங்களில், படிப்பறிவற்றவர்களை ‘மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க மாட்டாான்’ என்று வக்கணையாகச் சொல்வதுண்டு. இந்நாவலில் வரும் கிராமத்து தலித்து களுக்குப் படிப்பறிவு இல்லையென்றாலும், இரவுகளில் பள்ளிக்கூடத்தில் வந்து படுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் குடிசை களின் சிரம வாசம் இரவுகளில் அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைக்கிறது. அவர்களின் ஏழ்மையையும், சாதியத் தீண்டாமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரம் செலுத்தும் அந்தப் பள்ளிக்கூட வாட்ச்மேனின் அடாவடித்தனத்தை அமபலப்படுத்துகிறது இந்நாவல்.
சாதி ஒரு மனநோய் என்று புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னாலும், அது சில ஆதிக்க சாதியினருக்கு அவர்களின் அதிகாரத்திற்கான ஆயுதம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் அவர்கள் சாதி ஒழியக் கூடாது, சனாதனம் அழியக் கூடாது என்று மல்லுக்கு நிற்கிறார்கள்.