தடாகம் வெளியீடு
பியானோ
பியானோ
நம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளூம் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். யதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. யதார்த்தமும் புனைவும், அவதானிப்பும் விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பொரும்பாலான்வை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்டமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுலகம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த, பிடிபடாப் பிரேதசங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.
- சி. மோகன், முன்னுரையிலிருந்து...