தடாகம் வெளியீடு
தமிழகத்தின் மருத்துவ தாவரங்களை பயிரிடுதல்
தமிழகத்தின் மருத்துவ தாவரங்களை பயிரிடுதல்
தமிழகத்தில் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா,சித்தா போன்ற மருத்துவ கல்வி முடித்து மருத்துவர்களாக பணியாற்றுவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகின்றது.
இந்தியாவிலும்,பிற நாடுகளிலும்,இந்திய மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும்,இந்திய மருத்துவ தாவரங்களின் நன்மைகளை பற்றியும், முன்பை விட அதிக மக்கள் புரிந்துக் கொண்டு இந்த மருந்துகளை நாடுகின்றார்கள், இதனால் இந்த மருந்துகளின் தேவை அதிகரிப்பதுடன், அதில் பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களின் தேவையும் அதிகரிக்கின்றது. மருந்துகளின் விலை கூடுவதுடன் தரமான மூலிகை பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது.
இந்தாண்டு இதுவரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சராசரிக்கு சற்று அதிகமாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மருந்து தாவரங்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு அவரகளுக்கு வழிகாட்டும் பொருட்டு 25 ஆண்டுகள் அனுபவத்தில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.