Skip to product information
1 of 3

தடாகம் வெளியீடு

பெண் மருத்துவர்கள்:கவிதாராவ்

பெண் மருத்துவர்கள்:கவிதாராவ்

Regular price Rs. 400.00
Regular price Sale price Rs. 400.00
Sale Sold out
Shipping calculated at checkout.

தங்களைப் போலவே மற்ற பெண்களும் கல்வி பயில வேண்டும் என்பதில் அதீத விருப்பம் உடையவர்களாக இருவரும் இருந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு வழிகளில் இதற்காக முயற்சி செய்தனர். ரமாபாய் உக்கிரமானவர், சமரசம் செய்து கொள்ளாதவர், வெளிப்படையாகப் பேசுபவர். ஆனந்திபாயோ அதிகம் பேசாதவர், கவனத்துடன் அளவாகச் செயல்படுபவர். தனது சமூகத்தினர் புண்படாத வகையில் நடந்து கொள்பவர். ரமாபாய் பெண்களுக்கான பள்ளியை உருவாக்குவதற்காக ஒரு சங்கத்தை உருவாக்கினார். அதன் பிறகு அதற்குக் கிளைகளை அமைப்பதற்காக ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். பெண்கள் மருத்துவக்கல்வி பயில்வதை வலுவுடன் இவர் ஆதரித்தார். உண்மையில், இவரும் மருத்துவராகவே ஆக விரும்பினார். செவித்திறனில் குறைபாடு இருந்ததால், இங்கிலாந்தில் மருத்துவக் கல்வி பயில அவர் நிராகரிக்கப்பட்டார். அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பேராசிரியாகப் பெரும்பாலான உயர்தர பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களில் இவர் பணியாற்றினார். அவற்றில் செல்டன்ஹாம் பெண்கள் கல்லூரியும் அடங்கும். மிக முக்கியமாக, ஆடவர்களின் உதவி எதுவுமில்லாமல் இவை அனைத்தையும் அவர் நிறைவேற்றியிருந்தார். அந்தக் காலத்தில் ஒரு இந்துப் பெண் செய்திருக்கக்கூடிய அசாதாரணமான காரியம் இதுவாகும்.

ரமாபாய் அன்புடன் வரவேற்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை – அவர் மேற்கத்திய சமயப் பிரச்சார அமைப்புகளால் பெரிதும் போற்றப்பட்டார். அவருடைய அழகை அவர்கள் பெரிதும் போற்றிப் புகழ்ந்தார்கள், அவருடைய பெரிய கண்களின் கூர்மையான இயல்புகள் கல்வி, மேடைப் பேச்சில் அவரது மேதமை ஆகியவையும் பாராட்டப்பட்டன. ரமாபாய் வியக்கத்தக்க வகையில் அழகாக இருந்தார் என்று, மன்னிக்க இயலாத அளவிற்கு இனவெறி கொண்டிருந்த கரோலின் வெல்ஸ் ஹீலிடால் உற்சாகத்துடன் கூறினார். அவர் இந்து என்று தெரிவிப்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. ரமாபாயின் பெற்றோர்வழி மரபு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹீலி டால் பேரார்வத்துடன் விரும்பினார். ‘ஆனந்திபாயை மிகவும் நெருக்கமாக அணுகி இரத்தக்கலப்பு ஏதும் இருக்குமோ என்று தெரிந்துகொள்வதற்காகக் குறுக்குக் கேள்விகளைக் கேட்டேன். மராத்திய ரத்தமும் காஷ்மீரி ரத்தமும் ரமாபாய் மரபில் அடிக்கடி கலந்து வந்திருக்கின்றன என்று ஆனந்திபாய் தெரிவித்தார்.

 

View full details