தடாகம் வெளியீடு
தனித்திருக்கும் தீவுக் கூட்டம்
தனித்திருக்கும் தீவுக் கூட்டம்
நோக்கமின்றி அலைந்துகொண்டிருந்த இளைஞன் ஹரிஷ், அந்தமான் தீவுகளின் வெப்பமண்டலக் காடுகளில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் தொல்குடி மாந்தர்களான ஜாரவாக்களை எதிர்பாராமல் பார்க்க நேரிடுகிறது. ஓரிடத்தில் நிலைத்து வாழ வேண்டிய தேவையை அவன் உணர்கிறான். ஜாரவாக்களின் வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தனையும் மெதுமெதுவாக ஆனால் நிச்சயமாக அழிக்கப்பட்டு வருவதைக் கண்டு கொள்கிறான், அந்த மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், அவர்களுக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்றும் ஹரிஷ் கருதுகிறான். அந்தமான் தீவிலேயே பிறந்து வளர்ந்த சீமாவும், ஹரிஷுடன் சேர்ந்து கொள்கிறாள். ஹரிஷின் மீது அவளுக்கு ஈர்ப்பு, உருவாகிறது. ஒன்றுக்கொன்று இணையாகச் சென்று கொண்டிருந்த இருவரின் பயணமும் ஒருங்கு கூட இருந்த போது, இன்னதென்று தெரியாத ஒரு போட்டியாளன் உள்ளே புகுந்து விடுகிறான். இந்தப் புதினம் இழந்துவிட்ட அன்பின் கதை, அதோடு கூடவே, காலத்தின் கூரிய விளிம்பிலும், வரலாற்றின் முள் முனையிலும் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு பண்பாட்டின், ஒரு சமூகத்தின் கதை, உயிரின வாழ்க்கைச் சூழலின் கதையும் கூட.